நாணல்காடு ஸ்ரீ கண்டீஸ்வரர்!

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2019

 வல்­ல­நாடு அரு­கே­யுள்ள ‘தென்­ தி­ரு­நள்­ளாறு’ என்­ற­ழைக்­கப்­ப­டும் நாணல்­காடு கிரா­மத்­தில்  ஸ்ரீ கண்­டீஸ்­வ­ரர் சிவ­காமி அம்­பாள் சமே­த­மாக அருள்பாலித்­து­ வ­ரு­கி­றார்.

சனீஸ்­வ­ரன் என்­றாலே, இனி தென் ­தி­ரு­நள்­ளாறு:

சனீஸ்­வ­ரன் என்­றாலே, நம் எல்­லோ­ருக்­கும் நினை­வுக்கு வரு­வது திரு­நள்­ளாறுதான்.  சனி­ப­க­வா­னுக்கு உரிய பரி­கா­ரத் தல­மா­கத் திகழ்­கி­றது திரு­நள்­ளாறு.  

தர்ப்பை புல்  அடர்ந்து வளர்ந்­தி­ருந்த கார­ணத்­தால், இந்­தப் பகுதி ‘தர்ப்­பா­ரண்­யம்’ என்று முத­லில் வழங்­கப்­பட்­டது. இங்­குள்ள சிவன் சுயம்­பு­வாக தர்ப்­பை­வ­னத்­தில் தோன்­றி­ய­தால் ஈசன் தர்ப்­பைத் தழும்­பு­க­ளு­டன் காட்சி தரு­கி­றார். இங்கு   சனீஸ்­வ­ர­னுக்கு தனி சன்­னிதி இருக்­கி­றது. இரண்டு ஆறு­க­ளுக்கு நடுவே கோயில் அமைந்­தி­ருப்­ப­தால் அதனை ‘திரு­நள்­ளாறு’ என்று ­அழைத்­த­னர்.

இதைப்­போல் அத்­தனை சிறப்பு பெற்ற தலம்­தான் ‘தென்­ தி­ரு­நள்­ளாறு’ என்று அழைக்­கப்­ப­டும் துாத்­துக்­குடி மாவட்­டம் வல்­ல­நாடு அரு­கே­யுள்ள நாணல்­காடு.  

 விஷத்தை அருந்தி மக்­களை காக்­கும் ஸ்ரீ கண்­டீஸ்­வ­ரர்:

ஸ்ரீ என்­றால் விஷம். கழுத்­தில் விஷம் தாங்கி நிற்­கும் பர­மேஸ்­வ­ரன், இங்கு ‘ஸ்ரீ கண்­டீஸ்­வ­ரர்’ எனப்­ப­டு­கி­றார். உலக உயிர்­க­ளைப் பாது­காக்­கும் பொருட்டு, பாற்­க­ட­லைக் கடை­யும் போது, முத­லில் உற்­பத்­தி­யான விஷத்தை சிவன் உண்­டார். பிறர் வாழ, நம்மை இழக்­கச் செய்­யும் தியா­கத்தை, தொண்டு மனப்­பான்­மையை உல­குக்கு எடுத்­து­ரைத்த, தியா­க­ரா­ஜ­ராக இங்கு வீற்­றி­ருக்­கி­றார் எம்­பெ­ரு­மான்.

இக்­கோ­யி­லில் வீற்­றி­ருக்­கும் அம்­பிகை சிவ­காமி அம்­பாள்,  வலக்­கை­யில் தாம­ரைச் செண்­டும், இடக்­கையை தொங்­க­விட்ட படி­யு­மாக கல்­யா­ணத் திருக்­கோ­லத்­தில், பக்­தர்­க­ளுக்­குக் காட்­சி­ய­ளிக்­கி­றார்.

இவர்­களை வணங்­கிச் சிறப்­பிப்­போ­ருக்கு திரு­மணத்தடை நீங்­கப் பெறும். ஈசன் திரு­நள்­ளா­றில் எழுந்­த­ரு­ளி­யுள்­ள­து­போல் தர்ப்­பா­ரண்­யம் என்­னும் நாணல்­காட்­டில் உள்ள, நாணற்­புல்­லில் எழுந்­த­ரு­ளி­யுள்­ளார்.

