சுயசரிதை எழுதுவாரா நடிகை அரசியல்வாதி?

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2019

மும்­பை­யில் ‘குயின்ஸ் லைன்’ இலக்­கிய திரு­விழா சமீ­பத்­தில் நடந்­தது. அதில் கலந்­து­கொண்­டார், முன்­னாள் திரை­யு­லக நட்­சத்­தி­ர­மும் இந்­நாள் அர­சி­யல்­வா­தி­யு­மான ஜெயபி­ரதா.

நிகழ்ச்­சி­யில் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த ‘பட் படார்’ பதில்­க­ளின் சுவா­ரஸ்­ய தொகுப்பு:

‘‘பத்­மா­வத்’ படத்­தில் இடம்பெற்ற அலா­வு­தீன் கில்ஜி ரோல், எனக்கு சமாஜ்­வாடி கட்­சி­யின் மூத்த தலை­வர் ஆசம்­கானை நினை­வு­ப­டுத்­து­கி­றது.

பாலி­வுட்­டில் இப்­போது ‘மீ டூ’ செக்ஸ் துன்­பு­றுத்­தல் கதை­கள் உலா வரு­கின்­றன. எது உண்மை என்­பது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குத்­தான் தெரி­யும். அவர்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய ஆறு­த­லை­யும்,

இரக்­கத்­தை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

‘மீ டூ’ நிறைய இடங்­க­ளில் தவ­றாக கையா­ளப்­ப­டு­வ­தை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. இந்த விஷ­யத்தை கையாள சிறப்பு பெஞ்ச் அமைத்து நன்­றாக விசா­ரித்து, உண்­மையை

கண்­ட­றிய வேண்­டும்.

என்­னு­டைய வாழ்க்கை வர­லாற்றை நானே எழு­தும் அள­வுக்கு, இப்­போது எனக்கு துணிச்­சல் இல்லை. நான் கற்­றுக் கொள்­ளும் நிலை­யி­லேயே இருக்­கி­றேன். என்­னு­டைய மறக்க முடி­யாத தரு­ணங்­களை ஞாப­கப்­ப­டுத்த முடி­ய­வில்லை. வாழ்க்­கை­யில் நான் சந்­தித்த சிர­மங்­களை எல்­லாம் இப்­போது என்­னால் மறந்­து­விட முடி­யும். ஏனென்­றால், நான் பெற்­றுள்ள வெற்றி, அந்த மன­நி­லையை கொடுத்­துள்­ளது. எதிர்­கா­லத்­தில் என்­னு­டைய வாழ்க்கை வர­லாற்றை எழு­தும் மனோ­தி­டம் எனக்கு வரும் என்ற நம்­பிக்­கை­ இ­ருக்­கி­றது.

இளம் வய­தில் சினிமா என்­ப­தற்­கான ‘ஸ்பெல்­லிங்’ கூட எனக்கு தெரி­யாது. சினி­மா­வின் விளை­வு­கள் பற்­றி­யும் எனக்கு தெரி­யாது. ஆனால், இப்­போது, சினிமா உல­கத்தை நான் நேசிக்­கி­றேன். இதற்­காக நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன். இந்த துறை­தான் எனக்கு சமு­தா­யத்­தில் மிகப்­பெ­ரிய சக்­தியை கொடுத்­துள்­ளது’’.

இப்­படி பதில் கூறி பல உள்­ளங்­களை கொள்ளை கொண்­டார் ஜெயபி­ரதா.

* * *