தரையில் முளைக்கும் புயல்கள் – சந்தானம்

பதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019

இந்­தி­யா­வின் பிர­த­மர் மோடிக்கு இப்­பொ­ழுது நாட்­டின் மூலை முடுக்­கு­க­ளில் இருந்து மணி­ஆர்­டர்­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன. எதற்கு மணி ஆர்­டர்­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன? யார் அனுப்­பு­கி­றார்­கள். இந்­தி­யா­வின் பிர­த­மர் என்ற வகை­யில் நாட்டை நிர்­வ­கிக்க, பிர­த­மர் மிக­வும் சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் அதற்கு உத­வு­வ­தற்­காக மணி­ஆர்­டர்­கள் அனுப்­பு­கி­றார்­கள். அனுப்­பு­கி­ற­வர்­கள் எல்­லாம் விவ­சா­யி­கள். ஒரு ஏக்­கர் நிலத்­தில் வெங்­கா­யம் பயிர் வைத்­தேன் 15 டன் மக­சூல் கிடைத்­தது. வெங்­கா­யத்தை நிலத்­தில் இருந்து அறு­வடை செய்ய விவ­சா­யக் கூலி ஆள்­க­ளுக்கு பணம் கொடுத்­தேன். அப்­பு­றம் என் கிரா­மத்­தி­லி­ருந்து பக்­கத்து நக­ரத்­தில் உள்ள சந்­தைக்கு அத­னைக் கொண்­டு­வந்­தேன். சந்­தை­யில் ஒரு கிலோ வெங்­கா­யத்தை 1 ரூபாய்க்கு தான் என்­னால் விற்க முடிந்­தது. விவ­சா­யச் செல­வு­கள், போக்­கு­வ­ரத்­துச் செல­வு­கள், உரத்­திற்­கான செல­வு­கள் என எல்­லாம் போக எனக்கு மிச்­ச­மா­கக் கிடைத்­தது 11 ரூபாய் தான். என்­னை­விட பிர­த­ம­ரா­கிய நீங்­கள் மிக­வும் சிர­மப்­ப­டு­கி­றீர்­கள். அத­னால், உங்­க­ளுக்கே அந்த 11 ரூபா­யை­யும் அனுப்பி வைக்­கி­றேன் என்று அனுப்பி வரு­கி­றார்­கள்.

இது புது­மை­யான சம்­ப­வம் இல்­லையா?. விலை உயர்ந்து வெங்­கா­யம் 1 கிலோ நூறு ரூபாய்க்­கும் 80 ரூபாய்க்­கும் விற்ற காலம் போய், 1 கிலோ வெங்­கா­யத்தை 1 ரூபாய் 2 ரூபாய்க்கு விற்­கும் காலம் வந்­துள்­ளது. இது ‘அச்சா தீன்’ தானே… அது­தான் இல்லை என்­கி­றார்­கள் விவ­சா­யி­கள்.

விவ­சாய இடு­பொ­ருள்­கள் எல்­லாம் விலை உயர்ந்து கொண்டே வரு­கின்­றன. ஆனால் விவ­சாய விளை பொருட்­க­ளின் விலை மட்­டும் குறைந்து கொண்டே வரு­கி­றதே ஏன்? சாதா­ர­ண­மாக, இயல்­பாக அனை­வ­ரும் புரிந்து கொள்­ளும் நட­வ­டிக்­கை­யாக இல்­லையே… ஏன் இந்த மர்ம முடிச்சு?

இந்­தி­யா­வில் வெங்­கா­யம் அதி­கம் விளை­யும் மாநி­லம் மகா­ராஷ்­டி­ரம். இந்­தி­யா­வின் மொத்த விளைச்­ச­லில் 45 சத­வீ­தம் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் மட்­டும் கிடைக்­கி­றது. ஆனால் இந்­தியா முழுக்க வெங்­கா­யத்தை பயன்­ப­டுத்­து­கி­றது. இந்­தி­யா­வின் காய்­க­றி­களை காலை, மதி­யம் அல்­லது இரவு உண­வுக்கு தயார் செய்­யும் பொழுது வெங்­கா­யம் இல்­லா­மல் தயா­ரிப்பு முழுமை பெறு­வ­தில்லை. தண்­ணீர் இல்­லா­மல் சமைக்க முடி­யுமா? முடி­யாது. அதே­போல வெங்­கா­யம் இல்­லா­மல் காய்­க­றி­களை சமைக்க முடி­யாது.