 கோயிலை சுற்­றி­யும் தர்ப்­பை­ புல் காடு­போல் வளர்ந்­துள்­ளது. என்­றும் வற்­றாக புண்­ணி­ய­ ந­தி­யான தாமி­ப­ரணி கரை­யில், சுற்­றி­லும் ஓங்கி உயர்ந்த பனை மரங்­கள்... பச்சை கம்­ப­ளம் விரித்­தாற்போல் வயல்வெளி­கள்... இப்­படி ரம்­மி­ய­மான சூழ்­நி­லை­யில்  அமைந்­தி­ருக்­கி­றது கண்­டீஸ்­வ­ரர் கோயில்.   திரு­நள்­ளாறு  ஈச­னுக்­கு­ரிய சாந்­நித்­தி­யத்­தோடு  விளங்­கும் சன்­னி­தி­யா­கும்.

 தாமி­ர­ப­ரணி நதி­யில் நீரா­டி­விட்டு, இங்கு வழி­பாடு நடத்­தி­னால், முன்­னோரை நினைவுகூரும் நீத்­தார் கடன் நிறை­வேற்­றி­ய­தற்கு  சமம்.

 ஏழ­ரை­ சனி நடப்­ப­வர்­க­ளும், சனி­ திசை நடப்­ப­வர்­க­ளும் இங்கு வந்து ஈசனை வழி­பட்டு சனி ­ஈஸ்­வ­ர­னுக்கு சிறப்பு அபி­ஷேக ஆரா­த­னை­கள் செய்து வழி­பட்­டால் சனி­யின் சோத­னை­கள் குறை­யும் என்­கி­றார்­கள்.

இந்த கோயிலை கட்­டி­யது யார்...?

இக்­கோ­யி­லில் உள்ள கண்­டீஸ்­வ­ரர் தர்ப்­பை­ புல்­லால் தோன்­றி­ய­வர் என்­றும், அகஸ்­திய முனி­வர் பிர­திஷ்டை செய்­தார் என்­றும் இரு­ க­ருத்­துக்­கள் இருக்­கி­ன்றன. ஆனால், இக்­கோ­யில் வர­கு­ண­ பாண்­டிய மன்­னன் காலத்­தில் கட்­டப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

இங்கு  ஏரா­ள­மான கல்­வெட்­டு­கள் உள்­ளன.   இக்­கோ­யிலை கட்­டி சு­மார் 300 ஆண்­டு­க­ளுக்கு மேல் இருக்­கும் என்­கின்­ற­னர் இப்­ப­குதி மக்­கள்.

 பல ஆண்­டு­க­ளுக்­கு ­முன்பு   புகழ்­பெற்ற கோயி­லாக இருந்த கண்­டீஸ்­வ­ரர் கோயில் தற்­போது பரா­ம­ரிப்பு இல்­லா­மல் சிதி­ல­ம­டைந்து பாழ­டைந்து கிடக்­கி­றது.   பிர­ம்மாண்­ட­மாக இருந்த இக்­கோ­யில் தற்­போது மண்­ட­பங்­கள், மேற்­கூ­ரை­கள் இடிந்து நொறுங்கி கிடக்­கி­றது.

நாணல்­காடு தாமி­ர­ப­ர­ணி­யில் ­கு­ளித்­தால் கங்­கை­யில் குளித்­த­தற்கு சமம்!

திரு­நெல்­வேலி – - துாத்­துக்­குடி நாற்­க­ரச் சாலை­யில் வல்­ல­நாடு அருகே, திரு­நா­மக்­காடு எனப்­ப­டும் நாணல்­காடு அமைந்­துள்­ளது. இந்த ஊரின் கிழக்­குப்­ப­கு­தி­யில்   சிவ­காமி அம்பாள்  ஸ்ரீ கண்­டீஸ்­வ­ரர் ஆல­யத்­தின்  பின்­பு­றம்    வட - தென் திசை­யாக தாமி­ர­ப­ரணி ஆறு ஓடு­கி­றது. காசி­யில் கங்கை வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்கி பாய்­கி­றது. இதைப்­போல் நாணல்­காடு கண்­டீஸ்­வ­ரர் கோயி­லின் பின்­ப­கு­தி­யி­லும்   தாமி­ப­ரணி வடக்­கி­லி­ருந்து தெற்­கு நோக்கி பாய்­வ­தால் இந்­தப்­ப­குதி ‘தெட்­சி­ண­ கங்கை’ என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்த இடத்­தில் பாய்ந்­தோ­டும் நதி தீர்த்­தத்­தில், அனைத்­துப் புண்­ணிய நதி­க­ளின் சங்­க­மம் நடை­பெ­று­வ­தாக ஐதீ­கம்.

