இசைக்­குழு நடத்­தி­ய­வர் இசை­ய­மைப்­பா­ள­ரா­னார்! – கம­லக்­கண்­ணன்

29 ஜனவரி 2019, 03:26 PM

இயக்­கு­நர் கேயா­ரின் அசோ­சி­யேட் எம். ஜெயப்­பி­ர­காஷ் இயக்­கும் படம் ‘வான­ரப்­படை’. குழந்­தை­களை மைய­மாக வைத்து உரு­வா­கும் இதில் முக்­கி­ய­மான வேடத்­தில் அவந்­திகா நடிக்­கி­றார். இந்த படத்­தின் மூலம் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­றார் கம­லக்­கண்­ணன். அவ­ரி­டம் முதல் இசைப் பயண அனு­ப­வத்­தைப் பற்­றிக் கேட்­டோம்.

‘‘எனக்கு சொந்த ஊர் காஞ்­சி­பு­ரம். சின்ன வய­தி­லி­ருந்தே இசை ஆர்­வம் அதி­கம். சுற்று வட்­டா­ரத்­தில் கோயில் திரு­விழா, அர­சி­யல் நிகழ்ச்­சி­க­ளில் இசைக் கச்­சேரி நடந்­தால் முதல் ஆளாக சீட் பிடித்து கச்­சே­ரியை ரசிப்­பேன்.‘வான­ரப்­படை’ இயக்­கு­நர் எம். ஜெயப்­பி­ர­காஷ் என்­னு­டைய பால்­ய­கால நண்­பர். என்­னு­டைய இசை ஆர்­வத்­தைப் பார்த்­து­விட்டு அவர்­தான் முறைப்­படி இசை கற்­றுக்­கொள்ள ஐடியா கொடுத்­த­தோடு இசைப்­பள்­ளி­யி­லும் சேர்த்து விட்­டார்.

இப்­போது அவரே ‘வான­ரப்­படை’ படத்­தில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றார். எல்­லோ­ருக்­கும் இப்­ப­டி­யொரு நட்பு கிடைக்­குமா என்று தெரி­ய­வில்லை. எனக்கு அப்­ப­டி­யொரு நட்பு கிடைத்­தி­ருப்­பதை பாக்­கி­ய­மா­கப் பார்க்­கி­றேன்.

இசைத்­து­றை­யில் என்­னு­டைய மான­சீக குரு, இளை­ய­ராஜா. ஆனால் நான் இசை­ய­மைப்­பா­ள­னாக உரு­வாக இன்ஸ்­பி­ரே­ஷ­னாக இருந்­த­வர் ஏ.ஆர். ரஹ்­மான். ஆர்க்­கெஸ்ட்­ராப்­ளே­ய­ராக இருந்­தேன் நான். ரஹ்­மா­னின் நுட்­ப­மான இசைத்­தி­றன் எனக்­குள் இசை­ய­மைக்­கும் ஆர்­வத்­தைத் தூண்­டி­யது.

‘வான­ரப்­படை’  படத்­தில் மொத்­தம் நான்கு பாடல்­கள். ஸ்டார் இமேஜ் உள்ள நடி­கர்­க­ளுக்கு ஒர்க் பண்­ணு­வ­தற்­கும் குழந்­தை­கள் நடிக்­கும் படத்­துக்கு ஒர்க் பண்­ணு­வ­தற்­கும் நிறைய வித்­தி­யா­சங்­கள் இருக்­கின்­றன. ‘அஞ்­சலி… அஞ்­சலி…’ ஸ்டைலில் உரு­வா­கி­யுள்ள ‘வான­ரப்­ப­டை­கள்’ என்ற பாடல் சிறி­ய­வர்­கள் மட்­டு­மில்­லா­மல் பெரி­ய­வர்­கள் மத்­தி­யி­லும் வர­வேற்பு பெறும் வகை­யில் பிர­மா­த­மாக வந்­தி­ருக்­கி­றது.

‘ஆனந்த யாழை மீட்­டு­கி­றாள்’ ஸ்டைலில் அப்பா –- மகள் பாசத்தை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டிய பாட­லும் தனித்­து­வ­மாக வந்­தி­ருக்­கி­றது. ‘சொடக்கு மேல’ அந்­தோணி உட்­பட முன்­னணி பாட­கர்­கள் பாடி­யி­ருக்­கி­றார்­கள்.

ஒரு படத்­துக்கு இசை முன்­னோட்­டம் மாதிரி. அந்த வகை­யில் ஒரு படத்­தின் இசை­யில் இசை­ய­மைப்­பா­ள­ரின் பங்­கும் எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே­ய­ள­வுக்கு இயக்­கு­ந­ருக்­கும் பொறுப்பு இருக்­கி­றது. ஏனென்­றால், பாடல்­களை தேர்வு செய்­வ­தில் இயக்­கு­நர்­க­ளுக்கு அதிக பங்கு உண்டு. அடிப்­ப­டை­யில் இசை ரசி­கர்­க­ளாக இருக்­கும் இயக்­கு­நர்­க­ளின் படங்­க­ளில் இசை நன்­றாக வந்­தி­ருப்­ப­தைக் கவ­னிக்­க­லாம்’’ என்­கி­றார் இவர்.