கோலி மனைவியா இப்படி...?

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

கிரிக்­கெட் வீரர் விராட் கோலி­யின் மனை­வி­யும் பிர­பல பாலி­வுட் நடி­கை­யு­மான அனுஷ்கா சர்மா புதிய சர்ச்­சை­யில் சிக்கி உள்­ளார். கார­ணம்: அவர் நடித்­துள்ள புகை­யிலை பான் மசாலா விளம்­ப­ரப்­ப­டம்.

விளம்­ப­ரப் படத்­தின் காட்­சி­கள் : ஒரு மாடல் அழ­கி­யு­டன் கேட்­வாக் செல்­கி­றார் அனுஷ்கா. மாடல் அழ­கி­யின் மேலாடை நழுவி விழு­கி­றது. அனுஷ்கா சம­யோ­சி­த­மாக அதைத் தடுத்து ஆபா­சம் அரங்­கே­றா­த­வாறு பார்த்­துக் கொள்­கி­றார். பின்­னர் ஒரு பார்ட்டி நடக்­கி­றது. அதில் அனுஷ்கா உட்­பட பலர் கலந்து கொள்­கின்­ற­னர். பார்ட்டி முடிந்­த­தும், புகை­யிலை பான் மசா­லாவை ரசித்து சுவைத்து மகிழ்ச்­சி­யாக குதுா­க­லிக்­கி­றார்.

சம­யோ­சித புத்­தி­சா­லித்­த­னத்­துக்­கும், மகிழ்ச்­சிக்­கும் இந்த புகை­யிலை பான் மசா­லா­தான் கார­ணம் என்­பது மாதிரி அந்த விளம்­ப­ரம் செல்­கி­றது.

இந்த விளம்­ப­ரப் படத்தை, அனுஷ்கா தன்­னு­டைய இன்ஸ்­டா­கி­ரா­மி­லும் வெளி­யிட்­டார். இங்­கே­தான் சிக்­கல் ஆரம்­பித்­தது. கார­சா­ர­மான கண்­டன விமர்­ச­னங்­கள் குவிந்து வரு­கின்­றன.

‘புகை­யி­லை­யால் இந்­தி­யா­வில் ஆண்­டுக்கு ஒரு லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் பலி­யா­கின்­ற­னர். புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தும் புகை­யி­லைக்கு ஆத­ர­வான விளம்­ப­ரத்­தில் ஒரு பொறுப்­புள்ள கிரிக்­கெட் வீர­ரின் மனைவி நடிக்­க­லாமா?’ என்ற கேள்­வி­யு­டன் கூடிய கண்­ட­னப் பதி­வு­க­ளால் அனுஷ்­காவை நெட்­டி­சன்­கள் வறுத்து வரு­கின்­ற­னர்.