ஜாதகப்படி எந்த தொழில் நமக்கு ஏற்றது? – ஜோதிடர் டாக்டர். என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2019

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால், தற்காலத்தில் உத்தியோகம் மனைவி லட்சணம்னு ஆயிடுச்சு. ஏன்னா அந்த காலத்தில் கணவன் ஒருவர் மட்டும் வேலைக்கு போனா போதும்னு இருந்தாங்க. காரணம் அப்போ தேவைகள் குறைவு. இப்போ எல்லா விதத்திலேயும் தேவைகள் அதிகம். ஒருத்தரோட சம்பளம் மட்டும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாம போகுது. அதனால், பெண்களும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

அப்படீன்னா நாம நல்லபடியா வாழ்க்கையை நடத்தணும்னா பணம் தேவைப்படுது. ஆதலால், நாம வேலைக்கு போகணுமா அல்லது தனியா தொழில் செய்யணுமா அல்லது கூட்டுத் தொழில் செஞ்சா லாபம் வருமா போன்ற பல கேள்விகள் நமக்கு தோணும். அப்படி நமக்கு ஒரு தெளிவு ஏற்படணும்னா நாம முதல்ல செய்ய வேண்டியது நம்ம ஜாதகம் என்ன சொல்லுதுன்னு பார்த்துவிட்டு பின்பு நாம முடிவெடுக்கலாம். அதுக்கு ஜாதகம் நமக்கு கைகொடுக்கும். காரணம் என்னவென்றால் ஒருவர் படித்தது ஒன்று, வேலை செய்வது வேறொன்றாக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது நாம் எந்த வேலை செய்ய போேறாம்னு நமக்கு தெரிஞ்சா அதற்கேற்றாற்போல் நாம படிப்பை தீர்மானிக்கலாம் இல்லையா?

உதாரணமா, நடிகை சவுந்தர்யா ஒரு டாக்டர். ஆனால் அவர் திரை உலகில் சம்பாதித்ததுதான் அதிகம். அதே போல நடிகை கவுதமி பொறியியல் படிப்பு படித்து விட்டு நடிகையானார்.  அவர் படித்தது ஒன்று, தொழிலாக அமைந்தது வேறொன்றாக மாறுது. நாம நடிகையாத்தான் வரப் போறோம்னு முன்பே தெரிஞ்சா நாம செய்யும் தொழிலுக்கு ஏற்றாற்போல் நாம படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். சரியா? ஜாதகரீதியா பார்க்கும் போது நாம் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டினை அடிப்படையாகக் கொண்டு தொழிலை தீர்மானிக்கலாம்.

1. மேஷம்

ராணுவத்தில் பணிபுரிதல், குங்குமம் தயாரித்தல், சாயப்பட்டறையில் வேலை செய்வது, அறுவை சிகிச்சை டாக்டராவது, ரத்தப்பிரிவினை கண்டுபிடிக்கும் ஆய்வுக் கூடத்தில் பணிபுரிவது, பொது சேவை, அறுவை சிகிச்சைக்குரிய கருவி தயாரித்தல், விற்றல், துப்பாக்கித் தயாரித்தல்,காவல் துறையில் பணிபுரிதல்,  ரியல் எஸ்டேட் போறவற்றை குறிப்பிடலாம்.

சிறப்பு பலன்:  அஸ்வினி: கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பரணி: உணவுத்துறை சம்பந்தப்பட்ட படிப்பு அக்ரிகல்ச்சர், சமையல் கலை படிப்புகள், உணவு மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்டவை. கார்த்திகை: அரசுத்துறையில் பெரிய வேலை என்று கருதப்படும் படிப்பு, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., போன்றவை.

2. ரிஷபம்

கலைத் துறையான சினிமா, இசைக் கருவிகளை பயன்படுத்துபவர், நடிகர், நடிகையாதல், இயக்குனர், படத் தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், கேமரா மேன், மேக்கப் மேன், சின்ன திரை கலைஞர்கள், காஸ்ட்யூமர், அழகு நிலையம் நடத்துபவர், கணினி துறை போன்றவற்றை குறிப்பிடலாம்.

சிறப்பு பலன்:  கார்த்திகை: பி,எஸ்,சி கார்டியாலிக் டெக்னாலஜி,பி,ஏ தமிழ்த்துறை, கலைத்துறை சம்பந்தப்பட்ட படிப்புகள் நடனம், நடிப்பு, ரோகிணி: கேமராமேன், கடல் சம்பந்தப்பட்ட மெரைன் இன்ஜினியரிங், மிருகசீரிடம்: அரசு வேலை சம்பந்தப்பட்ட படிப்பு, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., போன்றவைகள்.

3. மிதுனம்

பத்திரிகைத் துறை, நேனோ டெக், விவசாயத் துறை, ஜோதிடம், வாக்குத் தொழில், வழக்கறிஞர், இலக்கியத் துறை, அக்கவுன்டண்ட், ஆடிட்டர், வீணை வாசித்தல், புல்லாங்குழல் வாசித்தல், இசைக்கருவிகளை இயக்குதல், பாடல் கற்றல், பைலட், நடனம் கற்றல்,  கதை, கட்டுரைப் படைப்பு, தரகர், கமிஷன் மற்றும் ஏஜென்ட் துறை, வாங்கி விற்கும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், மார்கெட்டிங் துறை, கணினி பொறியாளர்,  ஊடகத்தில் வேலைப் பார்த்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

சிறப்பு பலன்: மிருகசீரிடம்: பி.எஸ்சி. தாவரவியல் பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோடெக்னாலஜி, திருவாதிரை: அக்ரிகல்ச்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, புனர்பூசம் : கைடன்ஸ் படிப்பு, மருத்துவக் கல்விப்பணியில் உதவி பேராசிரியர் மற்றும் எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி, கவுன்சிலிங் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்.

4. கடகம்

நீர் சம்பந்தப்பட்ட தொழிலை தேர்ந்தெடுக்கலாம் உதாரணமாக பால் வியாபாரம், எண்ணெய் வியாபாரம், பெட்ரோல் பங்க், குளிர் பானம் தயாரித்தல், விவசாயம், நீராவி இயந்திரத்தில் பணிபுரிதல், கடல் தொடர்பான வியாபாரம் முத்து, சங்குப் பொருட்கள், மீன் உணவகம், மெரைன் இன்ஜினியர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சிறப்பு பலன்: புனர்பூசம்: அக்ரிகல்ச்சர் இன்பர்மேஷன் சிஸ்டம், பூசம்: பெட்ரோலியம் ரிபைனிங் டெக்னாலஜி, டெக்னாலஜி, பெட்ரோலியத்தை பிரித்து எடுப்பது, அதனை பிரித்து எடுப்பது, அதை பராமரிப்பது, சுத்திகரிப்பது சம்பந்தப்பட்டது, ஆயில்யம்: நேவல் ஆர்க்கிடெக்ச்சர், சுற்றுலா பட்டப்படிப்பு.

(தொடரும்)