பிளாஸ்டிக்: வழிகாட்டும் லடாக்!

பதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019

உலக அள­வில் கழிவு பொருட்­கள், குப்­பை­களை கையாள்­வது பெரும் பிரச்­னை­யாக உள்­ளது. இதற்கு லடாக் பிர­தே­ச­மும் விதி­வி­லக்­கல்ல. லடாக்­கில் மக்­காத குப்­பை­கள் மலை போல் குவி­கின்­றன. குறிப்­பாக கிரா­மப்­பு­றங்­க­ளில் குப்­பை­களை அகற்­று­வது, அதை மறு சூழற்சி செய்­வது பெரும் பிரச்­னை­யாக உள்­ளது.

இதற்கு நிரந்­தர தீர்வு காண ஜம்­மு–­காஷ்­மீர் மாவட்­டத்­தில் உள்ள லடாக் பிராந்­தி­யத்தை சேர்ந்த லேக் மாவட்ட நிர்­வா­கம், அதன் உதவி கமி­ஷ­னர் அவ்னி லவாசா முன்­மு­யற்­சி­யால், கிரா­மப்­புற மேம்­பாட்டு துறை, லேக் தன்­னாட்சி மலை பிர­தேச மேம்­பாட்டு கவுன்­சில் உத­வி­யு­டன் ‘டசாங்டா’ என்ற திட்­டத்தை தொடங்­கி­யது. இந்த திட்­டம் சென்ற வரு­டம் டிசம்­பர் ௧௩ம் தேதி தொடங்­கப்­பட்­டது. டசாங்டா திட்­டத்­தின் நோக்­கம் கிரா­மப்­பு­றங்­கள், சிறிய நகர்ப்­பு­றங்­க­ளில் நிலை­யான கழிவு மேலாண்­மையை மேற்­கொள்­வதே.  

உள்­ளூர் மக்­கள் பேசும் போதி (லடாக்) மொழி­யில் டசாங்­கடா என்­ப­தன் பொருள் சுத்­தம். இந்த திட்­டத்­தின் கீழ் முதன் முத­லில் சோக்­லாம்­சார் நக­ரத்­தில் கழிவு, குப்­பை­களை பிரிக்­கும் மையம் அமைக்­கப்­பட்­டது. வீடு­கள், கடை­க­ளில் இருந்து சேக­ரிக்­கப்­ப­டும் குப்­பை­களை அப்­ப­டியே பள்­ளத்தை மேடாக்­கு­வ­தற்கு கொட்­டா­மல், தரம் பிரிக்­கப்­பட்­டது. இதில் இருந்து பயன்­ப­டும் கழிவு பொருட்­கள் வேறு பயன்­பாட்­டிற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இந்த வரு­டம் டிசம்­பர் ௧௩ம் தேதி­யு­டன், டசாங்டா திட்­டம் தொடங்கி ஒரு வரு­டம் நிறைவு பெறு­கி­றது.

“இந்த ஒரு வரு­டத்­தில் சோக்­லாம்­சார், நுப்ரா, நிமோ, கால்ட்சி ஆகிய ஊர்­க­ளில் இருந்து மொத்­தம் ௬௫ ஆயி­ரம் கிலோ குப்­பை­கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் ௨௭ ஆயி­ரம் கிலோ பழைய கழிவு பொருட்­களை வாங்­கு­ப­வர்­க­ளி­டம் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. அட்­டைப் பெட்டி, முட்டை அடுக்­கும் டிரே, விவ­சாய கழிவு பொருட்­கள் என மொத்­தம் ௧௭ ஆயி­ரம் கிலோ பொருட்­கள்  உயிரி எரி­பொ­ரு­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் காகி­தம், பழைய துணி­களை பயன்­ப­டுத்தி பொம்மை, திரை, தலை­யணை, மெத்தை உறை போன்ற பொருட்­க­ளாக தயா­ரித்­துள்­ள­னர். மது பாட்­டில், பீர் பாட்­டில், உடைந்த கண்­ணாடி துண்டு போன்­ற­வை­கள் பொதுப்­ப­ணித்­துறை, எல்­லை­யில் சாலை அமைக்­கும் பிரி­வைச் சேர்ந்த ஜென­ரல் ரிசர்வ் இன்­ஜி­னி­யர் போர்ஸ் துறை­யி­னர், கட்­டு­மான நிறு­வ­னங்­கள் ஆகி­யவை கட்­டி­டங்­களை கட்­டு­வ­தற்­கும், சாலை அமைப்­ப­தற்­கும் பயன்­ப­டுத்­தி­யுள்­ளன. கண்­ணாடி பாட்­டில், கண்­ணாடி துண்­டு­களை விற்­பனை செய்த வகை­யில் நல்ல வரு­வாய் கிடைத்­துள்­ளது. இதை பயன்­ப­டுத்தி டசாங்டா திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வ­து­டன், சுகா­தார மேம்­பாடு, சுற்­றுச் சூழல் மாசு படா­மல் காக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் காற்று, நீர் நிலை­கள் மாசு­ப­டு­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த திட்­டத்தை பற்றி உதவி கமி­ஷ­னர் அவ்னி லவாசா கூறு­கை­யில், “ஜம்மு மாவட்­டம் பிஸ்­நாக் என்ற இடத்­தில் அமைந்­துள்ள கழி­வு­களை அகற்­றும் மையத்தை பார்த்து, இந்த திட்­டத்தை தொடங்­கி­னோம். பிஸ்­நாக்­கில் உள்ள கழி­வு­களை அகற்­றும் மையத்தை பற்றி படித்­த­வு­டன், இது பற்றி  கிரா­மப்­புற மேம்­பாட்டு துறைக்கு அனுப்­பி­னேன். நாங்­கள் உள்­ளூ­ருக்கு தகுந்­தாற் போல் சில மாற்­றங்­க­ளைச் செய்­துள்­ளோம். பிஸ்­நாக் மையத்தை பார்த்து நாங்­கள் தொடங்­கி­னா­லும், துர­திஷ்­ட­வ­ச­மாக அந்த மையம் தொடர்ந்து இயங்­க­வில்லை” என்று அவர் தெரி­வித்­தார்.

