துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 10

பதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019

பாட்டுப் போராளி பாரதி..!

விடு­தலை வேட்­கையை உயிர் மூச்­சா­கக் கொண்டு வாழ்ந்­த­வர் மகா­கவி பார­தி­யார். பார­தத் தாயின் விடு­த­லைக்­காக பாட்­டுப் போர் நடத்­திய போராளி அவர்.

‘‘தேடிச்­சோறு நிதந்­தின்று பல சின்­னஞ்­சிறு கதை­கள் பேசி, மனம் வாடித் துன்­ப­மிக உழன்று பிறர் வாடப் பல செயல்­கள் செய்து நரை கூடிக் கிழப்­ப­ரு­வம் எய்தி கொடுங் கூற்­றுக்­கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனி­தரை போலே நான் வீழ்­வே­னென்று நினைத்­தாயோ?

– என்று ஆவே­சக் கவி பாடிய முண்­டா­சுக் கவி­ஞன் பார­தி­யின் வாழ்க்­கைப் பாதை­யில் கொஞ்­சம் பய­ணிப்­போம்.

இன்­றைய தூத்­துக்­குடி மாவட்­டம் எட்­ட­ய­பு­ரம் நக­ரத்­தில் 1882ம் ஆண்டு டிசம்­பர் மாதம் 11–ம் தேதி சின்­ன­சாமி அய்­யர். இலட்­சுமி அம்­மாள் தம்­ப­தி­ய­ருக்கு மக­னா­கப் பிறந்­த­வர்­தான் சுப்­பையா என்ற சி. சுப்­பி­ர­ம­ணிய பார­தி­யார்.

மிகக் சிறந்த கவி­ஞ­ராக, எழுத்­தா­ள­ராக, பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ராக அறி­யப்­பட்ட பார­தி­யார், இளம் வயது முதலே சிறந்த சமூக சீர்­தி­ருத்­த­வா­தி­ய­கா­வும், விடு­தலை வீர­ரா­க­வும் விளங்­கி­னார்.

பார­தி­யார் 5வயது குழந்­தை­யாக இருந்­த­போதே, அவ­ரது தாயார் லட்­சுமி அம்­மாள் மறைந்­தார். அத­னால் பார­தி­யார், அவ­ரது பாட்டி பாகீ­ரதி அம்­மா­ளி­டம் வளர்ந்­தார். பள்­ளி­யில் படித்­துக் கொண்­டி­ருக்­கும் போதே பார­திக்கு கவிதை எழு­தும் ஆற்­றல்  கைவ­ரப்­பெற்­றது.

1897ம் ஆண்டு சிறு வய­தி­லேயே செல்­லம்­மாளை மணந்­தார். அடுத்த ஓராண்­டி­லேயே பார­தி­யின் குடும்­பம் வறுமை நிலைக்கு சென்­றது. பொரு­ளு­தவி கோரி எட்­ட­ய­பு­ரம் மன்­னனை அவர் அணு­கி­ய­போது, பார­திக்கு அரன்­ம­னை­யி­லேயே பணி கிடைத்­தது. அங்கு சில காலம் பணி­யாற்­றிய பாரதி பின்­னர் 1898–ம் ஆண்­டில் காசி (வார­ணாசி)க்கு சென்­றார். சுமார் நான்கு ஆண்­டு­க­ளுக்கு பிறகு, மீண்­டும், எட்­ட­ய­பு­ரம்  மன்­ன­ரின் அழைப்பை ஏற்று, திரும்ப வந்து அரண்­மனை பணியை மேற்­கொண்­டார்.

பின்­னர் பத்­தி­ரி­கைத்­து­றைக்கு வந்த பார­தி­யார், 1904ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை­யி­லும் சுதே­ச­மித்­தி­ரன் நாளேட்­டில் உதவி ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றி­னார். தொடர்ந்து, சக்­க­ர­வர்த்­திணி, இந்­தியா, சூரி­யோ­த­யம், கர்­ம­யோகி, ‘தர்­மம்’ போன்ற தமிழ் இதழ்­க­ளி­லும், ‘பால­பா­ரத யங் இந்­தியா’ என்ற ஆங்­கில இத­ழி­லும் பணி­யாற்­றி­னார். ‘ஆங்­கில அர­சாங்­கத்­தால் தடை செய்­யப்­பட்ட ‘இந்­தியா’ பத்­தி­ரிகை புதுச்­சே­ரி­யில் இருந்து வெளி­யா­னது. அங்­கும் பார­தி­யார் சில காலம் வாழ்ந்­தார்.

