ஆட்டத்தின் இடையே `ஆட்டம்' கண்டு ரசித்த இந்திய வீரர்கள்

பதிவு செய்த நாள் : 26 ஜனவரி 2019 00:41


மவுன்ட் மங்­கானு:

இந்­தியா – நியூ­சி­லாந்து அணி­கள் மோதும் 5 போட்­டி­கள் கொண்ட ஒரு­நாள் கிரிக்­கெட் தொட­ரின் 2வது போட்டி, இன்று காலை 7.30 மணிக்கு நியூ­சி­லாந்­தில் உள்ள அழ­கிய சுற்­றுலா தல­மான மவுன்ட் மங்­கானு நக­ரில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தத் தொட­ரின் முதல் போட்­டி­யில் இந்­திய அணி 8 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்று, 1–0 என்ற புள்­ளி­கள் கணக்­கில் தொடர் முன்­னி­லை­யில் உள்­ளது. இந்­நி­லை­யில், இன்று நடை­பெ­ற­வுள்ள 2வது போட்­டிக்­காக இந்­திய அணி­யி­னர் மவுன்ட் மங்­கானு மைதா­னத்­தில் முகா­மிட்­டுள்­ள­னர்.

முன்­ன­தாக, நேற்று காலை மவுன்ட் மங்­கானு நக­ருக்கு சென்­ற­டைந்த அவர்­க­ளுக்கு, கிரிக்­கெட் மைதா­னத்­தில் பாரம்­ப­ரிய முஐ­றப்­படி வர­வேற்பு வழங்­கப்­பட்­டது. மவுன்ட் மங்­கானு நக­ரில் வசிக்­கும் பழங்­கு­டி­யின மாவோரி பழங்­கு­டி­யின மக்­கள், தங்­கள் பாரம்­ப­ரிய உடை­கள் அணிந்து, இந்­திய அணிக்கு உற்­சாக வர­வேற்பு வழங்­கி­னர். அப்­போது, தங்­கள் மண்­ணின் ஹாகா நட­னத்தை ஆடி, இந்­திய அணி­யி­னரை அவர்­கள் மகிழ்­வித்­த­னர்.

அவர்­க­ளது வர­வேற்­புக்கு இந்­திய அணி நிர்­வா­கம் நன்றி தெரி­வித்­துக் கொண்­டது. இதன்­பின்­னர், அம்­மக்­கள் நமது அணி­யின் வீரர்­கள் மற்­றும் நிர்­வா­கி­க­ளு­டன் இணைந்து போட்டோ எடுத்­துக் கொண்­ட­னர். இந்த மக்­கள் கிபி 1250 முதல் 1300 ஆண்­டு­க­ளில், கிழக்கு பாலி­னீ­சி­யா­வில் இருந்து அங்கு குடி­யே­றி­ய­வர்­கள் என்­பது  குறிப்­பி­டத்­தக்­கது.