அரசியல் மேடை : ஜெ.,மரணம் : மர்மம் விலகுமா?

பதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019தலை­வர்­கள் பல­ரது மர­ணம் சர்ச்­சைக்கு ஆளாகி வரு­வதை நாம் காலம் கால­மாக கண்டு வரு­கி­றோம். அண்­மைக்­கால சர்ச்­சை­யாக, முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லி­தா­வின் மர­ணம் இருந்து வரு­கி­றது.

முத­ல­மைச்­சர் பொறுப்பு வகித்த நிலை­யி­லேயே, கடந்த 2016–ம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 22ம் தேதி ஜெய­ல­லிதா திடீர் உடல் நலக்­கு­றைவு கார­ண­மாக சென்னை அப்­பல்லோ மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். லேசான காய்ச்­சல், மற்­றும் நீர்ச்­சத்­துக் குறை­பாடு என்­று­தான் முத­லில் மருத்­து­வ­மனை சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. சிகிச்சை முடிந்து ஒன்­றி­ரண்டு நாட்­க­ளில் வீடு திரும்­பு­வார் என்­றும் கூறி­னார்­கள். ஆனால், 75 நாட்­கள் தொடர் சிகிச்­சைக்கு பின்­ன­ரும் வீடு திரும்­பா­மலே மர­ணம் அடைந்து விட்­டார்.

ஜெய­ல­லிதா சிகிச்சை பெற்று வந்த நாட்­க­ளில், அவ­ருக்கு எந்­த­வித நோய்த்­தாக்­கு­தல், அதற்கு என்­னென்ன சிகிச்­சை­கள் அளிக்­கப்­ப­டு­கி­றது என்ற விவ­ரங்­கள் வெளிப்­ப­டை­யாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

ஏறத்­தாழ, 11 மருத்­து­வக் குறிப்­பு­கள் அப்­பல்லோ மருத்­துவ மனை­யில் இருந்து வெளி­யி­டப்­பட்­டது. அது ஒன்­றுக்கு ஒன்று முரண்­பட்­ட­தா­கவே இருந்­தது. மருத்­துவ மனை­யி­லி­ருந்து வெளி­யில் வரும் அதி­முக முன்­ன­ணி­யி­ன­ரும், செய்­தித் தொடர்­பா­ளர்­க­ளும், ‘ஜெய­ல­லிதா நன்­றாக இருக்­கி­றார். உடல்­நிலை வெகு­வாக முன்­னேறி வரு­கி­றது. டி.வி.யில் சீரி­யல் பார்க்­கி­றார். இட்லி சாப்­பிட்­டார்,  உப்­புமா சாப்­பிட்­டார் என்­றெல்­லாம் சொன்­னார்­கள்.

ஒரு மாதத்­திற்­கும் மேலாக ‘கிரிட்­டிக்­கல் கேர் யூனிட்’ பகு­தி­யில் சிகிச்சை பெற்று வந்த ஜெய­ல­லிதா சாதா­ரண வார்­டுக்கு மாற்­றப்­ப­டு­கி­றார் என்று ஒரு நாள் செய்தி வந்­தது. சாதா­ரண வார்­டுக்கு மாற்­றப்­பட்ட ஒன்­றி­ரண்டு நாட்­க­ளில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அப்­பல்லோ மருத்­து­வ­ம­னை­யின் தலை­வர் பிர­தாப் சி.ரெட்டி, ஜெய­ல­லிதா மிக நன்­றாக இருக்­கி­றார். அவர் விரும்­பும் போது வீட்­டுக்கு செல்­ல­லாம் என்று கூறி­னார். மிகச்­சி­றந்த மருத்­துவ வல்­லு­நர்­கள் மிக மிக உயர்­தர, உல­கத் தரம் வாய்ந்த சிகிச்­சையை ஜெய­ல­லி­தா­வுக்கு அளித்து வந்­த­தாக கூறி­னார்­கள்.

டில்லி எய்ம்ஸ் மருத்­துவ மனை­யில் இருந்து மிகச்­சி­றந்த மருத்­துவ நிபு­ணர்­கள் மூன்று பேர் வந்­த­னர். லண்­டன் மாந­க­ரில் இருந்து ரிச்­சர்டு பீலே என்ற ஆகச்­சி­றந்த மருத்­துவ நிபு­ணர் வந்­தார். சர்­வ­தேச அள­வில் புகழ்­பெற்ற சிங்­கப்­பூர் மருத்­துவ மனை­யி­லி­ருந்து, பிசி­யோ­தெ­ரப்பி சிகிச்­சை­யில் அனு­ப­வம் பெற்ற மூத்த செவி­லி­யர்­கள் வந்­தார்­கள். இவர்­கள் எல்­லாம் எந்­த­வித சிகிச்சை அளித்­தார்­கள் என்­பது அவர்­க­ளை­யும் ஜெய­ல­லி­தா­வை­யும் தவிர யாருக்­கும் தெரி­யாது.