இந்­திய விடு­த­லைப் போராட்ட விழிப்­பு­ணர்­வைத் தூண்­டும் வகை­யில் எழுச்­சி­மிக்க பாடல்­க­ளை­யும், கவி­தை­க­ளை­யும் எழு­தி­ய­வர் பார­தி­யார். சுதந்­தி­ரப் போராட்­டத்தை  பார­தப்­போ­ரா­க­வும், பாஞ்­சா­லியை பாரத தேவி­யா­க­வும் உரு­வ­கப்­ப­டுத்தி மகா­கவி பார­தி­யார் எழு­திய ‘பாஞ்­சாலி சப­தம்’ எனும் கவிதை நூல் மிக­வும் பிர­சித்தி பெற்­ற­தா­கும். அழ­கிய இலக்­கிய நய­மும், கவி நய­மும் கொண்ட அற்­பு­த­மான காப்­பி­யம் பாஞ்­சாலி சப­தம்.

குயில்­பாட்டு, கண்­ணன் பாட்டு, தேசிய கீதங்­கள், பாரதி அறு­பத்­தாறு, ஞானப் பாடல்­கள், தோத்­தி­ரப் பாடல்­கள், விடு­த­லைப் பாடல்­கள், விநா­ய­கர் நான் மணி­மாலை, பதஞ்­ச­லி­யோக சூத்­தி­ரம், பார­தி­யார் பக­வத்­கீதை, உத்­தம வாழ்க்கை, சுதந்­தி­ரச் சங்கு, ஹிந்து தர்­மம் (காந்தி உப­தே­சங்­கள்) சின்­னஞ்­சிறு கிளியே, ஞான­ர­தம், பக­வத் கீதை,  சந்­தி­ரி­கை­யின் கதை, பாஞ்­சாலி சப­தம், புதிய ஆத்­தி­சூடி, பொன்­வால்­நரி உள்­பட ஏரா­ள­மான நூல்­க­ளை­யும் பார­தி­யார் எழுதி வெளி­யிட்­டுள்­ளார்.

‘பாட்­டுக்­கொரு புல­வன், பாரதி’ என பல­ரா­லும் போற்­றிப்­பு­க­ழப்­பட்ட இவர் கவி­தைக்­கான இலக்­கண சட்­டங்­களை தகர்த்­தெ­றிந்து புதுக்­க­வி­தை­களை, எளிய வசன கவி­தை­களை எழு­தி­ய­வர்.

விடு­தலை வேட்­கையை வலி­யு­றுத்­தும் தேசிய உணர்­வுள்ள பார­தி­யா­ரின் பாடல்­களை பிரிட்­டிஷ் அர­சாங்­கம் தடை செய்­தது, அதோடு மட்­டு­மல்­லா­மல், புத்­த­கங்­க­ளும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து அப்­போது, சென்னை மாகாண சட்­ட­ச­பை­யில் கார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றது. தீரர் சத்­திய மூர்த்தி உள்­ளிட்ட முன்­ன­ணித் தலை­வர்­கள் பங்­கேற்று பார­தி­யா­ரின் பாடல்­க­ளுக்­கான தடை விலக்­கப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னர்.

பார­தி­யா­ரின் உணர்ச்சி மிகு கவி­தை­களை, பாடல்­களை தேசி­யத் தலை­வர்­கள் பல­ரும் வர­வேற்று, பாராட்­டுத் தெரி­வித்­துள்­ள­னர். தமிழ் நாட்­டில் விடு­த­லைப் போராட்­டக் களத்­தில் இருந்த வ.உ.சி., சுப்­பி­ர­ம­ணிய சிவா, ஆகி­யோ­ரோடு நெருங்­கிப் பழ­கி­ய­வர் இவர்.

விவே­கா­னந்­த­ரின் மாண­வி­யான சகோ­தரி நிவே­தி­தையை தமது குரு­வாக கருதி, அவரை மிக­வும் மதித்­துப் போற்­றி­ய­வர் பாரதி.

சாஸ்­திர, சம்­பி­ர­தா­யங்­களை உடைத்­தெ­றிந்து முற்­போக்கு சிந்­த­னை­யோடு செயல்­பட்ட பார­தி­யார் அவர் வாழுங்­கா­ல­மெல்­லாம் வறு­மை­யில் வாடி­னார் என்­ப­து­தான் மிக கொடுமை.

