சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி- வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 12:12

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வல்லூர் அனல்மின் நிலையம் இன்று மூடப்பட்டது.

திருவள்ளூர் - வல்லூரில் இயங்கி வரும் அனல் மின்நிலையத்தின் 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் வல்லூர் அனல் மின்நிலைய நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வல்லூர் அனல் மின் நிலையம் தொடர்ந்து செயல்பட தடை விதித்து உத்தரவிட்டார்கள்.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வல்லூர் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

 ஆலை நிர்வாகம் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.