பிரியங்கா சாதிப்பாரா?

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2019

பிரி­யங்கா காந்தி வதேரா அர­சி­ய­லில் குதித்­துள்­ளார். இது எதிர்­பார்த்­த­து­தான். இது தவிர்க்­க­மு­டி­யா­த­தும் கூட. கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக பிரி­யங்கா அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வாரா என்று விவா­திக்­கப்­பட்டு வந்­தது. இறு­தி­யில் லோக்­சபா தேர்­த­லுக்கு இரண்டு மாதங்­களே இருக்­கும் நேரத்­தில் நேரடி அர­சி­ய­லுக்கு வந்­துள்­ளார். 80 லோக்­சபா தொகு­தி­களை கொண்ட உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் கிழக்கு உத்­த­ர­பி­ர­தேச பிராந்­திய பொறுப்­பா­ள­ரா­க­வும், கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யி­னரை பொறுத்த வரை­யில், பிரி­யங்கா எல்­லோ­ரை­யும் வசீ­க­ரிக்­கும் குணம் உடை­ய­வர். இதற்­கும் மேல் அவ­ரது பாட்டி இந்­திரா காந்­தியை போல் இருப்­ப­தா­க­வும், அவரை போன்றே நடை, உடை, பாவ­னை­கள் இருப்­ப­தா­க­வும் கரு­து­கின்­ற­னர்.

1999ல் ரேபேலி,அமேதி தொகு­தி­க­ளில் பிரி­யங்கா பிர­சா­ரம் செய்­ததை பார்த்து, காங்­கி­ரஸ் கட்சி தலை­வர்­கள் அவ­ரது தாயார் சோனியா காந்­தி­யி­டம், பிரி­யங்­காவை லோக்­சபா பிர­சா­ரத்­திற்கு அனுப்­பு­மா­றும், அது­வும் லக்னோ தொகு­தி­யில் போட்­டி­யிட்ட வாஜ்­பாயை எதிர்த்து பிர­சா­ர­திற்கு அனுப்­பு­மாறு கேட்­டுக் கொண்­ட­னர். இதற்கு சோனியா காந்தி சம்­ம­திக்­க­வில்லை. இதற்கு பிறகு 2004லிலும் வேண்­டு­கோள் விடுத்­த­னர். அப்­போ­தும் சோனியா காந்தி சம்­ம­திக்­க­வில்லை. பிரி­யங்கா அவ­ரது தாயார் சோனியா காந்தி, சகோ­த­ரர் ராகுல் காந்தி போட்­டி­யி­டும் ரேபேலி, அமேதி தொகு­தி­க­ளில் மட்­டும் பிர­சா­ரம் செய்­தார்.

இப்­போது கடை­சி­யாக காங்­கி­ரஸ் கட்சி பிர­மாஸ்­தி­ரத்தை பயன்­ப­டுத்­து­வது போல் பிரி­யங்­காவை தேர்­தல் களத்­தில் இறக்­கி­விட்­டுள்­ளது. அமேதி, ரேபேலி தொகு­தி­யைச் சேர்ந்த காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர், அவர் மக்­க­ளி­ட­மும், கட்சி தொண்­டர்­க­ளி­ட­மும் இடை­ய­றாது தொடர்பு கொண்­டுள்­ளதை நினைவு கூறு­கின்­ற­னர். 2009ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லின் போது பிரி­யங்கா தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு இருந்­த­போது, அவ­ருக்கு பின்­னால் வந்த வாக­னம் விபத்­திற்­குள்­ளா­னது. வாக­னத்­தில் வந்த சிலர் காய­டைந்­த­னர். இதனை கேள்­விப்­பட்ட பிரி­யங்கா, உடனே அன்­றைய நிகழ்ச்­சியை ரத்து செய்­து­விட்டு, காய­ம­டைந்­த­வர்­களை சந்­தித்து ஆறு­தல் கூற சென்று விட்­டார் என்று நினைவு கூறு­கின்­ற­னர்.

