கருப்பு கொடி காட்டும் வைகோவின் வெற்று அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது - தமிழிசை

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 15:06

சென்னை,

கருப்புக் கொடி காட்டும் வைகோவின் வெற்று அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என தமிழிசை கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்தபோது எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மட்டும் கருப்புக்கொடி காட்டி இருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியின் பெண் தொண்டரை தாக்கி இருக்கிறார்கள்.

கருப்பு கொடி காட்டும் வைகோவின் வெற்று அரசியல் தமிழகத்தில் எடுபடாது. எங்களுக்கும் கருப்புக் கொடி காட்டத் தெரியும். அது வேண்டாம் என்று நினைக்கிறோம். ஆனால் நாங்கள் நாகரிக அரசியலை விரும்புபவர்கள்.

தி.மு.க. ஆட்சியில் தான் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று கூறிய 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விவசாயிகளை கொன்றது தி.மு.க.

தற்போது பாரதீய ஜனதாவை ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

இவ்வாறு, தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.