ரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம்: முதல்வர் பழனிசாமி நேரில் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:07

சென்னை,             

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. மணமக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நேரில் வாழ்த்தினர்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ், உறவினர்களான, கஸ்தூரி ராஜா, செல்வ ராகவன், இசை அமைப்பாளர் அனிருத், ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, பி.வாசு, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்தை தொடர்ந்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.