அன்­றா­டங் காய்ச்­சி­க­ளான ஏழை­கள் ரொட்­டியோ ‘கஞ்­சியோ’ பச்சை வெங்­கா­யத்தை கடித்­துக்­கொண்டு வயிற்றை நிரப்­பிக் கொள்­கி­றார்­கள். இந்­தி­யா­வின் 130 கோடி மக்­க­ளுக்கு காய்­க­றி­யாக உள்ள வெங்­காய விலை­யில் ஏற்­பட்­டுள்ள பெரும் சரிவு, ஆளும் பார­திய ஜனதா கட்­சிக்கு ஏற்­டக் கூடிய பெருத்த சரிவை எச்­ச­ரிப்­ப­தாக அர­சி­யல் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

வெங்­காய விலை­யின் ஏற்­றத் தாழ்­வு­கள் இந்­திய அர­சி­ய­லில் தலை­கீழ் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­தற்கு உதா­ர­ணங்­களை இந்­திய அர­சி­ய­லில் ஏரா­ள­மா­கக் காண­லாம்.

1980ல் காங்­கி­ரஸ் தலை­வ­ராக இந்­திரா  காந்தி இருந்­தார். அன்­றைய மத்­திய ஆட்சி ஜனதா தலை­மை­யி­லான கூட்­ட­ணிக் கட்­சி­க­ளி­டம் இருந்­தது.  காங்­கி­ர­சுக்கு எதி­ராக கூட்­டணி ஆட்­சியை உரு­வாக்­கிய தலை­வர்­க­ளால் வெங்­காய விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல கார­ணங்­க­ளில் ஒன்­றாக வெங்­காய விலை உயர்­வும் விஸ்­வ­ரு­பம் எடுக்க கூட்­டணி ஆட்­சியை முறி­ய­டித்து மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தார் இந்­திரா. 1998 டில்லி தலை­ந­கர் அர­சில் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்­தது பார­திய ஜனதா கட்சி. வெங்­காய விலை உயர்வு உச்­சத்­தில் இருந்த சம­யத்­தில் மாநி­லச் சட்­ட­மன்­றத் தேர்­தல் வந்­தது. மக்­கள் பாஜ­க­வைத் தூக்கி எறிந்­தார்­கள்.

1993ம் ஆண்­டி­லி­ருந்து டில்­லி­யில் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த பாஜக அரசு 1998 டிசம்­பர் 3ம் தேதி முடி­வுக்கு வந்­தது.

ஷீலா தீட்­சித் காங்­கி­ரஸ் முதல்­வ­ராக பொறுப்­பேற்­றார். 1998 முதல் 2013 டிசம்­பர் வரை 15 ஆண்­டு­கள் காங்­கி­ரஸ் ஆட்சி நீடித்­தது. 2014–-15ல் ஏற்­பட்ட காய்­க­றி­க­ளின் விலை உயர்வு, பண­வீக்க உயர்வு ஆகி­யன காங்­கி­ரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி கையில் ஆட்­சிப் பொறுப்­பைத் தந்­தது. எனவே இந்த வர­லாற்றை பார­திய ஜனதா கட்சி மறந்­து­விட எந்­தக் கார­ண­மும் இல்லை.

2018 டிசம்­ப­ரில் வெங்­கா­யப் பிரச்னை மீண்­டும் தலை­தூக்­கி­யது. ஆனால் பிரச்­னை­யின் வடி­வம் தலை­கீ­ழாக அமைந்­தது. வெங்­காய விலை உயர்வு கார­ண­மாக நுகர்­வோர் கோபம் தலை­தூக்கி நிற்­கும். ஆனால் 2018ல் வெங்­காய விலை அத­ல­பா­தா­ளத்­துக்கு சரிந்­து­விட்­டது. வெங்­காய உற்­பத்தி செலவு 1 கிலோ­வுக்கு  8 ருபாய் என்று விவ­சா­யி­கள் கணக்­குப் போடு­கி­றார்­கள். அந்த உற்­பத்­திச் செல­வுக்கு மேல் குறைந்­தது 50 சத­வீத லாப­மா­வது வேண்­டும். அப்­ப­டி­யா­னால் 1 கிலோ வெங்­கா­யம் ரூ.12க்கு விற்­றால்­தான் விவ­சா­யிக்கு கட்­டு­ப­டி­யா­கும். ஆனால் மார்க்­கெட்­டில் 1 கிலோ வெங்­கா­யம் 1 ரூபாய் என்ற அள­வில் தான் விவ­சா­யிக்கு பணம் கிடைக்­கி­றது. நுகர்­வோர் தரும் கூடு­தல் விலையை வாரிக்­கொள்­வது யார்? சந்­தை­யில் உள்ள இடைத்­த­ர­கர்­கள். நாசிக்­கில் உள்ள கிரா­மத்­தில் இருந்து இந்­தி­யா­வி­லேயே மிகப் பெரிய லாசல்­க­வோன் வெங்­காய மண்­டிக்கு வந்­து­சே­ரும் வெங்­கா­யம் குறைந்­த­பட்­சம் 4 இடைத்­த­ர­கர்­க­ளைத் தாண்­டி­யாக வேண்­டும். பின்­னர் லாசல்­க­வோன் வெங்­காய மண்­டி­யி­லி­ருந்து சில்­லறை விற்­ப­னைக்கு போய்ச் சேரு­முன் நான்கு இடைத்­த­ர­கர்­களை வெங்­கா­யம் தாண்­டி­யாக வேண்­டும்.

