உயி­ரி­ய­லுக்கு உயிர் தந்­த­வர்!

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2019

பிரஞ்ச் ராணு­வத்­தில் பணி­யாற்­றிய, சிப்­பாய் ஜூன் பாப்­டிஸ்ட் லாமார்க், உயி­ரி­யலை வகை பிரித்த விஞ்­ஞா­னி­யாக உயர்ந்­தார்.

ஐரோப்­பா­வில் உள்ள பிரான்ஸ் நாட்­டில், பிக்­கார்டி என்ற கிரா­மத்­தில், 1744ல் பிறந்­தார். நடுத்­தர குடும்­பம்.

17 வய­தில், ராணு­வத்­தில் சேர்ந்­தார். மரம், செடி, கொடி­க­ளில் அவ­ருக்கு நாட்­டம் இருந்­தது.

போர் முடிந்­த­தும், ராணுவ தள­வா­டப் பகுதி, உயர் அதி­கா­ரி­யாக, அவரை நிய­மித்­தது அரசு. அந்த பணி­யில், தொடர்ந்­தி­ருந்­தால், கார், பங்­களா, காவல் நாய் என, கேளிக்­கை­யாக வாழ்ந்­தி­ருக்­க­லாம். அவர் மனம், அதி­லெல்­லாம் லயிக்­க­வில்லை. படிக்­க­வும், ஆராய்ச்சி மேற்­கொள்­ள­வும், தொந்­த­ர­வாக இருப்­ப­தாக, அந்த பத­வியை ராஜி­னாமா செய்­தார்.

அதி­கா­ரி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான முடிவு என, குடும்­பத்­தி­னர் பல்­லைக் கடித்­த­னர்.

உயி­ரி­யல் பாடத்­தில் உயர் படிப்­பில் சேர, பகு­தி­நேர கல்­லுா­ரி­யில் விண்­ணப்­பித்­தார். இரவு நேரம் வட்­டிக் கடை­யில், பகுதி நேர வேலை செய்து, கல்­லுாரி கட்­ட­ணம் செலுத்­தி­னார்.

தாவ­ரங்­க­ளு­டன் வாழும் ஆசை­யால், பிரான்சு, ராயல் தோட்­டத்­துக்கு அலைந்து, ஒரு வேலை பெற்­றார்!

தோட்ட பரா­ம­ரிப்­பா­ள­ராக, தாவ­ரக் கன்று நேர்த்தி செய்­ப­வ­ராக, 10 ஆண்­டு­கள் அய­ரா­மல் உழைத்­தார்.

'ப்ளோரா பிரான்­சாய்ஸ்' என்ற தலைப்­பில், 1778ல் ஒரு புத்­த­கம் எழு­தி­னார். தாவ­ரங்­களை தரம் பிரித்­தல், பெய­ரி­டு­தல் போன்ற சிறப்பு மிக்க விஷ­யங்­களை, அதில் பதிவு செய்­துள்­ளார். வறு­மை­யான வாழ்க்கை, தனி­மை­யில் கழிந்த இளமை, குடும்ப உறவு அற்ற நிலை­யில், 50 வயதை அடைந்­தார். உல­கின் எல்லா தாவ­ரங்­க­ளை­யும் தரம் பிரிக்­கும், பிரம்­மாண்ட பணி­யில் ஈடு­பட்­டார்.

அவ­ரது கடு­மை­யான உழைப்பை, உல­கம் போற்­றா­தது துர­திர்ஷ்­ட­வ­சம்!

அவரை, அருங்­காட்­சி­யக பணி­யா­ளாக மாற்­றி­னர்; அச­ர­வில்லை. அவ­ருக்கு, அப்­போது, மிகச் சிறி­த­ளவே விலங்­கி­யல் அறிவு இருந்­தது. அந்த முது­மை­யி­லும், கற்று தேர்ந்­து­விட வேண்­டும் என்ற, அறி­வுப் பசி இருந்­தது.

பிரான்ஸ் நாட்­டில் உள்ள பாரீஸ் அருங்­காட்­சி­ய­கத்­தில் தான், விலங்­கி­யல் துறை­யின் புரட்சி, ஒரு இருட்­ட­றை­யில் துவங்­கி­யது.

அடுத்த மூன்­றாண்­டு­க­ளில், அவர் விலங்கு உலகை, குடும்­பங்­க­ளாக பிரித்து, உட்­பி­ரி­வு­கள், வட்­டப் பிரி­வு­கள் என, விலங்­கி­யல் பெயர்­களை சூட்­டத் துவங்­கி­னார். முது­கெ­லும்­புள்­ளவை, முது­கெ­லும்­பற்­றவை என்­ப­தெல்­லாம், அவ­ரது பிரிவு தான்.

விலங்­கு­களை, தவ­றாக இனம் பிரித்­ததை சுட்­டிக் காட்­டி­னார். புதிய பிரி­வு­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அருங்­காட்­சி­யக விலங்கு மாதி­ரி­களை

இடம் மாற்றி, பிரி­வு­களை வகுத்­தார்.

தாவ­ர­வி­ய­லை­யும், விலங்­கி­ய­லை­யும் இணைக்­கும் கல்வி முறைக்கு, 'உயி­ரி­யல்' என, பெய­ரிட்­டார். அருங்­காட்­சி­ய­கத்­தில், பாறை மாதி­ரி­களை வைத்து, புதிய வகை ஆராய்ச்­சிக்கு வித்­திட்­டார். விலங்­கு­க­ளின் உடல் வளர்ச்­சிக்­கும், சுற்­றுச் சூழ­லுக்­கும் இடை­யே­யான தொடர்பு குறித்து, லாமார்க் வகுத்த, இரண்டு விதி­கள், அருங்­காட்­சி­ய­கப் பணி ஏடு­க­ளில் உள்­ளன.

பார்­வையை இழந்­த­போ­தும், கண்­ணாடி உத­வி­யு­டன், நுண்­ணோக்­கி­யில் ஆராய்ந்­தார். இறு­தி­யில், உத­விக்கு ஆள் இன்றி, வறு­மை­யில் வாடி, துய­ரத்­து­டன், 1820ல் இறந்­தார்.

அதன்­பின் தான், பரி­ணா­ம­வி­யல் தத்­து­வத்தை, டார்­வின் வெளி­யிட்­டார்.

லாமார்க் எனும், மாபெ­ரும் விஞ்­ஞா­னியை, உல­கம் புரிந்து கொண்ட போது, அவ­ரது கல்­லறை, புல்­லா­லும், புத­ரா­லும் மூடி­யி­ருந்­தது.