பொங்கல் பெருமை!

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2019

உண்­ணும் உண­வான பொங்­கலை இப்­பண்­டி­கை­யின் பெய­ராக வைத்­தி­ருப்­பது வேடிக்­கை­யாக தோன்­ற­லாம். ஆனால் இதன் உண்­மையை உணர்ந்­தால் அதன் பெருமை விளங்­கும். பொங்­கல் என்­பது 'பொங்கு' என்­னும் சொல்­லில் இருந்து வந்­த­தா­கும். வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்­தம் ஆகிய எல்லா நலன்­க­ளும் எல்­லோ­ரின் உள்­ளங்களிலும் இல்­லத்­தி­லும் பொங்க வேண்­டும் என்ற சிந்­த­னையை தரும் விழா. அத­னையே, பொங்­கல் பொங்கி வரும் போது 'பொங்­கலோ பொங்­கல்' என்று வீட்­டில் உள்­ள­வர்­கள் சொல்லி ஆர­வா­ரம் செய்­வர். மங்­கல ஒலி­யாக குல­வை­யிட்டு பானை­யில் அரி­சி­யை­யும், பாலை­யும் இட்டு மகிழ்­வர்.

தை மாத சிறப்பு!

சுபநிகழ்ச்சி நடத்தும் நல்ல மாதமாக தை உள்ளது. பெண்ணுக்கு மணம் பேசும் பெற்றோர், “வரும் தையில் கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்பது வழக்கம். ஏனென்றால், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பர். தை மாதத்தில் பெரும்பாலும் அறுவடை முடிந்து விடும். அதனால், உழவர்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாண செலவு செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் இப்பழமொழி உருவானது. இதற்கு வேறொரு பொருளும் உண்டு. வயலில் அறுவடை முடிந்தால், பயிர் பச்சை இல்லாமல் நடப்பதற்கு வசதியாக, வரப்பு காலியாக இருக்கும். அதனையே 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றனர்.

ஆரோக்கிய கடவுள்!

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் பயனில்லை. அதனால் வாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். ஞாயிறன்று சூரிய ஹோரையில் (காலை 6.00 -– 7.00) செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். 'கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாக சொல்கிறது. சூரியனுக்குரிய ஞாயிறன்று இந்த ஆண்டு பொங்கல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.