மூன்றாவது அணி அமையுமா?

பதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019

தேர்­தல் வந்­தாலே அர­சி­யல் கட்­சி­கள் கூட்­டணி அமைப்­ப­தில் தீவி­ரம் காட்­டத் தொடங்­கி­வி­டு­வார்­கள். தேசிய அள­வில் காங்­கி­ரஸ், பார­திய ஜனதா அல்­லாத மூன்­றா­வது அணி அமைக்­கும் முயற்சி அவ்­வப்­போது நடந்து வரு­கி­றது. நாடு முழு­வ­தும் தேசிய கட்­சி­க­ளின் ஆதிக்­கம் என்­பது இல்லை என்­றா­கி­விட்­டது. அந்­தந்த மாநி­லங்­க­ளில் மாநில கட்­சி­கள் செல்­வாக்­காக உள்­ளன. இந்த மாநில கட்­சி­க­ளின் தய­வில், தேசிய கட்­சி­கள் கூட்­டணி அமைக்க வேண்­டி­ய­துள்­ளது. தற்­போது காங்­கி­ரஸ், பார­திய ஜனதா அல்­லாத மூன்­றா­வது அணி அமைக்­கும் முயற்­சி­யில் தெலுங்­கானா முதல்­வ­ரும், தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீதி கட்­சி­யின் தலை­வ­ரு­மான கே.சந்­தி­ர­சே­கர ராவ் ஈடு­பட்­டுள்­ளார். சமீ­பத்­தில் நடை­பெற்ற தெலுங்­கானா சட்­ட­சபை தேர்­த­லில், சந்­தி­ர­சே­கர ராவ் தலை­மை­யி­லான தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீதி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மூன்­றா­வது அணி அமைக்க சந்­தி­ர­சே­கர ராவ் பல்­வேறு மாநி­லங்­க­ளில் பய­ணம் மேற்­கொள்­கி­றார். சமீ­பத்­தில் ஒடிசா முதல்­வர் நவீன் பட்­நா­யக்கை சந்­தித்து பேசி­யுள்­ளார். அதற்கு அடுத்த நாள் கொல்­கத்­தா­வில் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்­ஜியை சந்­தித்து பேசி­யுள்­ளார். இந்த சந்­திப்­பிற்கு பிறகு சந்­தி­ர­சே­கர ராவ், அடுத்து வரும் லோக்­சபா தேர்­த­லுக்­காக கூடிய விரை­வில் திட்­டத்தை அறி­விக்க உள்­ளோம். மூன்­றா­வது அணி குறித்து ஆலோ­ச­னை­கள் தொடர்­கி­றது. இது உடனே பேசி முடிவு செய்ய கூடி­யது அல்ல. இப்­போது பேச்­சு­வார்த்­தையை தொடங்­கி­யுள்­ளேன். நாங்­கள் மீண்­டும் சந்­தித்து, இதை எப்­படி முன்­னெ­டுத்­துச் செல்­வது என்­பது பற்றி ஆலோ­சிப்­போம். மம்தா பானர்­ஜி­யு­ட­னான சந்­திப்பு பய­னுள்­ள­தாக இருந்­தது. இரண்டு அர­சி­யல் கட்சி தலை­வர்­கள் சந்­தித்­துக் கொண்­டால், தேசிய அர­சி­யல் குறித்­தும், இரண்டு பேருக்­கும் அக்­க­றை­யுள்ள விஷ­யங்­கள் குறித்­தும் பேசு­வார்­கள் என்று அவர் கூறி­யுள்­ளார். சந்­தி­ர­சே­கர ராவ், மம்தா பானர்­ஜியை சந்­திப்­பது இரண்­டா­வது முறை.

இந்த சந்­திப்­பிற்கு பிறகு மம்தா பானர்ஜி, செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளிக்­க­வில்லை. பா.ஜ.,வுக்கு எதி­ரான பல­மான கூட்­டணி அமைக்­கும் முயற்­சி­யில் மம்தா பானர்ஜி மாநில கட்­சி­க­ளின் தலை­வர்­கள், மற்­றும் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் இடை­வி­டாத தொடர்­பில் உள்­ளார். பா.ஜ,,வுக்கு எதி­ரான வாக்­கு­கள் பிரிய கூடாது என்­ப­தால், சந்­தி­ர­சே­கர ராவ்­வின் முயற்­சிக்கு எந்த அளவு மம்தா பானர்ஜி அனு­ச­ர­ணை­யைக இருப்­பார் என்­பது கேள்­விக்­கு­றியே.

