உனக்கு பிறந்த நாள் எப்ப...!

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2019

என் வயது, 53; சத்­தி­ரிய மக­ளிர் பெண்­கள் மேல்­நி­லைப் பள்­ளி­யில், 1970ல் படித்த போது நடந்த நிகழ்ச்சி!

பிறந்த நாள் என்­றால் பள்­ளிக்கு, புது உடை உடுத்தி வர­லாம். அன்று, வகுப்பு தோழி­கள் அனை­வ­ருக்­கும், மிட்­டாய் தரலாம்.

எனக்கு அப்பா கிடை­யாது; அம்மா, கூலி வேலை செய்து, பள்­ளிக்கு அனுப்­பி­னார். நான் பிறந்த நாள் கொண்­டா­டி­யது கிடை­யாது. அனை­வ­ரும், புது உடை அணிந்து, பிறந்த நாள் மிட்­டாய் கொடுக்­கும் போது, ஏக்­க­மாய் பார்ப்­பேன்.

'உனக்கு பிறந்த நாள் எப்ப...' என்று வகுப்­பில் யாரா­வது கேட்­டால், எனக்கு அழுகை வந்து விடும்.

ஒரு நாள், வகுப்­பிற்கு வந்­த­வு­டன், வகுப்­பா­சி­ரியை மேரி, என்னை அழைத்­தார்.

'இன்று, நம் வகுப்­பில் படிக்­கும் சேர்­மத்­தாய்க்கு பிறந்த நாள்! அனை­வ­ரும், பிறந்த நாள் பாட்டு பாடுங்­கள்...' என்­றார்.

அனை­வ­ரும் பாட்­டுப் பாடி, வாழ்த்து தெரி­வித்­த­னர்; புது பள்ளி சீருடை வாங்கி தந்­த­னர். எல்­லா­ருக்­கும் மிட்­டாய் கொடுக்க சொல்லி, ஆசி­ரியை, ஒரு, 'டப்பா' தந்­தார். எனக்கு மிக­வும் சந்­தோ­ஷ­மாக இருந்­தது.

என் பிறந்த நாளை, பிறப்பு சான்­றி­த­ழில் பார்த்து, கொண்­டா­டி­யது, பின்­னர் தெரிந்­தது.

இன்­றும், என் பிறந்த நாளில், நான் படித்த பள்ளி நினை­வு­க­ளை­யும், மேரி டீச்­ச­ரை­யும் மறக்க முடி­ய­வில்லை!

–- பி.சேர்­மத்­தாய்.