பயம் போச்சு!

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019

நான், 2013ல், திண்­டுக்­கல் மாவட்­டம், வத்­த­லக்­குண்டு, இக்­பா­லியா உயர்­நி­லைப் பள்­ளி­யில், 7ம் வகுப்பு படித்த போது, எனக்­குள் இருந்த பேச்சு திற­மையை வெளிக் கொண்டு வந்­த­வர், வகுப்­பாசி ரியர் ராபியா. அவர், ஒரு தமி­ழா­சி­ரி­யர்.சுந்­திர தின விழா­வில் பேசு­வ­தற்­காக, கலந்து கொண்­டேன்.

அப்­போது, என் ஆசி­ரி­யர், பயிற்சி அளிப்­ப­தற்­காக, ஒன்­றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை அழைத்­துச் சென்று, அனை­வ­ரது முன்­னி­லை­யி­லும் பேச வைத்­தார். அப்­படி பேசி­ய­தால், எனக்­குள் இருந்த பயம் போனது.

பின், சுதந்­திர தின விழா­வில் அரு­மை­யாக பேசி­னேன். அதன்­பின், பல மேடைப் பேச்­சுக்­க­ளில் வாய்ப்பு கிடைத்­தது. எனக்­குள் இருந்த பயத்தை போக்க, அவர் மேற்­கொண்ட முயற்­சி­யால், இன்­ற­ள­வும், அனைத்­துப் பேச்­சுப் போட்­டி­க­ளி­லும் கலந்து வரு­கி­றேன். இன்று, கல்­லுா­ரி­யில் நடக்­கும் பட்­டி­மன்­றங்­க­ளில், பங்கு பெற கார­ணம், என் ஆசி­ரி­யர் ராபியா தான்!

–- த. சுந்­த­ரேஸ்­வ­ரன், பெரு­மாள்­பு­ரம்.