சென்செக்ஸ் 241 புள்ளிகளும் நிப்டி 57 புள்ளிகளும் சரிவு

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 19:36

மும்பை,

   கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச் சந்தை குறியீட்டெண்கள்  சரிவடைந்தன. இன்றும் சென்செக்ஸ்  குறியீட்டெண்  சரிவுடன் நிலைபெற்றது.

ஜனவரி மாத நுகர்வோர் பணவீக்கம், தொழில் துறை உற்பத்தியின் தரவு விவரங்களை  இன்று வெளியிட்டனர். உற்பத்தி அளவு குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குகள் வாங்கும்  ஆர்வம் சற்று குறைந்தது.

இதன் காரணமாக சென்செக்ஸ் இன்று 241.41 புள்ளிகள் சரிவுடன்  36,153.62 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 57.40  புள்ளிகள் சரிந்து 10,831.40, புள்ளிகளில் நிலைபெற்றது

ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎப்சி, எஸ்.பி.ஐ, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி,  பஜாஜ் நிதி, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, இன்டஸ் இன்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.63 சதவீதம் குறைந்துள்ளது.

சன் பார்மா, கோல் இந்தியா, டாடா ஸ்டீல்,  என்டிபிசி, ஏஷியன் பெயின்ட்ஸ், வேதாந்தா, எம் & எம் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (12-02-2019) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 6 காசுகள் அதிகரித்து ரூ.71.12 காசுகளாக இருந்தது.  வர்த்தக இறுதியில் இன்னும் உயரந்து 70.59 காசுகளாக நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.18 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது