டி.வி. பேட்டி: கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை!

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2019

* ‘சூப்பர் மாம்’ (ஜீ தமிழ்) நிகழ்ச்சியை அர்ச்சனா தனது மகளுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

* ‘காமெடி டைம்’ மற்றும் ‘இளமை புதுமை’ புகழாக ஒரு நேரத்தில் அவர் கொடி கட்டிப் பறந்தவர்.

* அர்ச்சனா சந்தோக்கே என்பதை முழு பெயராக கொண்டவர்.

* ‘அர்ச்சும்மா’ என்று அவருடைய செல்ல மகள் ஜாரா அவரை கூப்பிடுவாள். இப்போது மீடியாவில் உள்ளவர்கள் பலரும் அவரை இப்படித்தான்  செல்லமாக கூப்பிடுகிறார்கள்.

* அம்மா (நிர்மலா), கணவர் (விநீத் முத்துக்கிருஷ்ணன்), மகள் (ஜாரா) என அழகான குடும்பம் அவருடையது.

* பட்டதாரியான அர்ச்சனா பிறந்தது பிப்ரவரி 17, 1985ல்.

* அவர் தொகுத்து வழங்கிய (மறைந்த சிட்டிபாபுவோடு இணைந்து) முதல் நிகழ்ச்சி, ‘காமெடி டைம்’ (சன் டிவி).

* ‘இளமை புதுமை’, ‘கலக்க போவது யாரு?’, ‘அதிர்ஷ்டலட்சுமி’, ‘செலபிரிட்டி கிச்சன்’, ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’, ‘சரிகமப சீனியர்ஸ்’, ‘நம்ம வீட்டு கல்யாணம்’ ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ போன்றவை அவர் தொகுத்து வழங்கியுள்ள மற்ற நிகழ்ச்சிகள்.

* ‘என் வழி தனி வழி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

* ஒரு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் – அதாவது, அவருடைய மகள் பிறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரையிலும் கூட அவர் ‘காமெடி டைம்,’ ‘இளமை புதுமை’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இதற்காக இன்றும் அவர் பெருமையாக பேசப்படுகிறார்.

* ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டிஆர்பி ரேட்டிங் அதிகமாக வரவேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஓவராக ‘சீன்’ போடுவதாக

சொல்லப்படும் குற்றச்சாட்டை பற்றி அர்ச்சனாவின் கருத்து?

‘‘டிஆர்பிக்காக நாங்க ஒர்க் பண்றோம்ணு சொல்றது தப்பு. டிஆர்பிங்கறது ஒரு ரேங்க்கர். அவ்வளவுதான்! நாங்க பார்க்கிற வேலை நல்லா இருக்கா இல்லையா, மக்களுக்கு பிடிக்கிறதா இல்லையான்னு சொல்றதுதான் டிஆர்பி!’’

* அர்ச்சனாவும் நடிகர் தீபக்கும் இணைந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து

வழங்கி ‘சிறந்த இரட்டை தொகுப்பாளர்கள்’ என்கிற விருதையும் பெற்றுள்ளனர்.

* ராமரின் மிகப்பெரிய ரசிகை அர்ச்சனா.

* டிடியின் (திவ்யதர்ஷனி) வளர்ச்சியை கண்டு தான் பெரிதும்

வியந்திருப்பதாகவும், அவர் பெரிய புத்திசாலி என்றும், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை என்றும் அவரை பாராட்டி தள்ளுகிறார்.

* ஆங்க்கரிங்கில் சிறப்பை கொடுக்க வேண்டும் என்பது அர்ச்சனாவின் குறிக்கோள்.

* சினிமாவில் நடிக்கவும் ஆசைப்படுகிறார். நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பாராம்!

  – வா. முனீஸ்­வரி