கிரா­மத்­தி­லி­ருந்து மண்­டிக்கு வரும் வழி­யில் உள்ள இடைத்­த­ர­கர்­கள் வெங்­காய விவ­சா­யியை உரித்து எடுத்து விடு­கி­றார்­கள். மண்­டி­யி­லி­ருந்து சில்­லரை விற்­ப­னைக் கடைக்கு வரும் வழி­யில் உள்ள இடைத்­த­ர­கர்­கள் அடை­யும் கொள்ளை லாபத்தை நுகர்­வோர் செலுத்த வேண்­டி­ய­தா­கி­வி­டு­கி­றது. ஆக இந்த இரு­த­ரப்பு பய­ணத்­தில் விவ­சா­யிக்கு லாபம் இல்லை. நுகர்­வோ­ருக்­கும் லாபம் இல்லை. ஆக, இடைத்­த­ர­கர்­க­ளின் கொள்­ளைக் கூடா­ர­மாக வெங்­காய பிசி­னஸ் மாறி­விட்­டது.

அடுத்­தது உரு­ளைக்­கி­ழங்கு பிரச்­சினை. இந்­தி­யா­வின் மிக­வும் கூடு­த­லான மக்­கள் தொகை கொண்ட மாநி­லம் உத்­த­ரப்­பி­ர­தே­சம். இங்­கி­ருந்து மக்­க­ள­வைக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 80. மகா­ராஷ்­டிர மாநி­லத்­தி­லி­ருந்து 48 உறுப்­பி­னர்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கி­றார்­கள். மொத்த எம்.பி.க்களின் எண்­ணிக்கை 545. அதில் 128 என்­பது கிட்­டத்­தட்ட 25 சத­வீ­தம் ஆகும்.

வெங்­காய பிரச்­சினை மகா­ராஷ்­டிர மக்­க­ளைக் கொதிப்­ப­டை­யச் செய்­துள்­ளது. உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் உரு­ளைக்­கி­ழங்­குப் பிரச்­சினை, விவ­சா­யி­க­ளுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இங்கு உரு­ளைக் கிழங்­குக்கு உரிய விலை கிடைக்­க­வில்லை. ஆனால், உரு­ளைக்­கி­ழங்கு விளை­விக்­கத் தேவை­யான டைஅம்­மோ­னி­யம் பாஸ்­பேட் 50 கிலோ மூட்டை ஒன்­றின் விலை ரூ. 400லிருந்து ரூ. 1450ஆக உயர்ந்­துள்­ளது.

2016 –17இல் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் விளைந்த உரு­ளைக்­கி­ழங்கு 155 லட்­சம் மெட்­ரிக் டன். இதில் 120 லட்­சம் டன்­கள் உரு­ளைக்­கி­ழங்கு 1708 குளிர் சேமிப்­புக் கிடங்­கு­க­ளில் அடைத்­து­வைத்­துள்­ள­னர். உள்­நாட்­டில் போன வருட உரு­ளைக்­கி­ழங்கை குளிர் சேமிப்பு கிடங்­கில் இருந்து எடுத்து சந்­தை­யில் விற்­ப­னைக்கு விடு­கி­றார்­கள். இல்­லா­வி­டில் அது அழு­கிக் கெட்­டுப்­போய்­வி­டும். அத­னால் புது உரு­ளைக்­கி­ழங்­குக்கு உரிய விலை கிடைக்­க­ வில்லை.

