எடை போடுவதில் கில்லாடி! – ரக் ஷா

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

* ‘‘நாம் இருவர் நமக்கு இருவர்’’ சீரியலில் (விஜய் டிவி) ‘தேவி’ கேரக்டரில் நடித்து  வருகிறார் ரக் ஷா.

* அவருடைய முழு பெயர், ரக் ஷா ஹொல்லா.

* கர்நாடக மாநிலத்திலுள்ள குண்டபூர், அவருக்கு பூர்வீகம்.

* இப்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.

* சென்ற குடியரசு தினத்தன்று அவருக்கு 28 வயது பூர்த்தியடைந்தது.

* விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

* விசாகப்பட்டினத்திலுள்ள நலந்தா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

* சின்ன வயதிலேயே சினிமா ஆசை அவரை தொற்றிக்கொண்டது.

* 22வது வயதில் மீடியாவுக்கு வந்து விட்டார்.

* ‘‘புட்டின்டி பட்டு சீரா’’ கன்னட சீரியலில் அறிமுகமானார்.

* ‘‘மிலானா’’, ‘‘கோகிலே’’, ‘‘பல்லவி அனுபல்லவி’’, ‘‘மாயா’’, ‘‘ஹரஹர மகாதேவா’’ போன்ற கன்னட சீரியல்களில் தொடர்ந்து நடித்தார்.

* ‘‘ஆ எரடு வர்ஷாகாலு’’, ‘‘ரிக்கி’’ உட்பட சில கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவற்றில் ‘‘ரிக்கி’’ படம் அவருக்கு பெரும் புகழை தேடிக் கொடுத்தது.

* ‘‘தமிழ் கடவுள் முருகன்’’ அவருடைய முதல் தமிழ் சீரியல். அதில் ‘ஆஜா முகி’ என்ற கேரக்டரில் நடித்தார். அதன்பின் ரம்யா கிருஷ்ணனின் ‘‘வம்சம்’’ சீரியலிலும் நடித்தார்.

* சுமார் 6 அடி உயரம் உள்ளவர்.

* ரக் ஷாவுக்கு சென்னையில் சில நண்பர்கள் உள்ளனர். அவர்களில் மிக நெருக்கமானவர் மலையாள நடிகை அர்ஷிதா ஸ்ரீதாஸ். அவர்தான் ரக் ஷா தமிழில் நடிக்க உதவியவர்.

* திருமணமாகி விட்டது.

* புனீத் ராஜ்குமார், குஷ்பு ஆகியோர் அவருடைய அபிமான நட்சத்திரங்கள்.

* சிக்கனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்.

* பெங்களூரு, பிடித்த ஊர்.

* ஷாப்பிங் பண்ணுவது அவருடைய முக்கிய ஹாபி.

* டப்ஸ்மேஷில் அவர் மிகவும் பிரபலம்.

* ‘‘மனிதர்களை எடை போடுவதில் நான் கில்லாடி!’’ என்கிறார்.

  – வா. முனீஸ்­வரி