ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 09–1–19

08 ஜனவரி 2019, 04:09 PM

எஸ். ஜானகி பாட முடி­யா­மல் அழு­தார்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

காரைக்­குடி நாரா­ய­ணன் இந்த ஆண்­டில் ஒரு படம் தயா­ரிக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தார். இவர் கதை -– வச­னம் எழு­திய நிறைய படங்­கள் 1976-க்கு முன்பு நன்­றாக ஓடிக்­கொண்­டி­ருந்­தன. இந்த ஆண்­டில் இவர் தயா­ரிக்க நினைத்த படத்­திற்கு ‘அச்­சாணி’ என பெயர் சூட்டி படத்­திற்கு இசை­ய­மைக்க இளை­ய­ரா­ஜாவை ஒப்­பந்­தம் செய்­தார்.

‘அச்­சாணி’ படத்­தின் பெய­ரைக் கேட்­டாலே எனக்கு சட்­டென ஞாப­கத்­திற்கு வரு­வது இந்த விஷ­யம்­தான். அது... படத்­தின் பூஜை­யன்று பாடல் பதிவு என்­றும் முடிவு செய்­யப்­பட்­டது. படத்­தின் கதையை கேட்ட ராஜா, இயக்­கு­னர் கேட்­டது போல இரண்டு பாடல்­களை கம்­போஸ் செய்து வாலியை வைத்து பாடல்­க­ளும் எழுதி தயார் நிலை­யில் இருந்­த­னர்.

‘‘மாதா உன் கோயி­லில் மணி­தீ­பம் ஏற்­றி­னேன்’’, ‘‘தாலாட்டு பிள்ளை என்னை தாலாட்டு’’ என இரண்டு பாடல்­கள்.

சவுண்டு இன்­ஜி­னி­யர் இந்த படத்­தின் பூஜை தினத்­தன்றே வேறொரு படத்­திற்­கும் (இசை­ய­மைப்­பா­ளர் உபேந்­தி­ர­கு­மார்) ரிக்­கார்­டிங் செய்ய ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றார். ஞாப­க­ம­ற­தி­யாலோ அல்­லது காலை 10 மணிக்­குள் யாரா­வது பாடல் பதிவு முடித்து விட்­டால் மதி­யம் 1 மணிக்­குள் அடுத்த பாடல் பதிவை வைத்­துக் கொள்­ள­லாம் என நினைத்­தாரோ என்­னமோ, பூஜை தினத்­தன்று இளை­ய­ராஜா பிர­சாத் ஸ்டூடி­யோ­விற்­குள் வர அங்கே வேறு இசைக்­குழு இருந்­தது. என்ன நில­வ­ரம் என்­பதை தெரிந்து கொண்ட இளை­ய­ராஜா சவுண்டு இன்­ஜி­னி­யர் எஸ்.பி. ராம­னா­த­னி­டம் சென்று யார் ரிக்­கார்­டிங்கை வைத்­துக் கொள்­வது என கேட்க பதில் சொல்ல முடி­யா­மல் சமா­ளித்து பார்த்­தி­ருக்­கி­றார். ஆனால், உபேந்­திர குமாரோ எது பற்­றி­யும் சட்டை செய்­யா­மல் அவ­ரது பாடலை ரிகர்­சல் செய்­யத் தொடங்கி விட்­டார்.

