பெருநகரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சிறப்பு தனிப்பாதை அமைக்க சுரேஷ் பிரபு வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:10

புது டில்லி,

   இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களுக்கென சிறப்பு தனிப்பாதை அமைக்க வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்தார்.கடந்த சில வருடங்களில் சைக்கிளின் பயன்பாடு முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் சூற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல் ஆரோக்கியம் பெரும்பாதிப்படைகிறது..

இந்நிலையில் சூற்றுச்சூழலின் நன்மைகளை ஊக்குவிக்கும் விதமாக டெரி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் சுரேஷ் பிரபு உரையாற்றினார். அப்பொழுது இன்று இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள் குறித்து பேசினார். 

இக்காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான தனிப்பாதை மற்றும் நடைபாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

சைக்கிள் ஓட்டுவதால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதனால் சுற்றுச்சுழல் மாசுப்பாட்டையும் குறைக்க முடியும் என அவர் கூறினார்.

இதையடுத்து சைக்கிள் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கும் தொழில் அமைச்சகத்தில் கவுன்சில் ஒன்று அமைக்கப்படும் எனவும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.