பத்­மஸ்ரீ விருதை திருப்பி அளிக்­கும் பிர­பல திரைப்­பட இயக்­கு­நர்

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2019

குடி­யு­ரிமை திருத்த மசோ­தா­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து, மத்­திய அரசு வழங்­கிய பத்­மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க போவ­தாக மணிப்­புரி மொழி முது­பெ­ரும் திரைப்­பட இயக்­கு­நர் அரி­பம் சியாம் சர்மா (83) தெரி­வித்­துள்­ளார்.

மணிப்­புரி மொழி­யில் பல வெற்­றிப் படங்­களை இயக்­கி­ய­வர் அரி­யம் சியாம் சர்மா. இவ­ருக்கு மத்­திய அரசு கடந்த 2006ம் ஆண்டு பத்­மஸ்ரீ விருதை வழங்கி கௌர­வித்­தது.

இது பற்றி சர்மா கூறி­யி­ருப்­ப­தா­வது, “குடி­யு­ரிமை திருத்த மசோதா வட­கி­ழக்கு பிராந்­தி­யத்­திற்கு எதி­ரா­னது. குறிப்­பாக மணிப்­புர் மாநில மக்­க­ளுக்கு எதி­ரா­னது. அந்த மசோதா தொடர்­பாக மத்­திய அர­சின் நிலை­பாட்டை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்று வட­கி­ழக்கு பிராந்­திய அர­சி­யல்­கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கோரிக்கை விடுத்­த­னர். ஆனால் அந்த மசோ­தாவை நிறை­வேற்­று­வ­தில் உறு­தி­யாக இருப்­ப­தாக பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து மத்­திய அரசு வழங்­கிய பத்­மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க முடிவு செய்­துள்­ளேன். இந்த மசோதா நிறை­வேற்­றப்­பட்­டால் மணிப்­பூர் மக்­க­ளுக்கு இட­மி­ருக்­காது. இந்த மசோதா வட­கி­ழக்கு பிராந்­தி­யத்­திற்கு எதி­ரா­னது. இதை எதிர்த்து என்­னால் எது­வும் செய்ய முடி­யாது. இத­னால் எனது எதிர்ப்பை தெரி­விக்­கும் வகை­யில், பத்­மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க முடிவு செய்­துள்­ளேன்ற” என்று கூறி­யுள்­ளார்.