அப்­பல்லோ மருத்­துவ மனை­யின் 15 டாக்­டர்­க­ளும் அவ­ர­வர் துறை­க­ளில் வல்­ல­வர்­கள், இரு­த­யம், நரம்­பி­யல், சிறு­நீ­ர­கம், நுரை­யீ­ரல், ரத்த நாளங்­கள், ஆர்த்தோ என ஒரு மனி­த­னுக்கு எத்­தனை வித­மான நோய்த்­தாக்­கு­தல் இருக்­குமோ அத்­த­னை­யை­யும் சரிப்­ப­டுத்­தக் கூடிய அனு­ப­வ­மும், திற­மை­யும் வாய்ந்த அப்­பல்லோ டாக்­டர்­கள் 75 நாட்­க­ளாக இரவு – பக­லாக தீவிர சிகிச்சை அளித்­தும் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லி­தாவை காப்­பாற்ற முடி­ய­வில்லை. என்ன கார­ணம்? அப்­படி என்­னென்ன நோய் பாதிப்­பு­கள் ஜெய­ல­லி­தா­வுக்கு இருந்­தது. இதைத்­தான் தெளி­வு­ப­டுத்த வேண்­டும் என மக்­கள் கேட்­கி­றார்­கள்.

1984ம் ஆண்டு, அன்­றைய முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். இதே அப்­பல்லோ மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­போது, அவ­ருக்கு எந்­த­வி­த­மான நோய்த்­தாக்­கு­தல் ஏற்­பட்­டது. அதற்கு என்­னென்ன வகை­யி­லான சிகிச்­சை­களை எந்­தெந்த டாக்­டர்­கள் மேற்­கொள்­கி­றார்­கள். அவ­ரது உடல் நிலை­யில் ஏற்­ப­டும் முன்­னேற்­றம், பின்­ன­டைவு எல்­லா­வற்­றை­யும் வெளிப்­ப­டை­யாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் வெளி­யிட்­டது. அர­சுத் தரப்­பி­லும் அறிக்­கை­கள் அளித்­த­னர். சட்­ட­ச­பை­யி­லும் கூட எம்­ஜி­ஆர் குறித்த மருத்­துவ அறிக்­கை­தாக்­கல் செய்­யப்­பட்­டது.

மேலும் தீவிர சிகிச்சை அளித்­தால்­தான் காப்­பாற்ற முடி­யும் என்ற நிலை வந்த போது, அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் உள்ள புரூக்­ளின் டவுன்ஸ்­டேட் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து சென்று, சிறு­நீ­ரக மாற்று அறு­வைச் சிகிச்சை செய்து காப்­பாற்­றி­னார்­கள். ‘அமெ­ரிக்க நாட்­டில் ஐஸ் பெட்­டி­யில் எம்.ஜி.ஆர். உடல் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது’ என்று எதிர்க்­கட்­சி­கள் பிரச்­சா­ரம் செய்த நிலை­யில், முழு­மை­யாக உடல் நலம் தேறி அச்சு அச­லான அதே எம்.ஜி.ஆராக திரும்பி வந்­தார். இப்­ப­டிப்­பட்ட எந்த அணு­கு­மு­றை­யும், நடை­மு­றை­யும் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா சிகிச்சை விஷ­யத்­தில் கடைப்­பி­டிக்­க­வில்­லையே ஏன்? என்­று­தான் அதி­முக தொண்­டர்­க­ளும், கேள்வி எழுப்­பு­கி­றார்­கள். அத­னால்­தான், ஜெய­ல­லி­தா­வின் மர­ணத்­தில் மர்­மம் இருப்­ப­தாக நாடே சந்­தே­கித்­தது.

ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­போது, தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் பொறுப்பு வகித்த ஓ.பன்­னிர்­செல்­வம் ‘தர்­ம­யுத்­தம்’ நடத்­தி­ய­போது, ஜெய­ல­லிதா சாவில் மர்­மம் இருப்­ப­தாக மக்­கள் சந்­தே­கிக்­கி­றார்­கள். இதை சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்று சொன்­னார். அப்­போது, அவரை கடு­மை­யாக விமர்­சித்த எடப்­ப­ழ­னி­சாமி தலை­மை­யி­லான அணி­யி­ன­ரும், தின­க­ரன் தரப்­பி­ன­ரும் ஜெ. மர­ணத்­தில் எந்த மர்­ம­மும் இல்லை என்று ஆணித்­த­ர­மாக மறுத்­த­னர்.