ஒடிசா முதல்­வ­ரும், பிஜு ஜனதா தள தலை­வ­ரு­மான நவீன் பட்­நா­யக்கை,சந்­தி­ர­சே­கர ராவ் சந்­தித்­தார். அதன் பிறகு சந்­தி­ர­சே­கர ராவ், மூன்­றா­வது  அணி குறித்து பேச்­சு­வார்த்தை தொடங்­கி­யுள்­ளது. எது­வும் இறுதி செய்­யப்­ப­ட­வில்லை. வரும் நாட்­க­ளில் நாங்­கள் மீண்­டும் சந்­தித்து பேசு­வோம் என்று கூறி­யுள்­ளார்.  

ஆனால் இந்த சந்­திப்பு பற்றி பிஜு ஜனதா தள செய்தி தொடர்­பா­ளர் சஸ்­மித் பட்ரா, “ இந்த சந்­திப்பு தனிப்­பட்ட முறை­யி­லா­னது. இதற்கு எவ்­வித அர­சி­யல் பின்­ன­ணி­யும் இல்லை. சந்­தி­ர­சே­கர ராவ், மரி­யாதை நிமித்­த­மாக நவீன் பட்­நா­யக்கை சந்­தித்­தார்” என்று கூறி­யுள்­ளார்.

உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் பல­மாக உள்ள சமாஜ்­வாதி கட்சி தலை­வர் அகி­லேஷ் யாதவ், பகு­ஜன் சமாஜ் கட்சி தலை­வர் மாயா­வதி ஆகி­யோ­ரை­யும், சந்­தி­ர­சே­கர ராவ் சந்­தித்து மூன்­றா­வது அணி குறித்து பேசும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளார். இது பற்றி தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீதி கட்­சி­யைச் சேர்ந்த கரீம்­ந­கர் தொகுதி எம். பி வினோத் குமார், அகி­லேஷ் யாதவ், மாயா­வ­தியை சந்­திக்க தேதியை மட்­டும் தான் இறுதி செய்ய வேண்­டும். இரண்டு பேரை­யும் சந்­தி­ர­சே­கர ராவ் விரை­வில் சந்­திப்­பார். சில மாதங்­க­ளுக்கு முன் அகி­லேஷ் யாதவ், ஹைத­ரா­பாத் வந்து சந்­தி­ர­சே­கர ராவை சந்­தித்­தார். நாங்­கள் மாயா­வ­தி­யு­டன் இடை­வி­டாத தொடர்­பில் உள்­ளோம். பெட­ரல் பிரண்ட் என்ற மூன்­றா­வது அணி யோசனை நீண்­ட­கா­ல­மாக பேசப்­பட்டு வரு­கி­றது. தேசிய கட்­சி­கள், பெரி­யண்­ணன் போல் நடந்து கொண்டு, மாநில கட்­சி­களை பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­றன. எனவே மாநில கட்­சி­கள் இணைந்து செயல்­பட்­டால், நமக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்­கும் என்று வினோத் குமார் கூறி­யுள்­ளார்.

மூன்­றா­வது அணி என்ற பெய­ரில் எதிர்­கட்­சி­க­ளின் வாக்­கு­களை பிரிக்­கும் முயற்­சி­யில் சந்­தி­ர­சே­கர ராவ் ஈடு­பட்­டுள்­ளார். அவர் பா.ஜ.,வின் ‘பி’  டீமாக செயல்­ப­டு­கி­றார் என்று காங்­கி­ரஸ் அடிக்­கடி கூறி­வ­ரு­கி­றது. இது பற்றி வினோத் குமார் கூறு­கை­யில், “ தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீதி கட்சி தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து, இது வரை பா.ஜ.,வுடன் நாங்­கள் கூட்டு சேர்ந்த்­தில்லை என்­பதை காங்­கி­ரஸ் நினை­வில் கொள்ள வேண்­டும். தி.மு.க,, திரி­ணா­முல் காங்­கி­ரஸ், பகு­ஜன் சமாஜ் கட்சி ஆகி­யவை காங்­கி­ரஸ், பா.ஜ.,ஆகிய கட்­சி­க­ளு­டன் கூட்டு சேர்ந்­துள்­ளன என்று வினோத் குமார் கூறி­யுள்­ளார்.  

