ஸ்விக்கி நிறுவனம் ஸ்டோர்ஸ் துவங்குகிறது

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 17:27

புதுடெல்லி

பல்வேறு ஓட்டல் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து தேவையான உணவு வகைகளை வாங்கி வீடுகளுக்கு கொண்டு வந்து வினியோகம் செய்கின்றது ஸ்விக்கி நிறுவனம். இப்பொழுது அடுத்த கட்டத்துக்கு உயர்ந்து வருகிறது. டெல்லியில் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் விற்பனைக் கடை ஒன்றை துவக்கி உள்ளது.

ஸ்விக்கி ஆப் மூலம் உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மசாலா வகைகள் அழகு சாதனப் பொருட்கள் பான வகைகள், பழங்கள் காய்கறிகளை பெறலாம்.

இவற்றின் பட்டியலை சொன்னால் போதும் ஸ்விக்கி நிறுவன ஊழியர் அவற்றைக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் வழங்குவார்கள் இந்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷ மஜெட்டி இந்த தகவலை வெளியிட்டார். ஸ்விக்கி நிறுவனம் இந்தியாவில் 2014ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்த்து, இப்பொழுது பொதுமக்களுக்கு உணவு வகைகளை வினியோகம் செய்து வருகிறது.

60,000 உணவு நிறுவனங்களிடமிருந்து தேவையான உணவு வகைகளை ஸ்விக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் கொள்முதல் செய்து வழங்குகிறார்கள் . இந்தியாவில் உள்ள 80 நகரங்களில் ஸ்விக்கி நிறுவனம் தற்போது இயங்கி வருகிறது.