அதன் பிறகு அவரை சந்திக்கவேயில்லை! – ஜெய்

19 பிப்ரவரி 2019, 03:41 PM

‘பக­வதி’ படத்­தில் விஜய் தம்­பி­யாக நடித்­த­வர் ஜெய். பிறகு ‘சுப்­ர­ம­ணி­ய­பு­ரம்’ படத்­தில் கதை­யின் நாய­க­னாக நடித்து அனை­வ­ரது கவ­னத்­தை­யும் பெற்­றார். ‘எங்­கே­யும் எப்­போ­தும்’ படத்­தில் சிறப்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்தி பல­ரது பாராட்­டுக்­களை பெற்­ற­வர். அவரை சந்­தித்­த­போது...

* மீடி­யாக்­க ­ளி­ட­மி­ருந்து  ஒதுங்­கியே இருக்­கி­றீர்­களே, ஏன்?

நான் ஒரு கூச்ச சுபாவி. மேடை, மைக்­கைக் கண்­டாலே அலர்ஜி. வேறு எந்­தக் கார­ண­மும் இல்லை. இனி அப்­படி இருக்­கப்­போ­வ­தில்லை. எதற்­கும் எப்­போ­தும் என்­னைத் தொடர்பு கொண்டு பேச­லாம்.

* ஜெய் –- அஞ்­ச­லி­யு­டன் காதல் என்று அடிக்­கடி பேசப்­ப­டு­கி­றதே?

அவை வதந்­தி­கள். ‘பலூன்’ படத்­தின் படப்­பி­டிப்­பில் அஞ்­ச­லி­யு­டன் பணி­யாற்­றி­ய­தோடு சரி. அதன் பிறகு அவரை சந்­திக்­க­வே­யில்லை. அவர் தற்­போது தெலுங்­குப் பட­வு­ல­கில் பிசி­யாக இருக்­கி­றார்.

* முதன்­மு­றை­யாக மலை­யா­ளத்­தில் மம்­முட்­டி­யு­டன் நடிப்­பது பற்றி?

ஆமாம். ‘மதுர ராஜா’ படத்­தில் மம்­முட்­டி­யின் தம்­பி­யாக நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். மோகன்­லால் நடித்த ‘புலி முரு­கன்’ படத்­தின் இயக்­கு­நர் வைசாக் இயக்­கும் படம். ‘மதுர ராஜா’ படப்­பி­டிப்­பின்­போது விஜய்­யின் தம்­பி­யாக ‘பக­வதி’ படத்­தில் நடித்­தது நினை­வுக்கு வரு­கி­றது. மது­ரை­யில் இருந்து சென்று கேர­ளத்­தில் வாழும் அண்­ணன் – தம்­பி­க­ளைப் பற்­றிய கதை. மலை­யா­ளப் பட­மென்­றா­லும் நானும் மம்­முட்­டி­யும் படத்­தில் தமி­ழில்­தான் பேசிக்­கொள்­வோம்.

* ‘பார்ட்டி’  படம் பற்றி?

இது­வரை நான் நடிக்­காத செமி வில்­லன் கதா­பாத்­தி­ரம். படப்­பி­டிப்­புக்கு முன்பு வரை கொஞ்­சம் சீரி­ய­சான ரோல், நீ நடிப்­பாயா என்று கேட்­டார் இயக்­கு­நர் வெங்­கட் பிரபு. படப்­பி­டிப்­புக்­குச் சென்­ற­தும் எனது கேரக்­டர் காமெடி வில்­ல­னாக மாறி­விட்­டது. வெங்­கட் பிர­பு­வி­டம் ஏன் இப்­படி மாற்­றி­விட்­டீர்­கள் என்று கேட்­டேன்.

“சீரி­ய­சா­கத்­தான் இருந்­தது, நீ படப்­பி­டிப்பு வந்த பிறகு காமெ­டி­யாக மாறி­விட்­டது” என்­றார். உண்­மை­தான். மற்ற படங்­கள் என்­றால் சூட்­டிங் இடை­வே­ளை­யில்­தான் விளை­யா­டு­வோம். வெங்­கட் பிரபு படம் என்­றாலே விளை­யாட்­டுக்கு நடு­வில் போர­ டித்­தால் படப்­பி­டிப்பு நடத்­து­வோம்.

* இசைக் குடும்­பத்­தில் இருந்து வந்­த­வர் நீங்­கள். இசை ஈடு­பாடு எப்­படி?

நிச்­ச­ய­மாக. வெஸ்­டர்ன் பியா­னோ­வில் லண்­டன் டிரி­னிட்டி கல்­லூரி தேர்­வு­க­ளில் ஐந்து கிரே­டு­கள் முடித்­தி­ருக்­கி­றேன். படப்­பி­டிப்பு இல்­லா­மல் வீட்­டில் இருக்­கும்­போது பியா­னோ­வு­டன்­தான் இருப்­பேன். கம்ப்­யூட்­ட­ரில் ஒரு முழுப் பாட­லுக்­கான இசையை புரோ­கி­ராம் செய்­ய­வும் எனக்­குத் தெரி­யும்.

* ‘அறம்’ கோபி நயி­னார் இயக்­கத்­தில் நீங்­கள் நடிப்­பது ‘கறுப்­பர் நக­ரம்’ கதையா?

அதைப் பற்றி நான் இயக்­கு­ந­ரி­டம் கேட்­க­வில்லை. ஆனால், அவர் கூறிய கதை­யில் வட­சென்னை இளை­ஞ­னாக, ஒரு கால்­பந்து விளை­யாட்டு வீர­னாக நடிக்­கி­றேன். உண்­மை­யான கால்­பந்து வீர­னாக நடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக சர்­வ­தேச அள­வில் விளை­யா­டிப் புகழ்­பெற்ற ஒரு­வ­ரி­டம் கால்­பந்து பயிற்சி எடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன். அவ­ரும் என்­னு­டன் நடிக்­கி­றார்.

* அடுத்­த­டுத்த  படங்­கள்?

‘பார்ட்டி’, ‘நீயா 2’ என இரண்டு படங்­கள் தயா­ராக இருக்­கின்­றன. இரண்­டுமே ரசி­கர்­க­ளுக்­குக் கொண்­டாட்­ட­மான படங்­க­ளாக இருக்­கும்.