பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: பிரதமர் மோடி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 18 பிப்ரவரி 2019 20:56

புதுடில்லி,

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பேச்சுவார்த்தைக்கான காலம் கடந்துவிட்டதை தெளிவுபடுத்தியுள்ளது. இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரியுடனான பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி ‘‘பயங்கரவாதம் உலக அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற கருத்தை நானும் அர்ஜெண்டினா அதிபர் மாக்ரியும் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறோம்’’

‘‘பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினால் அது பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்’’

‘‘தற்போதுள்ள சூழ்நிலையில் பயங்கரவாதத்தை எதிர்த்து உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.