என்னை மன்னித்துவிடுங்கள்!

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2019

அரி­ய­லுார் மாவட்­டம், ஜெயங்­கொண்­டத்­தில் உள்ள, புனித செபஸ்­தி­யார் நடு­நி­லைப் பள்­ளி­யில், 5ம் வகுப்பு படித்த போது, கணித ஆசி­ரி­யர் ப்ராங்­லின், மிக அரு­மை­யாக, கணித பாடத்தை, நடத்­து­வார். பொறுப்­பான, கண்­டிப்­பான ஆசி­ரி­யர்.

'மாண­வர்­கள், மிக­வும் ஒழுக்­க­மாக இருக்க வேண்­டும்' என, கண்­டிப்­பு­ட­னும், சில சம­யம், கோபத்­து­ட­னும் நடந்து கொள்­வார்.

ஒரு சம­யம், கணக்கு பாடத்­தில், வீட்­டுப் பாடம் செய்­ய­வில்லை. ஆனா­லும், என்னை அடிக்­கா­மல், 'நாளைக்கு செய்து முடித்து விடு...' என்று கூறி, பாடம் நடத்­தி­னார்.

அன்று, அவர் பாடம் நடத்­தும் போது, நான் கவ­னிக்­கா­மல், விளை­யா­டி­யதை பார்த்து விட்­டார்.

என்னை எழுப்பி, கேள்வி கேட்­டார்; பதில் தெரி­யா­மல் விழித்­தேன். உடனே, குச்­சி­யால், ஓங்கி கையில் அடித்­தார்.

கை வீங்கி, மறு­நாள், சாப்­பிட முடி­ய­வில்லை. வீட்­டில், அப்பா கேட்ட போது, என் மீது உள்ள தவறை மறைத்து, கணக்கு வாத்­தி­யார் அடித்­ததை மட்­டும் கூறி­னேன்.

பள்­ளிக்கு அப்பா வந்து, தலைமை ஆசி­ரி­ய­ரி­டம் புகார் கூறி, கணக்கு வாத்­தி­யாரை கண்­ட­படி திட்டி சென்­றார்.

அன்று முதல், என் வீட்­டுப் பாடங்­களை திருத்­து­வ­தையோ, என்­னி­டம் பேசு­வ­தையோ, விட்டு விட்­டார் கணித ஆசி­ரி­யர்.

ஆனால், நானோ திமி­ராக, வேறு பள்­ளி­யில், 6ம் வகுப்பு, சேர்ந்­தேன். அரசு உதவி பெறும், அந்த உயர்­நி­லைப் பள்­ளி­யில், 6ம் வகுப்­பில், கணித ஆசி­ரி­யரே நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ஐந்து மாத்­திற்­குப் பின், ஒரு ஆசி­ரி­யர் நிய­மிக்­கப்­பட்­டார்.

அப்­போது தான், 'ப்ராங்­லின் ஆசி­ரி­யர் எவ்­வ­ளவு அழ­காக, கணக்கு பாடம் சொல்லி கொடுப்­பார், அவரை இப்­படி உதா­சீ­னப்­ப­டுத்தி விட்­டோமே' என்று வருந்­தி­னேன்.

அதன்­பின், இரண்டு முறை அந்த பள்­ளிக்கு சென்று, கணித ஆசி­ரி­ய­ரி­டம் மன்­னிப்பு கேட்க முயன்­றேன்; ஆனால், சந்­திக்க முடி­ய­வில்லை. பணி மாறு­த­லால், வேறு பள்­ளிக்கு சென்று விட்­ட­தாக அறிந்து, கண் கலங்­கி­னேன்.

நான், இப்­போது, இன்­ஜி­னி­ய­ரிங் முடித்து, நல்ல பணி­யில், மன­நி­றை­வான வாழ்­வில் இருந்­தா­லும், இன்­றும் என் தவறை எண்ணி வருந்­து­கி­றேன்.

மனம் திருந்தி, ப்ராங்­லின் ஆசி­ரி­ய­ரின் காலில் விழுந்து, மன்­னிப்பு கேட்­கி­றேன்; தயவு செய்து என்னை மன்­னித்து விடுங்­கள் சார்!

–- கே.பிரேமா, சென்னை.