ஒரு குவிண்­டால் உரு­ளைக்­கி­ழங்­குக்கு அரசு நிர்­ண­யித்த விலை ரூ 487. குறைந்த பட்ச விலை­யாக ரூ. 1000மாவது தேவை. இல்­லா­வி­டில் அரசு அறி­விப்­பி­னால் எந்த லாப­மும் இல்லை. ஏனெ­னில் விளைச்­சல் செலவு, போக்­கு­வ­ரத்து செலவு, குளிர் சேமிப்பு கிடங்­குக்­கான கட்­ட­ணம் எல்­லா­வற்­றுக்­கும் சேர்த்து ஒரு குவிண்­டா­லுக்கு ரூ. 900 ஆகி­றது என்­கி­றார்­கள் விவ­சா­யி­கள்.அரசு கொள்­மு­த­லின் போது உரு­ளைக்­கி­ழங்கை தரம் பிரிக்­கி­றார்­கள். சிறிய கிழங்­கு­கள் சில்­ல­ரைச் சந்­தைக்கு வரும்­பொ­ழுது அடி­மாட்டு விலைக்­குத்­தான் போகி­றது. 2014இல் ஆட்­சிக்கு வந்­த­தில் இருந்து விவ­சா­யி­கள் உரு­ளைக்­கி­ழங்கு, வெங்­காய பிரச்­சி­னை­க­ளைச் சந்­தித்து வரு­கி­றார்­கள். 2018 ஜன­வ­ரி­யில் உ.பி. முதல்­வர் யோகி அலு­வ­ல­கத்தை சுற்றி உரு­ளைக்­கி­ழங்­கு­க­ளைக் கொட்டி விவ­சா­யி­கள் ஆத்­தி­ரத்­தைத் தீர்த்­துக்­கொண்­ட­னர்.

தக்­காளி, உரு­ளைக்­கி­ழங்கு, வெங்­கா­யம் ஓர­ளவு விளை­யும் மாநி­லங்­க­ளில் ஒன்று கர்­நா­ட­கம். அங்கு பாஜக ஆண்­டது. ஆனால், விவ­சா­யி­கள் கடன் பிரச்­சி­னை­யால் அங்கு ஆட்­சிப் பொறுப்பை இழந்­தது. அங்கு தக்­காளி, வெங்­கா­யம், உரு­ளைக்­கி­ழங்கு விவ­சா­யி­க­ளுக்­கான சந்­தைத் திட்­டத்தை வெளி­யிட்­டது பாஜக அரசு. 2018 – 19 பட்­ஜெட்­டில் அறி­வித்த அந்­தத் திட்­டத்­துக்கு ரூ. 500 கோடியை ஒதுக்கி உணவு பதப்­ப­டுத்­தும் துறை­யி­டம் ஒப்­ப­டைத்­தார்­கள். உணவு பதப்­ப­டுத்­தும் துறை, சந்­தைப் பிரச்­னையை எப்­படி கவ­னிக்­கும்?  

இந்­தி­யா­வில் சிப்ஸ் தயா­ரிக்க தனி­யார் கம்­பெ­னி­க­ளும் உரு­ளைக்­கி­ழங்கை வாங்­கு­கி­றார்­கள். ஆனால் உற்­பத்­திக்கு ஏற்ப விற்­ப­னை­யும் இல்லை. வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய முடி­யா­மல் தவிக்­கி­றார்­கள். இந்­தத் திட்­டத்­தின் கீழான மார்க்­கெட் கமிட்­டி­யி­லும், இடைத்­த­ர­கர்­கள் குடி­யே­றி­விட்­டார்­கள்.

 மார்க்­கெட் கமிட்­டி­யின் விற்று வர­வுக்கு இணை­யாக மார்க்­கெட் கமிட்டி உறுப்­பி­னர்­க­ளின் சொத்து இருக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் கமிட்டி அமைக்க முடி­யும். கோடிக்­க­ணக்­கான சொத்­துள்ள பணக்­கார விவ­சாயி, ஏழை ஒப்­பந்த விவ­சா­யி­யின் நல­னுக்கு எப்­ப­டிப் பாடு­ப­டு­வார்?  ஆக, அந்­தத் திட்­டத்­தால் எந்­தப் பய­னும் இல்லை. வெள்ளை யானை­யாக பணத்தை விழுங்­கு­வது தான் மிச்­சம். உத்­த­ரப்­பி­ர­தே­சம், மகா­ராஷ்­டி­ரம் ஆகிய மாநி­லங்­கள் வெங்­கா­யம், உரு­ளைக்­கி­ழங்கு பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டா­விட்­டால் விவ­சா­யி­க­ளின் கண்­க­ளில் இருந்து வடி­யும் கண்­ணீர் 2019இல் பா.ஜ., வெற்­றி­யைத் தட்­டிப் பறிக்க வாய்ப்­புள்­ளது.

அமெ­ரிக்க அரசு நடத்­தும் வாய்ஸ் ஆப் அமெ­ரிக்க தனது இத­ழில் பிர­த­மர் மோடியை கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்­ளது. இந்த எச்­ச­ரிக்கை மோடி காதில் விழுமா?                 ***