‘நமக்கு தொழில் கவிதை, நாட்­டிற்கு உழைத்­தல், இமைப்­பொ­ழு­தும் சோரா­தி­ருத்­தல்’ என்ற நெறி­களை வகுத்­துக்­கொண்டு அதன்­படி செயல்­பட்ட பாரதி, தமிழ், ஆங்­கி­லம், இந்தி, சமஸ்­கி­ரு­தம், வங்­காள மொழி ஆகி­ய­வற்­றில் புலமை பெற்­ற­வர்.

‘‘கவிதை எழு­து­ப­வன் கவி­யன்று, கவி­தையே வாழ்க்­கை­யாக உடை­யோன், வாழ்க்­கையே கவி­தை­யாக செய்­தோன், அவனே கவி’ என நெறி வகுத்து அதன்­படி வாழ்ந்த மகா­கவி, தேசி­யக்­கவி பார­தி­யார்.

‘‘பெண்­ண­டிமை தீரு­மட்­டும் பேசும் இத்­தி­ரு­நாட்­டில் மண்­ண­டிமை தீரு­தல் முயற்­கொம்பே’’ எனப் பெண்­ணு­ரி­மைக்­காக அப்­போதே குரல்­கொ­டுத்­த­வர் பாரதி.

தமிழ், தமி­ழர் நலன், இந்­திய விடு­தலை, சாதி­ம­றுப்பு, பெண் விடு­தலை, ஆகி­ய­வற்றை மையப்­பொ­ரு­ளா­கக் கொண்டு கால­மெல்­லாம் கவி­தை­களை, பாடல்­களை எழு­தி­ய­வர் பாரதி. பல்­வேறு சம­யங்­கள் குறித்­தும் ஏரா­ள­மான கவி­தை­க­ளை­யும் கட்­டு­ரை­க­ளை­யும் எழு­தி­ய­வர் அவர். இளம் வய­தி­லேயே கவி­பு­னை­யும் ஆற்­ற­லைக்­கண்ட எட்­ட­ய­பு­ரம் மன்­னர்­தான். ‘பாரதி’ எனும் பட்­டத்தை வழங்­கி­னார். (பாரதி என்­ப­தற்கு கலை­ம­கள் என்­பது பொருள்) அது­வ­ரை­யி­லும் சுப்­பையா என்ற சுப்­பி­ர­ம­ணி­யாக அறி­யப்­பட்ட அவர் அன்று முதல் ‘சுப்­பி­ர­ம­ணிய பார­தி’­யாக ஆனார். காலப்­போக்­கில் ‘பார­தி­யார்’ என அறி­யப்­பட்­டார்.

உல­கோர் போற்­றும் மகா­க­வி­யாக வாழ்ந்த பார­தி­யா­ரின் இறுதி காலம் மிகக்­கொ­டு­மை­யா­னது. வறு­மை­யின் கோரப்­பி­டி­யில் சிக்­கி­யி­ருந்­தார். இந்­நி­லை­யில் 1921ம் ஆண்டு ஜூலை மாதம் திரு­வல்­லிக்­கேணி பார்த்­த­சா­ரதி கோயில் யானை தாக்­கி­ய­தால் நோய்­வாய்­பட்ட பார­தி­யார் சில நாட்­க­ளில் கடும் வயிற்­றுப்­போக்கு நோயால் பாதிக்­கப்­பட்டு 1921 – செப்­டம்­பர் மாதம் 11ம் தேதி தமது 38வது வய­தி­லேயே உலக வாழ்வை நீத்­தார். பார­தி­யா­ரின் மறை­வுக்கு பிற­கு­தான் அவர் மக்­க­ளா­லும், அர­சாங்­கத்­தா­லும் பெரி­தும் மதித்து போற்­றப்­ப­டு­கி­றார்.

எட்­ட­ய­பு­ரத்­தின் பூர்­வீக வீடு, சென்னை திரு­வல்­லிக்­கேணி பகு­தி­யில் வாழ்ந்த இல்­லம், புதுச்­சே­ரி­யில் அவர் வசித்த வீடு, அனைத்­துமே பார­தி­யா­ரின் நினைவு இல்­லங்­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளன. எட்­ட­ய­பு­ரத்­தில் பாரதி மணி­மண்­ட­ப­மும் அமைத்து வெங்­க­லச் சிலை­யும் அமைத்­துள்­ள­னர்.