அன்­பான தமி­ழம்மா!

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019

நான் அர­சுப் பள்­ளி­யில், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்­ப­வம்! எங்­கள் தமிழ் ஆசி­ரியை, மாணவ, மாண­வி­யரை, தம் பிள்­ளை­களை போல நினைத்து, அன்­பாக பாடம் நடத்­து­வார். அவ­ருக்­குக் கோபமே வராது. நாங்­க­ளும், அவ­ரி­டம் பயம் இல்­லா­மல், அரட்டை அடிப்­போம்.

ஆனால், அறி­வி­யல் ஆசி­ரியை மிக­வும் கண்­டிப்­பா­ன­வர். எப்­போ­தும், கையில், பிரம்­பு­டன், கண்­க­ளும், வாயும் சிவந்­தி­ருக்க வெற்­றிலை போட்­டப்­படி, காளி போல், உக்­கி­ர­மா­கவே இருப்­பார். சிறு தவ­றுக்­கும், புறங்­கையை நீட்­டச் சொல்லி, மூட்­டில் அடிப்­பார்; அவ­ரைக் கண்­டாலே, பயத்­தில், ஓடி ஒளி­வோம். ஒரு சம­யம், தமிழ் தேர்­வில், ஒரு கேள்­விக்கு, 'அறி­வி­யல் டீச்­சரை கண்­டால், கீரி­யைக் கண்ட, பாம்பு போல் நடுங்­கு­வோம்' என்று எழுதி விட்­டேன். மறு­நாள், என் தோழி, பத்­மி­னி­யு­டன், ஆசி­ரி­யர்­கள் அறை பக்­கம் சென்ற போது, தமிழ் ஆசி­ரியை என்னை அழைத்­தார்.

அவ­ரது கையில், என்­னு­டைய தமிழ் தேர்வு தாள் இருந்­தது. உள்ளே, அறி­வி­யல் ஆசி­ரி­யை­யும் இருந்­தார். அவ­ரைக் கண்­ட­தும், என் தோழி ஓடி விட்­டாள்.

பயந்­த­ப­டியே நின்­றி­ருந்த என்­னைப் பார்த்து, 'அட... உண்­மையை தானே எழு­தி­யி­ருக்கே... நல்லா எழு­தி­யி­ருக்கே...' என்று சிரித்­த­ப­டியே, பாராட்­டி­னார்; எனக்கு கிடைத்த முதல் பாராட்டு இது!

–- பிரேமா,

அகஸ்­தி­யா­பு­ரம்.