கரும்பு வேணும்!

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2019

சபைக்கு வந்­தார், அக்­பர். பீர்­பா­லைத் தவிர, அனை­வ­ரும் அங்கு இருந்­த­னர். வெகு­நே­ரம் காத்­தி­ருந்­தும் பீர்­பால் வர­வில்லை. ஒரு சிப்­பாயை அனுப்பி, அழைத்து வரச் சொன்­னார்.

சிப்­பாய் திரும்பி வந்து, ''இதோ வரு­வ­தா­கச் சொன்­னார்...'' என்­றான். பீர்­பால் வரக் காணோம். அக்­ப­ருக்­குக் கோபம் வந்­தது. மற்­றொரு சிப்­பாயை அனுப்பி, கையோடு அழைத்து வரச் சொன்­னார்.

பீர்­பாலை அழைத்து வந்த பின்­பும், அக்­ப­ரின் கோபம் தணி­ய­வில்லை.

''நேரத்­துக்கு சபைக்கு வரா­மல் அப்­படி என்ன வேலை...'' என்று கேட்­டார்.

''பாதுஷா... நான், சரி­யான நேரத்­திற்­குச் சபைக்கு வர புறப்­பட்­டேன்; அப்­போது, என் குழந்தை வழக்­கத்­திற்கு மாறாக, அடம் பிடித்­தான்; அவனை சமா­தா­னப்­ப­டுத்தி வர நேர­மாகி விட்­டது...''

அக்­பர், கேலி­யாக சிரித்­த­படி,''யாரி­டம் சரடு விடு­கி­றீர்... குழந்தை, இவ்­வ­ளவு நேரம் அழுது, அடம் பிடிக்­குமா... கேட்­ப­வர் நம்ப வேண்­டாமா...'' என்­றார்.

''பாதுஷா... உண்­மை­யில் நடந்­ததை விளக்­கு­கி­றேன். சபைக்­குப் புறப்­பட்ட போது, குழந்தை அழ துவங்­கி­னான். என்ன வேண்­டும் என்று கேட்­டேன். பதில் சொல்­லா­மல் அழு­த­ப­டியே இருந்­தான். நீண்ட நேரம் கெஞ்­சிக் கேட்ட பின், சமா­தா­ன­ம­டைந்­தான். சிறி­தும் தாம­திக்­கா­மல், சபைக்கு வந்து விட்­டேன்...'' என்­றார், பீர்­பால்.

''அழும் குழந்­தை­யைச் சமா­த­னப்­ப­டுத்­து­வது அவ்­வ­ளவு கடி­னமா... நம்ப முடி­ய­வில்­லையே... அழும் குழந்­தையை, நான் உடனே சமா­த­னாப்­ப­டுத்தி விடு­வேன்...'' என்று கூறி­னார், அக்­பர்.

''சரி பாதுஷா... நான் குழந்­தை­யா­க­வும், நீங்­கள் என்­னைச் சமா­தா­னப்­ப­டுத்­தும் தந்­தை­யா­க­வும் வைத்­துக் கொள்­ள­லாம். நான் அழு­கி­றேன்... சமா­தா­னப்­ப­டுத்­துங்­கள்...'' என்று கூறி, அக்­ப­ரின் பதிலை எதிர்­பா­ரா­மல், குழந்தை போல் அழ துவங்­கி­னார், பீர்­பால்.

சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார், அக்­பர்.

''பையா... ஏன் அழு­கி­றாய்... என்ன வேண்­டும்...''

''கரும்பு வேண்­டும்...''

கரும்பு வாங்கி வர சொன்­னார் அக்­பர். அது வந்­த­தும், கொடுக்­கச் சொன்­னார்.

கரும்­பைத் துண்டு போட்­டுக் கொடுத்­த­தும், மேலும் உரக்க அழ துவங்­கி­னார்.

''அழாதே... கரும்பு கேட்­டாயே சாப்­பிடு...''

கரும்பு துண்­டு­களை ஒன்­றாக சேர்த்து, பழை­யது போல, முழு கரும்­பாக கேட்டு அழு­தார்.

''இதை எப்­படி சேர்ப்­பது; துண்­டு­க­ளாக்­கி­யதை திரும்­ப­வும் சேர்க்க முடி­யாதே...'' என்­றார், அக்­பர்.

பீர்­பால் அடம் பிடித்­தார். அக்­ப­ரால், விருப்­பத்தை நிறை­வேற்ற முடி­ய­வில்லை; திகைத்­தார்.

அப்­போது பீர்­பால், ''இப்­ப­டித்­தான் குழந்தை அடம் பிடித்து அழு­தான்; எனக்­கும் ஒன்­றும் புரி­யா­மல் திகைத்து விட்­டேன்...'' என்­றார்.

பேச்­சால், வாதத்­தால், பீர்­பாலை ஜெயிக்க முடி­யாது என்று புரிந்து கொண்­டார் அக்­பர்.

குட்­டீஸ்.. சாமர்த்­தி­ய­மாக பேச பழ­குங்­கள்.

–-சுவா­மி­மலை பதிப்­ப­கம்.