பின்­னர் சில மாதங்­க­ளில் இ.பி.எஸ் – ஒ.பி.எஸ். அணி இணைந்­த­தும் ‘ஜெ’ மர­ணம் தொடர்­பாக விசா­ரிக்க நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யி­லான ஒரு நபர் கமி­ஷனை நிய­மித்­தார்­கள். இந்த கமி­ஷன் விசா­ரணை நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் போதே, அமைச்­சர்­கள் சிலர் ஆளுக்­கொரு கருத்தை தெரி­வித்து வந்­த­னர். ‘அம்மா இட்லி சாப்­பிட்­ட­தாக பொய் சொன்­னோம்’ என ஒரு அமைச்­சர் சொல்­கி­றார். அடிக்­கடி டி.வி.க்கு பேட்டி அளித்­த­வர்­கள். நாங்­கள் அம்­மா­வையே பார்க்­க­வில்லை. கட்­சித் தலை­வர்­கள், எங்­களை அப்­படி சொல்­லச் சொன்­னார்­கள். அத­னால் சொன்­னோம் என்­கி­றார்­கள்.

எது எப்­ப­டியோ, ஆறு­மு­க­சாமி விசா­ரணை ஆணை­யத்­தின் அறிக்கை வந்­தால் உண்மை தெரிந்­து­வி­டும் என எதிர்­பார்த்­துக் காத்­துக்­கொண்­டுள்ள நேரத்­தில், சட்ட அமைச்­சர் சி.வி. சண்­மு­கம் திடீ­ரென, ‘ஜெய­ல­லிதா மர­ணத்­தில் மர்­மம்’ இருப்­பது உண்­மை­தான். இது தொடர்­பாக, இப்­போ­தைய மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன், முன்­னாள் தலைமை செய­லா­ளர் ராம்­மோ­கன் ராவ் ஆகி­யோரை போலீஸ் காவ­லில் எடுத்து விசா­ரிக்க வேண்­டும் என்­கி­றார். இது­பற்றி துணை முத­ல­மைச்­சர் ஓ. பன்­னீர்­செல்­வத்தை கேட்­டால், அது சி.வி.சண்­மு­கத்­தின் தனிப்­பட்ட கருத்து என்­கி­றார். ‘ஜெய­ல­லிதா சாவில் மர்­மம் இருப்­ப­தா­கக் கூறி சிபிஐ விசா­ரணை கேட்ட ஒ.பி.எஸ்ஸே இந்த விஷ­யத்­தில் நழு­வு­கி­றார். ஆனால், அமைச்­சர் ஜெயக்­கு­மாரோ, சி.வி – சண்­மு­கம் கருத்தை ஆமோ­தித்து வர­வேற்­ற­து­டன், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை போலீஸ் அவர்­க­ளுக்கே – உரி­ய­மு­றை­யில் விசா­ரித்­தால்­தான் உண்மை வெளி­வ­ரும் என்­கி­றார்.

அர­சாங்­கமே விசா­ரணை கமி­ஷன் அமைத்து, அதற்கு இரண்டு முறை கால நீட்­டிப்பு வழங்கி விசா­ரணை நடை­பெற்று வரும் நிலை­யில், இப்­படி அமைச்­சர்­களே ஆளுக்­கொரு கருத்தை வெளி­யி­டு­வது எந்த வகை­யில் நியா­யம் என்று தெரி­ய­வில்லை. ஓ.பி.எஸ். உள்­ளிட்ட ஒட்­டு­மொத்த அமைச்­சர்­க­ளும் அப்­பல்­லோ­வில் முகா­மிட்டு ‘ஜெ.சிகிச்­சையை மேற்­பார்­வை­யிட்­ட­தாக செய்­தி­கள் வந்த நிலை­யில், அதி­கா­ரி­க­ளின் மீது பழி­போட்டு, அவர்­களை சிக்க வைக்­கும் சூழ்ச்­சி­தான் சி.வி. சண்­மு­கத்­தின் பேட்­டியோ என்று பொது­மக்­க­ளும், அதி­கா­ரி­கள் தரப்­பும் சந்­தே­கிக்­கத் தொடங்கி விட்­ட­னர்.

இந்ந நிலை­யில், ஆறு­மு­க­சாமி விசா­ரணை ஆணை­யம், 75 நாட்­க­ளும் ஜெய­ல­லி­தாவை சுற்றி இருந்த தோழி உள்­ளிட்ட குடும்­பத்­தி­ன­ரை­யும், அனைத்து அமைச்­சர்­க­ளை­யும், அதி­கா­ரி­க­ளை­யும், சிகிச்சை அளித்த மருத்­து­வர்­க­ளை­யும், அப்­பல்லோ நிர்­வா­கத்­தி­ன­ரை­யும் விசா­ரித்து உண்­மையை தெளி­வுப்­ப­டுத்­தி­னால் மட்­டுமே ‘ஜெ’ மர­ணத்­தில் உள்ள மர்­மம் வில­கும். வில­குமா? பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.