ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 20–2–19

19 பிப்ரவரி 2019, 03:45 PM

10 டியூன்­க­ளை­யும் ஞாப­கப்­ப­டுத்தி பாடி­னேன்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஒரு தொகுப்­பில் இளை­ய­ராஜா, ஜி.கே.வி.யிடம் பெற்ற அனு­ப­வத்தை சொன்­னவை…

‘‘ஜி.கே.வி.யிடம் உத­வி­யா­ள­ராக தன்­ராஜ் மாஸ்­ட­ரின் அறி­மு­கத்­தால் சேர முடிந்­தது. தன்­ராஜ் மாஸ்­ட­ரி­டம் அனு­ம­தி­யும் ஆசீர்­வா­த­மும் வாங்­கிக்­கொண்டு கிளம்­பி­னேன். முதன் முறை­யாக ஆழ்­வார்­பேட்­டை­யில் உள்ள ஒரு படக்­கம்­பெ­னிக்கு என்னை அழைத்­துச் சென்­றார்­கள். அங்கே ஜி.கே.வி., தபேலா கன்­னையா, படத்­த­யா­ரிப்­பா­ள­ரும், டைரக்­ட­ரு­மான பக­வான் துரை ஆகி­யோர் இருந்­த­னர். ராஜ்­கு­மார் நடிக்­கும் ‘கோவா­வில் சி.ஐ.டி. 999’ என்ற கன்­ன­டப் படத்­தில் வரும் ஒரு பாட­லுக்­கான காட்­சியை டைரக்­டர் விவ­ரித்­தார். பின் பாடலை கம்­போஸ் செய்து வையுங்­கள், மாலை­யில் வந்து டியூனை கேட்­கி­றோம் என்று கூறி சென்­று­விட்­டார்­கள்.

ஜி.கே.வி. பாடலை கம்­போஸ் செய்­யத் தொடங்­கும்­போது-–

ஜி.கே.வி.: “ஸ்வரத்தை நோட்ஸ் எழுதி வச்­சுக்கோ.”

இளை­ய­ராஜா: “ஸ்வரம் எல்­லாம் எனக்கு தெரி­யாது சார்.”

ஜி.கே.வி: “பிறகு எப்­படி ஆர்­மோ­னி­யம் வாசிச்சே? ஸ்வரம் எல்­லாம் எழு­த­வில்­லை­யென்­றால் நான் கம்­போஸ் பண்­ணி­னதை நீ எப்­படி எனக்கு திரும்ப சொல்­ல­மு­டி­யும்?”

இளை­ய­ராஜா: “சார்! எனக்கு டியூனை இரண்டு தடவை கேட்டா மனப்­பா­டம் ஆயி­டும், அப்­ப­டியே திரும்ப சொல்­லி­டு­வேன்.”

ஜி.கே.வி.: “அதெல்­லாம் சரிப்­ப­டாது” என்று கூறி­ய­வர் பிறகு “சரி பார்க்­க­லாம்” என்­ற­வர் கிடு­கி­டு­வென்று பத்து டியூன்­களை கம்­போஸ் செய்து விட்­டார். அதற்­குள் டைரக்­டர் பக­வான் துரை வந்­து­விட்­டார்.

பக­வான் துரை: “வெங்­க­டேஷ், டியூன்­களை போடுங்­கள்.. கேட்­போம்” என்­றார்.

ஜி.கே.வி., “முதல் டியூன் எது?” என்று என்­னி­டம் கேட்­டார். நான் பாடி­னேன். உடனே அதை ஜி.கே.வி. ஞாப­கப்­ப­டுத்­திக் கொண்டு பாடிக்­காட்­டி­னார். “இரண்­டா­வது டியூன்?” என்று கேட்க, நான் பாடி­னேன். இப்­ப­டியே மூன்­றா­வது, நான்­கா­வது என்று பத்து டியூன்­க­ளை­யும் நான் ஞாப­கத்­தைக் கொண்டே பாடிக்­காட்­டி­னேன். ஜி.கே.விக்கு ஒரே ஆச்­ச­ரி­யம். தபேலா கன்­னை­யா­வைப் பார்த்து, “என்­னடா இவன்!” என்று சொல்­லி­விட்டு என்­னைப் பார்த்து ‘‘நீ என்ன டேப்­ரிக்­கார்­டரா?!” என்­றார். பக­வான் துரை­யி­ட­மும் தன் ஆச்­ச­ரி­யத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். டைரக்­டர் சொன்ன காட்­சிக்கு மூன்­றா­வது சரி­யாக இருக்­கும் என்று முடிவு செய்­தார்­கள். பின், ஜி.கே.வி. என்­னி­டம், “நீ இப்­ப­டியே காலத்தை ஓட்­டி­ட­லாம் என்று நினைக்­காதே… நீதான் இந்­தப் பாட­லுக்­கு­ரிய ஸ்வரங்­களை வாத்­தி­யம் வாசிப்­ப­வர்­க­ளுக்கு சொல்­ல­ணும்” என்­றார்.

அன்­றி­ரவு எனக்கு தூக்­கமே வர­வில்லை. “இங்­கே­தான் டியூன் தொடங்­கு­கி­றது, இது­தான் ஸட்­ஜ­ம­மாக இருக்க வேண்­டும், இது­தான் ரி…க…­­ம…­­ப…த… நி… என்று, ஒவ்­வொரு ஸ்வர­மா­கத் தேடிக்­கண்­டு­பி­டித்து ஒரு நோட்­டுப் புத்­த­கத்­தில் எழுதி வைத்­தேன். எல்­லாம் சரி­யாக இருந்­தது. எல்.ஆர். ஈஸ்­வரி பாட, கோல்­டன் ஸ்டூடி­யோ­வில் ரிக்­கார்­டிங் நடந்­தது.’’

இந்த நிகழ்ச்­சியை சொல்­வ­தற்கு ஒரு கார­ணம் இருக்­கி­றது. ஸ்வரம் எழு­தத் தெரி­யாது என்று சொன்ன இளை­ய­ரா­ஜா­தான் ‘பஞ்­ச­முகி’ என்ற ஒரு புதிய ராகத்தை நமக்­குத் தந்­தார்.