இங்­குள்ள தாமி­ர­ப­ரணி நதி தீர்த்­தம், நெல், புல், மூங்­கில் மற்­றும் நாணல் அடர்ந்த பகுதி. நாணல் எனும் தர்ப்­பைப்­புல், சுற்­றுச்சூழ­லின் நண்­பன். நோய்க்­கி­ரு­மி­க­ளைத் துரத்­தி­ய­டிக்க இயற்கை  தந்த, ஒரு கிருமிநாசினி. இத்­த­கைய ஆரோக்­கி­ய­மான, இயற்­கை­யான, இத­மான தட்பவெப்ப சூழ­லில், ஸ்ரீ  கண்­டீஸ்­வ­ரர் அரு­ளாட்சி செய்து வரு­கி­றார்.

சனீஸ்­வ­ர­னுக்கு தனி சன்­னிதி!

திரு­நள்­ளா­று­ போல் இங்­கும் சனீஸ்­வ­ர­னுக்கு தனி சன்­னிதி அமைந்­தி­ருக்­கி­றது. பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு இங்கு சிவ­னுக்­கு­ரிய அனைத்து விழாக்­க­ளும், சனீஸ்­வ­ர­னுக்­கு­ரிய அனைத்து சிறப்பு பரி­கார பூஜை­க­ளும் நடந்­தி­ருக்­கின்றன. இங்கு வந்து சனீஸ்­வ­ர­னுக்கு பரி­கா­ரம் செய்­து­ வ­ழி­பட்­டால் ஸ்ரீ கண்­டீஸ்­வ­ர­ரின் அருள் நிச்­ச­யம் கிடைக்­கும்.

குரு ஓரை­யில் இங்கு சுவா­மிக்கு சிறப்பு அபி­ஷே­கம் மற்­றும் வஸ்­தி­ரங்­கள் சாத்தி வழி­பட்­டால் நினைத்த காரி­யங்­கள் உடனே நிறை­வே­றும் என்­றும், சனி­யின் தாக்­கம் குறை­யும் என்­றும் சொல்கிறார்  இக்­கோ­யி­லின் அர்ச்­ச­கர் சந்­தி­ர­சே­கர். இங்கு சனீஸ்­வ­ர­னுக்கு அரு­கி­லேயே சந்­தான கிருஷ்­ணன் அமர்ந்து அருள்­பா­லிக்­கி­றார். வம்­சத்தை தழைக்க செய்­யும் சந்­தா­ன­கி­ருஷ்­ணன் சனி பக­வான் அரு­கில் இருப்­பது இங்­கு­ ­மட்­டுமே.

இருப்பிடம்:

நெல்­லை­யில் இருந்து துாத்­துக்­குடி செல்­லும் லோக்­கல் பஸ்­கள், வல்­ல­நாடு வரை செல்­லும் டவுன் பஸ்­க­ளில் ஏறி நாணல்­காடு பஸ் ஸ்­டாப்­பில் இறங்கி ஒன்­றரை கிலோ மீட்­டர் நடந்­து­ சென்­றால் முத­லில் வரு­வது ஸ்ரீ கண்­டீஸ்­வ­ரர் கோயில்­தான். கோயில் வரை பஸ் ­வ­ச­தி­யில்லை.

வல்­ல­நாட்­டில் இருந்து ஆட்டோ எடுத்து செல்­ல­லாம். கிரா­மப்­புற கோயில் என்­ப­தா­லும், ஒரே வேளை பூஜை­கள் மட்­டும் இங்கு நடப்­ப­தா­லும் பக்­தர்­கள் கோயி­லுக்கு செல்­லும் முன், கோயில் அர்ச்­ச­கர் சந்­தி­ர­சே­கர் செல்­போ­னில் தொடர்பு கொண்டு (செல் நம்­பர்: 94884 41001) முன்­கூட்­டியே தக­வல் தெரி­வித்­து­விட்டு செல்­வ­து ­நல்­லது.