ஆயி­ரம் கேள்­வி­கள்! ஆயி­ரம் பதில்­கள்!

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019

* சிஎன்ஓ சுழற்சி பிர­பஞ்­சத்­தின் வயதை எவ்­வாறு நிர்­ண­யிக்­கி­றது?
‘பெரு­வெ­டிப்’­­பின் (Big Bang) கார­ண­மாக, பிர­பஞ்­சம் தோன்­றி­ய­தி­லி­ருந்து அதன் வயதை நாம் கணக்­கி­டு­கி­றோம். விஞ்­ஞா­னி­கள், பிர­பஞ்­சத்­தின் வய­தைப் பல்­வேறு வழி­க­ளில் கணக்­கி­டு­கி­றார்­கள். சிஎன்ஓ அல்­லது கார்­பன் – நைட்­ர­ஜன் – ஆக்­சி­ஜன் சுழற்சி அவை­க­ளில் ஒன்று. ஹான்ஸ் பெதே 1938–ல் குறிப்­பிட்ட அணுக்­கரு சேர்க்கை வினையே (fusion reaction) சிஎன்ஓ சுழற்சி என்­ப­தா­கும். இந்­தச் சுழற்­சி­யின் படி, பிர­பஞ்­சத்­தின் வயது 14.7 பில்­லி­யன் வரு­டங்­கள். இந்த அணுக்­கரு சேர்க்கை நிகழ்­வில், பல கட்­டங்­க­ளில் பல­வி­த­மான அணுக்­கள், ஒன்­று­டன் ஒன்று இணை­கின்­றன. கடை­சி­யாக ஹைட்­ர­ஜன் ஹீலி­ய­மாக மாறு­வ­து­டன் இந்த சேர்க்கை முடி­வு­று­கி­றது. இந்த தொடர் நிகழ்­வு­கள் இவ்­வாறு நிகழ்­கின்­றன.
கார்­பன் 12 அணுக்­கரு (nucleus) ஹைட்­ர­ஜன் 13 ஆக மாறு­கி­றது. நைட்­ர­ஜன் 13 நிலை­யற்­றது. எனவே அது கார்­பன் 13 அணுக்­க­ரு­வாக பிள­வு­ப­டு­கி­றது. கார்­பன் 13 அணுக்­கரு, ஹைட்­ர­ஜ­னு­டன் சேர்ந்து நைட்­ர­ஜன் 14 அணுக்­க­ரு­வாக மாறு­கி­றது. நைட்­ர­ஜன் 14வும் ஹைட்­ர­ஜ­னும் சேர்ந்து ஆக்­சி­ஜன் 18 உரு­வா­கி­றது. ஆக்­சி­ஜன் 18 நைட்­ர­ஜன் 15 அணுக்­க­ரு­வாக பிள­வு­ப­டு­கி­றது. கடை­சி­யில் நைட்­ர­ஜன் ௧௫ அணுக்­க­ரு­வும் ஹைட்­ர­ஜ­னும் சேர்ந்து கார்­பன் ௧௨ அணுக்­க­ரு­வை­யும் ஹீலி­யம் அணுக்­க­ரு­வை­யும் உரு­வா­கின்­றன.

குறுஞ்­செய்தி

‘வில்­கின்­சன் மைக்­ரோ­வேவ் அனி­சொட்­ரோபி ப்ரோப்’ (WMAP) என்­பது அமெ­ரிக்க விண்­வெ­ளிக் கழ­கம் ‘நாசா’ அனுப்­பிய ஒரு செயற்­கைக் கோள் (Satellite) இந்த செயற்­கைக் கோள் அனுப்­பிய தக­வல்­க­ளின்­படி பிர­பஞ்­சத்­தின் வயது சுமார் 13.7 பில்­லி­யன் வரு­டங்­கள்.