பிரி­யங்கா மன்­னிக்­கும் குணம் கொண்­ட­வர் என்­பதை இரண்டு சம்­ப­வங்­கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. அவ­ரது தந்தை ராஜீவ் காந்தி பலி­யான வழக்­கில் சம்­பந்­தப்­பட்ட நளினி சித­ரம்­ப­ரத்தை வேலூர் சிறை­யில் சென்று சந்­தித்­தார். அவ­ரது சித்­தப்பா உறவு முறை உள்­ள­வர் அருண் நேரு, (ராஜீவ் காந்­திக்­கும், அருண் நேரு­வுக்­கும் இடையே ஏற்­பட்ட கருத்து வேறு­பாட்­டால், அருண் நேரு காங்­கி­ரஸ் கட்­சிக்­கும், ராஜீவ் காந்­திக்­கும் எதி­ராக திரும்­பி­விட்­டார்.) அருண் நேரு குர்­கான் மருத்­து­வ­ம­னை­யில் உடல் நல­முற்று இருந்த போது, பழைய சம்­ப­வங்­களை ஒதுக்­கி­வைத்து விட்டு, சோனி­யா­வை­யும், ராகு­லை­யும் அழைத்­துக் கொண்டு அருண் நேரு­வை­யும், அவ­ரது மகன் ரய்­கா­னை­யும் சந்­தித்து உடல்­ந­லம் விசா­ரித்­தார்.

சோனியா காந்­தி­யின் குடும்­பத்­திற்கு நெருக்­க­மான சுனிதா கோகில் கூறு­கை­யில், அவ­ரது தலை­மு­றை­யி­ன­ரில் பிரி­யங்கா சிறந்த பெண்­மணி. அவர் புத்­தி­சாலி மட்­டு­மல்­லாது இரக்க குணம் கொண்­ட­வர் என்று கூறு­கின்­றார்.

பிரி­யங்கா எதை­யும் உன்­னிப்­பாக கவ­னிப்­பார் என்று கட்சி தொண்­டர் கூறு­கின்­றார். 1999ல் சோனியா காந்தி அமேதி தொகு­தி­யில் போட்­டி­யிட வேட்பு மனுவை தாக்­கல் செய்ய வந்­தார். வேட்­பு­மனு தாக்­கல் செய்­யும் சப்–­டி­வி­ஷ­னல் மாஜிஸ்­தி­ரேட் அலு­வ­ல­கத்­திற்கு வெளியே பெரு­ம­ள­வி­லான கூட்­டம் திரண்டு இருந்­தது. பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், இதர ஊட­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் உள்ளே வர முடி­ய­வில்லை. இதை கவ­னித்த பிரி­யங்கா, ஊட­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் உள்ளே வர வேண்­டிய ஏற்­பா­டு­களை செய்­யும்­படி அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னார். இதற்கு பிறகு ஊட­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் உள்ளே வந்­த­னர். இது போல் பிரி­யங்கா எல்­லா­வற்­றை­யும் உன்­னிப்­பாக கவ­னிப்­பார் என்று காங்­கி­ரஸ் கட்சி உள்­ளூர் தலை­வர் நினைவு கூறு­கின்­றார்.

அர­சி­யல் நிபு­ணர் பேரா­சி­ரி­யர் ராம் பக­தூர் வர்மா, “பிரி­யங்கா அவ­ரது பாட்­டியை போலவே உள்­ளார். அதே உரு­வம், மனப்­போக்கு, உறு­தி­யு­டன் உள்­ளார் என்று கூறு­கின்­றார்.

பிரி­யங்கா தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­தில்லை. 2014 லோக்­சபா தேர்­த­லுக்கு முன்­னரே அர­சி­ய­லில் தீவி­ர­மாக ஈடு­பட ஆரம்­பித்­து­விட்­டார். அவர் ராகுல் காந்­திக்கு பின்­னால் இருந்து ஆலோ­சனை வழங்­கி­வந்­தார். அதற்­க­டுத்த ஆண்­டு­க­ளில் கட்சி முடிவு எடுப்­ப­தில் முக்­கிய பங்­காற்­றி­னார். 2017ல் உத்­த­ர­பி­ர­தேச சட்­ட­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சிக்­கும், சமாஜ்­வாதி கட்­சிக்­கும் இடையே கூட்­டணி சிக்­கல் ஏற்­பட்ட போது, பிரி­யங்கா சமாஜ்­வாதி கட்சி தலை­வர் அகி­லேஷ் யாத­வின் மனைவி டிம்­பிள் யாதவை தொடர்பு கொண்டு, பிரச்­னையை தீர்த்து வைத்­தார். அதன் பிறகு இரு கட்­சி­க­ளுக்­கும் இடையே கூட்­டணி ஏற்­பட்­டது.

