சிறந்த ஆசி­ரி­யர்!

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2019

திண்­டுக்­கல் மாவட்­டம், அம்­மைய நாயக்­க­னுார், அரசு பள்­ளி­யில், 1976 முதல், 1981 வரை, படித்த போது நடை­பெற்ற சம்­ப­வம்...

அறி­வி­யல் ஆசி­ரி­யர் திரு­நா­வுக்­க­ரசு, ஏதோ கேள்வி கேட்க, நான் குறும்­பாக பதில் சொல்ல, கன்­னத்­தில் ஓங்கி போட்­டார் ஒரு அடி... மயங்கி விழுந்­தேன். 'ரொம்ப ஏழ்­மை­யான குடும்­பம் சார்... மாதத்­தில் பாதி நாள் பட்­டி­னி­யாக தான் வரு­வான். ஆனா, நல்லா படிப்­பான் சார்...' என்று சக மாண­வர்­கள், கூறி­யுள்­ள­னர்.

மறு­நாள் மதி­யம், அறி­வி­யல் ஆசி­ரி­யர், அவ­ரது அறைக்கு வர சொன்­ன­தாக, நண்­பர்­கள், கூறி­னர்.

'மீதி அடியை வாங்­கப் போறோம்' என்று எண்­ணி­ய­படி, ஆசி­ரி­யர் அறைக்­குச் சென்­றேன்.  என்னை உள்ளே அழைத்து, தரை­யில் அமர்த்தி, ஒரு டிபன் கேரி­ய­ரில் இருந்து உணவு தந்து, சாப்­பி­டச் செய்­தார்.

'இனி, பள்­ளிக் கூடம் இருக்­கும் நாட்­க­ளில் எல்­லாம், நான் உனக்­குச் சாப்­பாடு எடுத்து வரு­வேன். நீ சாப்­பி­ட­ணும்...' என்று, அன்­புக் கட்­ட­ளை­யும் இட்­டார்.

ஒரு நாள், இரண்டு நாட்­கள் அல்ல... ஒன்­றரை ஆண்­டு­கள், அவ­ரது ஊரான, நிலக்­கோட்­டை­யி­லி­ருந்து, 6 கி.மீ., துாரம் உள்ள, பள்­ளிக்கு வந்து, எனக்கு உண­வ­ளித்து, கல்­வி­யு­டன், கனி­வும் புகட்­டி­ய­வர் அவர். நானும், 'உண­வில்லை' என்­போர்க்கு இன்று உண­வ­ளித்து வரு­கி­றேன். அவர் முகம், என் மனக்­கண்­ணில் இன்­றும், நிற்­கி­றது!

–- வி.பாலன், திருப்­பூர்.