அரை­யி­று­தி­யில் சாய்னா

பதிவு செய்த நாள் : 26 ஜனவரி 2019 00:44


புது­டில்லி:

இந்­தோ­னே­ஷி­யா­வில் நடை­பெற்று வரும் இந்­தோ­னே­ஷிய மாஸ்­டர்ஸ் பேட்­மின்­டன் போட்­டி­கள் இப்­போது அரை­யி­று­திக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளன. இதில் நேற்று நடை­பெற்ற காலி­று­திப் போட்­டி­யில் வெற்றி பெற்ற இந்­திய வீராங்­கனை சாய்னா அரை­யி­று­திப் போட்­டிக்­குள் நுழைந்­துள்­ளார்.

* இந்­தி­யா­வின் சாய்னா நேவால் ஒற்­றை­யர் பிரிவு காலி­று­திப் போட்­டி­யில் தாய்­லாந்து வீராங்­கனை சோசூ­வாங் போர்ன்­பா­வீயை எதிர் கொண்டு விளை­யா­டி­னார். இந்­தப் போட்­டி­யில் சாய்னா 21–7, 21–18 என்ற செட்­க­ளில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திப் போட்­டிக்­குள் நுழைந்­தார்.

* ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு காலி­று­திப் போட்­டி­யில் விளை­யா­டிய இந்­தி­யா­வின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்­தோ­னே­ஷி­யா­வின் கிறிஸ்­டியை எதிர் கொண்டு விளை­யா­டி­னார். இந்­தப் போட்­டி­ய­தில் 18–21 மற்­றும் 19–21 என்று இரண்டு செட்­க­ளில் தோல்­வி­ய­டைந்து, தொட­ரில் இருந்து வெளி­யே­றி­னார்.

* இந்­தி­யா­வின் மற்­றொரு நட்­சத்­திர வீராங்­க­னை­யான சிந்து, ஸ்பெயின் நாட்­டின் வீராங்­கனை கரோ­லினா மரினை எதிர் கொண்டு விளை­யா­டி­னார். இதில் 11–21, 12–21 என்ற செட்களில் சிந்து தோல்வியடைந்தார்.