டசாங்டா திட்­டம் லேக் மாவட்­டத்­தில் உள்ள கிரா­மப்­பு­றங்­க­ளுக்­கும், சிறிய நகர்ப்­பு­றங்­க­ளுக்­கும் மட்­டுமே. நகர்ப்­பு­றங்­க­ளில் பல்­வேறு வகை­யான திட்­டங்­கள் உள்­ளன. நகர்­பு­றங்­க­ளில் நக­ராட்­சி­கள், கவுன்­சில், குழுக்­கள் உள்­ளன. நகர்­பு­றங்­க­ளுக்கு நிதி பெரு­ம­ள­வில் வரு­கி­றது. நக­ராட்­சி­க­ளுக்கு நிதி திரட்ட பல்­வேறு வாய்ப்­பு­கள் உள்­ளன.

“நாங்­கள் கிரா­மப்­பு­றங்­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவே கரு­து­கின்­றோம். நாங்­கள் இந்த திட்­டத்தை லேக் மாவட்­டத்­தில் கிரா­மப்­பு­றங்­க­ளி­லேயே நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளோம். நகர்­பு­றங்­க­ளைப் போலவே கிரா­மப்­பு­றங்­க­ளி­லும் குப்­பை­கள், கழிவு பொருட்­கள் பிரச்னை இருந்­தா­லும், இவற்றை நிர்­வ­கிக்க கூடிய அளவு நிதி வசதி இல்லை” என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார

சுற்­று­லாப்­ப­ய­ணி­கள் அதி­க­மாக வரும் மே–ஆ­கஸ்ட் மாதங்­க­ளில் லேக் நக­ரத்­தில் மட்­டும் ௧௬ முதல் ௧௮ டன் குப்­பை­கள் சேரு­கின்­றன. நவம்­பர்–­பிப்­ர­வரி மாதங்­க­ளில் ௩ முதல் ௪ டன் குப்பை மட்­டுமே சேரு­கின்­றது. லேக் நக­ரத்­திற்கு இந்த குப்­பை­களை அகற்­று­வ­தற்கு தேவை­யான வச­தி­கள் உள்­ளது. ஆனால் லேக் நக­ரத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக அதிக மக்­கள் வாழும் சோக்­லாம்­சார் நக­ரத்­திற்கு போது­மான வச­தி­கள் இல்லை. அதே நேரத்­தில் குப்­பை­கள் சேரு­வது அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளது. முக்­கி­ய­மாக லடாக் பிராந்­தி­யத்­தின் இயற்­கை­யான நிலை­மைக்கு, இந்த பிரச்­னைக்கு தீர்வு காணா­விட்­டால், எதிர்­கா­லத்­தில் பின் விளை­வு­கள் கடு­மை­யாக இருக்­கும்.