சரி, இனி இங்கே வேலைக்­கா­காது என தெரிந்து கொண்ட இளை­ய­ராஜா வேறு ஸ்டூடி­யோ­விற்கு சென்­றி­ருக்­கி­றார். அங்கே பூஜை­யெல்­லாம் தொடங்கி முடிந்து ரிக்­கார்­டிங் ஆரம்­பிக்­கும் சம­யத்­தில் மிஷின் ரிப்­பேர் ஆகி­விட்­டது. இதற்­குள் மதி­யம் 1 மணியை நெருங்கி விட்­ட­தால் மீண்­டும் பிர­சாத் ஸ்டூடி­யோ­விற்கே சென்­ற­னர். அங்கே மாலை­யில் வேறு ரிக்­கார்­டிங் எது­வும் இல்­லா­த­தால் அங்­கேயே பாடல் பதிவை வைத்­துக் கொள்­ள­லாம் என முடிவு செய்து பாடல் ரிகர்­சல் ஆனது. ஜானகி வந்­த­தும் பாடல் ஒத்­திகை பார்க்­கப்­பட்டு சரி­யாக வரா­த­தால் இரண்டு மூன்று டேக்­கு­கள் போய்­கொண்­டி­ருந்­தன. இளை­ய­ரா­ஜா­விற்கோ நிறைய சங்­க­தி­கள் கற்­ப­னை­யில் வந்து கொண்­டி­ருக்க அவ்­வப்­போது ஜான­கி­யி­டம் சென்று மாற்­றிக்­கொண்டே இருந்­தார். ஒரு டேக் நன்­றாக வந்து கொண்­டி­ருந்­தது. அடுத்து மூன்­றா­வது பின்­னணி இசை சேர்ப்பு தொடங்க வேண்­டும். ஆனால், யாரும் வாசிக்­க­வில்லை. கார­ணம் கண்­டக்ட் செய்த கோவர்த்­தன் சார் கை காட்ட மறந்து விட்­டார். இளை­ய­ரா­ஜா­விற்கோ கோபம். “என்­னண்ணே? டேக் நன்­றாக வந்து கொண்­டி­ருக்­கி­றது. பேக்­கி­ர­வுன்ட் மியூ­ஸிக்­கிற்கு ஏன் கை காட்­ட­வில்லை?” என்று கேட்க அவரோ கூலாக, “பாட்­டில் மெய் மறந்­துட்­டேன்யா” என்­றி­ருக்­கி­றார். (இவ்­வ­ளவு ஒன்­றிய நிலை­யில் கண்­டக்ட் செய்­ப­வரை திட்­டி­விட்­டோமே என்று வருந்­தி­யி­ருக்­கி­றார் இளை­ய­ராஜா). சரி, டேக் போக­லாம் என்று சொல்லி அடுத்த டேக்... ஜானகி பாடும் போது மூன்­றா­வது சர­ணத்­தில்,

“பிள்ளை பெறாத பெண்மை தாயா­னது அன்னை இல்­லாத மகனை தாலாட்­டுது”  என்ற வரி­களை அழ­கா­கப் பாடி­ய­வர் அதற்கு அப்­பு­றம் தொடர்ந்து பாடா­மல் விட்டு விட்­டார். ஆர்க்­கெஸ்­டி­ரா­விலோ எல்­லோ­ரும் அமை­தி­யாக இருந்­தார்­கள். பொது­வாக டேக் கட் ஆனாலே “பேன் போடு” என்று சத்­தம் போடு­ப­வர்­கள் ஒரு சிறு சத்­தம் கூட இல்­லா­மல் இருக்­கி­றார்­களே என்று இளை­ய­ராஜா கோவர்த்­தன் சாரை பார்க்க, அவரோ வாய்ஸ் ரூமை கை காட்­டி­யி­ருக்­கி­றார். ஜானகி கர்ச்­சீப்­பால் கண்­க­ளைத் துடைத்­துக்­கொண்­டி­ருக்க இளை­ய­ராஜா என்­ன­வென்று கேட்க, “டியூ­னும் வார்த்­தை­யும் கலந்து ‘பாவத்­தில்’ ஏதோ ஒன்றை உணர்த்­தி­விட அழுகை வந்­து­விட்­டது. அழு­கை­யோடு பாட­வும் முடி­யா­மல், அழு­கையை நிறுத்­த­வும் முடி­யா­மல் விட்­டு­விட்­டேன்” என்­றா­ராம். ஜானகி இப்­படி சொன்­ன­தைக் கேட்ட எல்­லோ­ரும் உரு­கிப்­போ­னார்­க­ளாம்.

இந்த  “மாதா உன் கோவி­லில்...” பாடலை நீங்­கள் கேட்­டி­ருக்­கி­றீர்­களா?