அசத்துமா கோஹ்லி படை..: சிட்னியில் முதல் சவால்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2019 08:13


சிட்னி:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. டெஸ்ட்டை தொடர்ந்து இந்த தொடரையும் இந்தியா கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆஸ்திரேலியா செனன்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இதன் முதலாவது போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 72 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இ;;த நிலையில், ஒருநாள் தொடரிலும் இந்தியா அசத்தும் என நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் வரும் மே மாதம் உலக கோப்பை ஒருநாள் தொடர் நடக்கிறது. இதற்கு முன் இந்திய அணி 13 சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. தற்போது ஆஸி.,க்கு எதிராக 3 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அடுத்து நியூசிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் பின் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸி., அணி 5 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. இதையடுத்து ஐ.பி.எல்., சீசன்&12 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

எனனே உலக கோப்பைக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் 13 போட்டிகள் வீரர்களுக்கு முக்கிய் வாய்ந்ததாக அமைகிறது. இதில், சொதப்பும் வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்படும். இந்த தொடரில் இளம் வீரர் ரிஷாப் பன்டிற்கு வாய்ப்பு கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வரும் லோகேஷ் ராகுலுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கிறது என தெரியவில்லை. அதோடு, மூன்றுவித கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வருவதால் ஆஸி., மற்றும் நியூசிலாந்து தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை. இதவும் புரியாத புதிராக உள்ளது.

இருந்த போதும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வலிமையாக உள்ளது. தவான், தோனி, ராயுடு, ஜாதவ், பாண்ட்யா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இன்றை போட்டியில் 6 பேட்ஸ்மேன் (ரோகித், தவான், ராயுடு, கோஹ்லி, ஜாதவ், தோனி) ஒரு ஆல்&ரவுண்டர் (பாண்ட்யா), 2 சுழற்பந்து வீச்சாளர்கள் (சகால், குல்தீப்), 2 வேகங்கள் (புவனேஷ்வர், கலீல் அகமது) ஆகியோருடன் களமிறங்க இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிட்னி டெஸ்டில் அசத்திய ‘சைனாமேன்’ ஒருநாள் தொடரிலும் ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரலாம் என நம்பப்படுகிறது. பவுலிங், பீல்டிங் இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் ஆஸி.,யை வீழ்த்துவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது.

ஆஸி.,யைப் பொறுத்த வரை டெஸட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதே நேரம் ஸ்டீவ் ஸமித், வார்னர் இல்லாமல் களமிறங்கும் ஆஸி., அணி சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. அதோடு, ஆல்&ரவுண்டர் மிட்சல் மார்ஷ், உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸி.,க்கு மேலும் சிக்கலை கொடுத்துள்ளது. மார்ஷ் இடத்தில் புதுமுக வீரர் ஆஷ்டன் டர்னர் 25, சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 3 சர்வதேச டுவென்டி&20 போட்டியில் விளையாடி உள்ள இவர், பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

டெஸ்ட் தொடரில் கேப்டன் ஆரோன் பின்ச், ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதே நேரம் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் வரவு அணியை ஓரளவு பலப்படுத்தி உள்ளது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்பதால் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆஸி., ஆடுகளத்தில் ரிச்சர்ட்சன், சிடில், ஸ்டான்லேக் அடங்கிய வேக கூட்டணி எப்படி செயல்படும் என தெரியவில்லை. சுழலில் நாதனன் லியான், ஜாம்பா இருவரும் அசத்த தயாராக உள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்தோடு காணப்படும் ஆஸி., அணிக்கு டெஸ்ட் போட்டியைப் போல இந்த தொடரும் கடும் சவால்கள் நிறைந்தது என்பதில் சந்தேகமில்லை

முதல் வெற்றிக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு துவங்கும் இப்போட்டியை சோனனி டென் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஓளிபரப்பு செய்கிறது.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 128 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 73 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 43 போட்டிகளில் மட்டுமே இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. 10 ஆட்டம் ரத்தாகி உள்ளது.