அந்த தேர்­த­லில் பிரி­யங்கா முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வாரா என்ற ஊகங்­கள் கிளம்­பின. காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேர்­தல் ஆலோ­க­ராக இருந்த பிர­சாந்த் கிஷோர், பிரி­யங்­காவை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்­டும் என்று கூறி­னார். ஆனால் அதற்கு பிரி­யங்கா மறுத்­து­விட்­டார். அதே வரு­டம் பஞ்­சாப் சட்­ட­சபை தேர்­த­லின் போது, அர­சி­ய­லில் குதித்த பிர­பல கிரிக்­கெட் வீரர் நவ­ஜோத் சிங் சித்து, காங்­கி­ர­சில் சேரு­வாரா, ஆம் ஆத்மி கட்­சி­யில் சேரு­வாரா என்று ஊச­லாட்­டம் இருந்­தது. பிரி­யங்கா அவ­ரி­டம் பேசி காங்­கி­ர­சில் இணை­ய­வைத்­தார். இவ­ரது வருகை காங்­கி­ர­சுக்கு உத­வி­யாக இருந்­தது.

இப்­போது பிரி­யங்கா நேர­டி­யாக அர­சி­ய­லில் குதித்­துள்­ளார். அவர் மீது கட்­சி­யி­னர் அதிக நம்­பிக்­கை­யு­டன் உள்­ள­னர். பிரி­யங்கா கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரா­க­வும், கிழக்கு உத்­த­பி­ர­தே­சத்­தின் பொறுப்­பா­ள­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட்ட உடனே, வார­ணா­சி­யி­லும், கோரக்­பூ­ரி­லும் அவர் இங்கு போட்­டி­யிட வேண்­டும் என்று போஸ்­டர்­கள் ஒட்­டப்­பட்டு இருந்­தன. அவர் பிர­த­மர் நரேந்­திர மோடி­யை­யும், உ.பி.முதல்­வர் ஆதித்­ய­நாத்­தை­யும் எதிர்த்து போட்­டி­யிட வேண்­டும் என்ற எதிர்­பார்ப்பு கட்சி தொண்­டர்­கள் மத்­தி­யில் நில­வு­கி­றது. (வார­ணாசி தொகு­தி­யில் இருந்து நரேந்­திர மோடி போட்­டி­யிட்டு ஜெயித்து பிர­த­ம­ராக ஆகி­யுள்­ளார். இதே போல் கோரக்­பூர் தொகுதி ஆதித்­ய­நாத் கோட்டை என்ற நிலை உள்­ளது.)

உத்­த­ர­பி­ர­தேச காங்­கி­ரஸ் கட்சி தலை­வர் அகி­லேஷ் பிர­தாப் சிங், “அவர் பிர­த­மர் மோடிக்கு உட­ன­டி­யாக பதில் சொல்­லக்­கூ­டி­ய­வர். இதை 2014ல் நிரூ­பித்­துள்­ளார். மோடி­யின் கிண்­ட­லுக்கு உட­ன­டி­யாக பதி­லடி கொடுத்­தார். உ.பி., கிழக்கு பிராந்­தி­யத்­தில் பிரி­யங்கா தீவி­ர­மாக பிர­சா­ரம் செய்­யும் போது, இதன் பாதிப்பு நிச்­ச­ய­மாக வார­ணாசி தொகு­தி­யில் இருக்­கும். மோடி வார­ணாசி தொகு­தி­யில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டி­ய­தி­ருக்­கும். அவ­ரது பிர­சா­ரம் டெலி­வி­ஷ­னில் எல்லா நேர­மும் ஒளி­ப­ரப்­பா­கும் போது, இதன் தாக்­கம் மாநி­லத்­திற்கு வெளி­யே­யும் இருக்­கும். டெலி­வி­ஷ­னில் மோடியை பிரி­யங்கா மிஞ்­சி­வி­டு­வார்” என்று கூறி­னார்.

