வங்கியில் வேலை பார்த்த ஸ்பைடர்மேன்!

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2019

பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரில் ஒரு தனியார் வங்கி உள்ளது. அங்கு வேலை பார்த்து வந்த பணியாளர், தனது கடைசி வேலை நாளில் ஸ்பைடர்மேன் போல உடை அணிந்து வந்து அசத்தி உள்ளார். நாள் முழுவதும் ஸ்பைடர் உடையில் வலம் வந்தவரைப் பார்த்து வாடிக்கையாளர்களும் அவரின் சக ஊழியர்களும் உற்சாகமடைந்தனர். வங்கி வாடிக்கையாளர் ஒருவர் ஸ்பைடர்மேன் ஊழியரை மொபைலில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டார். அவரின் பெயரோ, எந்த வங்கியின் கிளை என்ற தகவல்களோ பகிரப்படவில்லை. ஆனாலும் ஸ்பைடர்மேன் ஊழியரின் வீடியோ உலகளவில் பலராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது. யுட்டியூப் தளத்தில் இவரின் வீடியோவை ஒரே வாரத்தில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். வீடியோ சுட்டி: https://tinyurl.com/bk-spider-man