சென்ற வாரம் டில்லி சென்று இருந்த சந்­தி­ர­சே­கர ராவ், பகு­ஜன் சமாஜ் கட்சி தலை­வர் மாயா­வதி, சமாஜ்­வாதி கட்சி தலை­வர் அகி­லேஷ் யாதவ் ஆகி­யோ­ரை­யும் சந்­திக்க திட்­ட­மிட்டு இருந்­தார். ஆனால் இந்த சந்­திப்பு நடை­பெ­ற­வில்லை. அகி­லேஷ் யாதவ், தனக்கு முன்­னரே திட்­ட­மிட்டு இருந்த அலு­வல்­கள் இருந்­த­தால் டில்லி வர இய­ல­வில்லை என்­றும், ஜன­வரி ௬ம் தேதி ஹைத­ரா­பாத்­தில் சந்­தி­ர­சே­கர ராவ்வை சந்­திக்க இருப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

உத்­த­ர­பி­ர­தே­சத்தை பொருத்த மட்­டில் சமாஜ்­வாதி, பகு­ஜன் சமாஜ், ராஷ்­டி­ரிய லோக்­த­ளம், நிசாக் கட்சி ஆகிய கட்­சி­கள் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வது என்று முடிவு செய்­தி­ருப்­ப­தாக செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன. இந்த கூட்­ட­ணி­யில் காங்­கி­ரஸ் கட்­சியை சேர்த்­துக் கொள்­வ­தற்கு அதிக ஆர்­வம் காண்­பிக்­க­வில்லை. காங்­கி­ரஸ் கட்­சிக்கு அமேதி, ரேபேலி ஆகிய இரு தொகு­தி­களை மட்­டும் விட்­டுக் கொடுக்க உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் மொத்­தம் உள்ள ௮௦ தொகு­தி­க­ளில் எந்­தெந்த கட்­சிக்கு எவ்­வ­ளவு தொகு­தி­கள் என்­பது இறு­தி­யாகி விட்­டது என­வும், இது பற்றி அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்க வேண்­டி­ய­து­தான் பாக்கி என்­றும் கூறப்­ப­டு­கி­றது. உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் கூட்­ட­ணி­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்த்­தால், அந்த கட்­சி­யால் கூடு­த­லான வாக்­கு­கள் கிடைக்­காது. அத்­து­டன் லோக்­சபா தேர்­தல் மோடியா அல்­லது ராகுலா என்­ப­தாக முடிந்து விடும் என்று சமாஜ்­வாதி கரு­து­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது.

சென்ற லோக்­சபா தேர்­த­லில் பகு­ஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்­தில் கூட வெற்றி பெற­வில்லை எனி­னும், ௩௪ தொகு­தி­க­ளில் இரண்­டாம் இடத்­திற்கு வந்­தது. அதே போல் சமாஜ்­வாதி ஐந்து தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. ௩௧ தொகு­தி­க­ளில் இரண்­டாம் இடத்­திற்கு வந்­தது. அகி­லேஷ் யாதவ், மாயா­வதி ஆகி­யோர் உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் மட்­டுமே அதிக ஆர்­வம் காண்­பிப்­பார்­கள். அவர்­க­ளுக்கு மற்ற மாநி­லங்­க­ளில் செல்­வாக்கு இல்லை.  எனவே சந்­தி­ர­சே­கர ராவ்­வின் மூன்­றா­வது அணி முயற்­சிக்கு அகி­லேஷ் யாதவ், மாயா­வதி ஆகி­யோர் அதிக ஆர்­வம் காண்­பிக்க மாட்­டார்­கள் என்றே தெரி­கி­றது.

மூன்­று­வது அணி அமைக்­கும் முயற்­சி­யாக சந்­தி­ர­சே­கர ராவ், தி.மு.க தலை­வர் ஸ்டாலினை சந்­தித்­தும் பேசி­யுள்­ளார். அதற்கு பிறகு நடை­பெற்ற கரு­ணா­நிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்­சி­யில் ஸ்டாலின், ராகுல் காந்­தியை பிர­த­மர் வேட்­பா­ள­ராக முன்­மொ­ழிந்­தார். இத­னால் இனி சந்­தி­ர­சே­கர ராவ், ஸ்டாலினை சந்­தித்து பேசும் சாத்­தி­யம் இல்லை என்று கூறப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் செல்­வாக்கு உள்ள மாநில கட்­சி­கள், தங்­கள் மாநி­லத்­தில் அதிக தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு அதிக இடங்­களை கைப்­பற்ற வேண்­டும் என்றே கரு­து­வார்­கள். ஒரு கட்சி தனிப் பெரும்­பான்மை பெறா­மல், கூட்­டணி ஆட்சி அமைந்­தால், தேர்­த­லுக்கு பிறகு அமை­யும் அர­சில், அதிக அமைச்­சர்­களை நிய­மிக்க பேரம் பேச முடி­யும் என்று கரு­து­வார்­கள். அத்­து­டன் மாநி­லத்­திற்கு மாநி­லம் அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளும், முன்­னு­ரி­மை­க­ளும் மாறு­ப­டு­கின்­றன.

இந்த சூழ்­நி­லை­யில் சந்­தி­ர­சே­கர ராவ் முயற்­சிக்­கும் பா.ஜ.,காங்­கி­ரஸ் அல்­லாத மூன்­றா­வது அணி அமை­யுமா என்­பது கேள்­விக்­கு­றியே