பிரி­யங்கா மீது எதிர்­பார்ப்­பு­கள் பெரிய அள­வில் இருந்­தா­லும், தேர்­த­லில் சாதனை புரி­வது என்­பது சவா­லா­னது. 2009 லோக்­சபா தேர்­த­லில் கிழக்கு உத்­த­பி­ர­தே­சத்­தில் உள்ள 21 தொகு­தி­க­ளில் காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றது. ஆனால் 2014ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் ரேபேலி,அமேதி ஆகிய இரண்டு தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது.

பிரி­யங்­கா­வி­னால் கூட்­டத்தை சேர்க்க முடி­யும். ஆனால் அவர்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் வாக்­க­ளிக்க வைப்­ப­தற்கு அதிக திறமை வேண்­டும். 2009ல் நடை­பெற்ற தேர்­த­லுக்­கும், 2019ல் நடை­பெற உள்ள தேர்­த­லுக்­கும் நிறைய வித்­தி­யா­சம் உண்டு, முந்­தைய தேர்­தல் (2009) நான்கு முனை போட்டி. இப்­போது நடை­பெற உள்ள தேர்­தல் பா.ஜ..வுக்­கும், சமாஜ்­வா­தி–­ப­கு­ஜன் சமாஜ் கூட்­ட­ணிக்­கும் இடை­யி­லான நேரடி போட்டி. முஸ்­லீம்–­த­லித்–­பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­னர் ஆகி­யோரை ஒரு பக்­கம் சமாஜ்­வா­தி–­ப­கு­ஜன் சமாஜ் கூட்­ட­ணி­யும், மறு பக்­கம் பா.ஜ.,உயர் ஜாதி­யி­னர் வாக்­கு­களை கவ­ரும். இந்த சூழ்­நி­லை­யில் அமைப்பு ரீதி­யாக பலம் இல்­லாத, வாக்கு வங்கி இல்­லாத காங்­கி­ரஸ் சிறிய அள­வி­லேயே தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும்.

அர­சி­யல் விமர்­ச­கர் அபே குமார் துபே கூறு­கை­யில், “2009 லோக்­சபா தேர்­த­லில் உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் காங்­கி­ரஸ் 18.5 சத­வி­கித வாக்­கு­களை பெற்று, 21 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. இந்த தேர்­த­லில் வாக்­கு­கள் பிரி­யும். காங்­கி­ரஸ் தனித்து நின்று 23 முதல் 24 சத­வி­கி­தத்­திற்­கும் அதி­க­மான வாக்­கு­களை பெற்­றால் தான் போதிய இடங்­க­ளில் வெற்றி பெற முடி­யும். இது கட்­சி­யின் ஸ்தாபன பலத்­திற்கு சவா­லா­னது” என்று கூறி­னார்.

உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் சமாஜ்­வா­தி–­ப­கு­ஜன் சமாஜ் கூட்­ட­ணி­யில் காங்­கி­ரசை சேர்க்­க­வில்லை. பிரி­யங்கா அர­சி­ய­லுக்கு வந்­தி­ருப்­ப­தால் காங்­கி­ரஸ் பலம் வாய்ந்த தொகு­தி­க­ளில் பா.ஜ.,வை வீழ்த்த அகி­லேஷ் யாதவ், மாயா­வ­தி­யு­டன் மறை­முக உடன்­பாடு ஏற்­ப­டும் என கூறப்­ப­டு­கி­றது. ஆதித்­ய­நாத் முத­ல­மைச்­ச­ராக ஆன பிறகு, ராஜ­புத்­தி­ரர்­க­ளுக்கே முக்­கி­யத்­து­வம அளிக்­கி­றார் என பிரா­ம­ணர்­கள் வருத்­தத்­தில் உள்­ள­னர். இவர்­களை காங்­கி­ரஸ் குறி வைக்­கி­றது. அத்­து­டன் தலித்­து­கள், முஸ்­லீம்­க­ளின் ஆத­ர­வும் கிடைக்­கும் என எதிர்­பார்க்­கி­றது.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னணி தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான அன்னு தாண்­டன், “பிரி­யங்கா காந்­தி­யின் அர­சி­யல் வருகை பெரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் என்று மக்­க­ளும், சமாஜ்­வாதி, பகு­ஜன் சமாஜ் தொண்­டர்­க­ளும் கூட கரு­து­கின்­ற­னர். இத­னால் கட்­சி­யின் பிர­சா­ரத்­திற்கு வலிமை கிடைக்­கும். பிரி­யங்கா மீது மக்­கள் முழு நம்­பிக்கை வைத்­துள்­ள­னர். அவரை தங்­க­ளில் ஒரு­வ­ரா­கவே கரு­து­கின்­ற­னர்” என்று தெரி­வித்­தார். அத்­து­டன் காங்­கி­ரஸ் ஜாதியை மைய­மாக வைத்­துள்ள கட்­சி­க­ளின் ஆத­ரவை பெறும் முயற்­சி­யி­லும் ஈடு­பட்­டுள்­ளது. ராஜ்­பார் அல்­லது பா.ஜ.,வை எதிர்க்­கும் அப்னா தளம் கட்­சி­யின் ஒரு பிரி­வி­ன­ரின் ஆத­ரவை பெற்று, பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ரின் வாக்­கு­களை கவ­ரும் முயற்­சி­யி­லும் ஈடு­பட்­டுள்­ளது.

முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரும், பா.ஜ., அதி­ருப்­தி­யா­ள­ரு­மான யஷ்­வந்த் சின்கா, “பிரி­யங்கா ஏற்­க­னவே தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டார். அவர் நேர­டி­யாக பிர­சா­ரத்­தில் ஈடு­ப­டும் போது, இதன் தாக்­கம் அதி­க­மாக இருக்­கும்” என்று தெரி­வித்­தார்.

காங்­கி­ரஸ் 15 தொகு­தி­க­ளில் பா.ஜ.,வுக்கு பலத்த போட்­டியை உண்­டாக்­க­லாம் என்ற நம்­பிக்­கை­யு­டன் உள்­ளது. இதில் பெரும்­பா­லான தொகு­தி­கள் கிழக்கு உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் அமைந்­துள்­ளன. இந்த தொகு­தி­கள் 2014 லோக்­சபா தேர்­த­லின் போது காங்­கி­ரஸ் ஒரு லட்­சத்­துக்­கும் அதி­க­மான வாக்­கு­களை வாங்­கிய தொகு­தி­கள். அதில் தருர்­கரா, உன்னா, பார்­பங்கி, குஷி­ந­கர், கான்­பூர், பிர­தாப்­கர்க், பைசா­பாத் ஆகிய தொகு­தி­க­ளும் அடங்­கும்.

உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் நில­வும் சூழ்­நிலை சவா­லா­னது. ஆனால் பிரி­யங்கா இந்த சவாலை ஏற்­றுக் கொள்ள சம்­ம­தித்­துள்­ளார். இது பெரிய விச­யம். அவர் இந்த சவாலை எதிர்­கொண்டு, தலைமை ஏற்று நடத்­து­வார். அவர் அமேதி, ரேபேலி தொகு­தி­க­ளில் முக்­கிய பங்­காற்­றி­யுள்­ளார். இந்த பிராந்­தி­யத்­தில் நில­வும் அர­சி­யல் பற்றி மிகுந்த அனு­ப­வம் உடை­ய­வர். அவ­ருக்கு மக்­கள் என்ன எதிர்­பார்க்­கின்­ற­னர், தொண்­டர்­க­ளின் எதிர்­பார்ப்பு என்ன என்­பது தெரி­யும் என்று கூறு­கின்­றார் அகி­லேஷ் பிர­தாப் சிங்.

***