பொங்கலோ பொங்கல்!

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2019

கண்­கண்ட தெய்­வ­மான கதி­ர­வ­னுக்கு, பொங்கல் திரு­நா­ளில் முறைப்­படி பொங்­க­லிட்­டால் அவ­ரது நல்­ல­ருளை பெற­லாம்.

வீட்டு வாச­லில் திரு­வி­ளக்கை, ஒரு பல­கை­யிட்டு அதன் மேல் வையுங்­கள். பூ சூட்­டுங்­கள். காற்­ற­டிக்­க­லாம் என்­ப­தால் ஏற்ற வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை. நிறை விளக்­காக வைத்­தால் போதும். விளக்­கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்­தில் சாணப்­பிள்­ளை­யா­ரை­யும், செம்­மண்ணை பிடித்து அம்­பா­ளாக கருதியும் வையுங்­கள். இலை­யில் பச்­ச­ரிசி, கிழங்கு, காய்­கறி, வாழைப்­ப­ழம், வெற்­றிலை, பாக்கு படைக்க வேண்­டும். இரண்டு கரும்­பு­களை தோகை­யு­டன் சுவ­ரில் சாய்த்து வையுங்­கள். பச்­ச­ரிசி, வெல்­லம், பழம், தேங்­காய் பல் சேர்த்து தயா­ரித்த காப்­ப­ரி­சியை ஒரு கிண்­ணத்­தில் வைத்­துக் கொள்­ளுங்­கள்.

பச்­ச­ரிசி களைந்த நீரை தயா­ராக வைத்து கொள்­ளுங்­கள். ஒரு பானை­யில் மஞ்­சள் குலை கட்டி, அடுப்­பில் வையுங்­கள். தேங்­காய் உடைத்து, அதி­லுள்ள தண்­ணீரை பானை­யில் விடுங்­கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்­கள்.

பச்­ச­ரிசி களைந்த நீரை பானை­யில் ஊற்­றுங்­கள்.

தண்­ணீர் கொதித்து பொங்­கி­ய­வு­டன், குல­வை­யி­டுங்­கள். குல­வை­யிட தெரி­யா­த­வர் 'பொங்­கலோ பொங்­கல்' என்று உரக்க சொல்­ல­லாம். கொதித்த தண்­ணீரை, எவ்­வ­ளவு அரிசி பொங்க இருக்­கி­றோமோ, அந்­த­ள­வுக்கு முகர்ந்து விட்டு பச்­ச­ரி­சியை இடுங்­கள். நேரம் செல்­லச் செல்ல, எரி­பொ­ரு­ளின் அள­வைக் குறைத்து விடு­வது அவ­சி­யம். இல்­லா­விட்­டால், சாதம் பானை­யில் பிடிக்­கும். பொங்­கல் தயா­ரா­ன­தும் இறக்கி விடுங்­கள். பின்பு, அதே அடுப்­பில் சர்க்­க­ரைப் பொங்­கல் தயார் செய்து விடுங்­கள்.

பொங்­கல் பானை­களை விளக்­கின் முன் வைத்து, பூஜை செய்­யுங்­கள். சூரி­ய­னுக்­கு­ரிய ஸ்லோகம், பாடல் பாடுங்­கள்.

முத­லில், பொங்­கல், பழம் ஆகி­ய­வற்றை ஒரு இலை­யில் வைத்து, காகத்­துக்கு வைக்க வேண்­டும். மதிய வேளை­யில், காய்­கறி சமைத்­த­தும், திரு­வி­ளக்­கேற்றி, ஒரு இலை விரித்து பொங்­கல், சர்க்­க­ரைப் பொங்­கல், காய்­கறி வகை­களை இலை­யில் வைக்க வேண்­டும். அதை முன்­னோ­ருக்கு சமர்ப்­பித்து பூஜை செய்ய வேண்­டும். அதன் பிறகு குடும்­பத்­தார் ஒற்­று­மை­யு­டன் சாப்­பிட வேண்­டும்.

இப்­படி பொங்­க­லிட்டு வழி­பட்­டால் சூரி­ய­ ப­க­வா­னின் அரு­ளால் நல­மு­டன் வாழ்­வீர்­கள்.