டசாங்டா திட்­டத்தை அமல்­ப­டுத்­து­வதை கிரா­மப்­புற மேம்­பாட்டு துறை கண்­கா­ணிக்­கி­றது. இந்த துறை மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வது, இந்த திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வது, வீடு­கள், கடை­க­ளில் இருந்து கட்­ட­ணம் வசூ­லிப்­பது, கழிவு பொருட்­களை மறு சுழற்சி செய்து பயன்­ப­டுத்த அரசு சாரா தொண்டு நிறு­வ­னங்­கள் அல்­லது தனி நபர்­க­ளி­டம் இணைந்து செயல்­ப­டு­கி­றது. இதற்கு மற்ற துறை­க­ளின் உத­வி­யும் தேவைப்­ப­டு­கி­றது.

இந்த திட்­டத்­தில் முதல்­ப­டி­யாக வீடு­கள், கடை­க­ளில் குப்பை பிரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­கென இரண்டு குப்பை சேக­ரிக்­கும் குப்பை தொட்­டி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஒன்று மக்­கும் குப்­பைக்­கும், மற்­றொன்று மக்­காத குப்­பைக்­கும் என இரண்டு குப்பை தொட்­டி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. லடாக் பிராந்­தி­யத்­தில் மக்­கும் குப்­பை­கள் அதி­க­மாக சேரு­வ­தில்லை. ஏனெ­னில் மக்­கள் இதை தங்­க­ளின் கால்­ந­டை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர். அதே நேரத்­தில் மக்­காத குப்பை அதி­க­மாக சேரு­கி­றது. மக்­காத குப்­பை­கள் பிரிக்­கப்­பட்ட உடன், குறிப்­பிட்ட இடத்­தில் இவை சேக­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­காக வாக­னங்­களை அனுப்பி சேக­ரிக்­கின்­ற­னர்.

இவ்­வாறு சேக­ரிக்­கப்­ப­டும் மக்­காத குப்­பை­கள் ௨௦ முதல் ௨௨ வகை­யாக பிரிக்­கப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு வகை குப்­பை­யும் மறு சுழற்சி செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சோக்­வாம்­சார், நுப்ரா, நிமோ, கால்ட்சி ஆகிய சேக­ரிப்பு மையங்­கள் தனித் தனி­யாக இயங்­கு­கின்­றன. ஒவ்­வொரு மைய­மும் குறிப்­பிட்ட பகு­தி­க­ளில் இருந்து குப்­பை­களை சேக­ரிக்­கின்­றன என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார்.

அவர் மேலும் கூறு­கை­யில், அரசு நிதி பயன்­ப­டுத்­தும் போது, அது வழக்­க­மாக நிரந்­தர இயங்­கு­வ­தற்கு வச­தி­கள் உரு­வா­கின்­றன. ஆனால் நீங்­க­ளா­கவே தேவை­யான உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­னால், அது தொடர்ந்து இயங்­கு­வது எப்­படி? இது லேக் மாவட்­டத்­தில் கிரா­மப்­பு­றங்­க­ளில் மக்­கள் கட்­ட­ணம் செலுத்­து­வ­தால் இயங்­கு­கி­றது. இதற்கு முழு கார­ணம் உள்­ளூர் மக்­கள். அவர்­கள் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பதை அறிந்து உள்­ள­னர்.

இத­னால் தங்­க­ளுக்கு நன்மை உண்­டா­கும் என்று மக்­கள் கரு­த­வில்லை எனில், அவர்­கள் கட்­ட­ணம் செலுத்த மாட்­டார்­கள். மக்­களே நல்ல முறை­யில் ௯௦ சத­வி­கி­தம் வரை மக்­காத குப்­பை­களை தரம் பிரித்து விடு­கின்­ற­னர். இது பாராட்­டத்­தக்­கது.

மக்­கள் செலுத்­தும் கட்­ட­ணம் குப்­பை­களை சேக­ரிக்­கும் வாக­னத்­திற்­கும், குப்­பை­களை தரம் பிரிக்­கும் ஊழி­யர்­கள் சம்­ப­ளத்­திற்­கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. லடாக் பிராந்­தி­யத்­தில் கடும் குளிர் நில­வு­வ­தால் சைக்­கிள் ரிக்­சாக்­களை பயன்­ப­டுத்த முடி­யாது. குப்­பை­களை தரம் பிரிக்­கும் மையத்­தில் உள்­ளூ­ரைச் சேர்ந்­த­வர்­களே வேலை பார்க்­கின்­ற­னர். இத­னால் எல்­லோ­ரும் பலன் அடை­கின்­ற­னர். வீட்­டிற்கு கட்­ட­ண­மாக மாத்த்­திற்கு ரூ.௫௦, கடை­க­ளில் கட்­ட­ண­மாக ரூ.௨௦௦ வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார்.

ஜம்­மு–­காஷ்­மீர் போலீஸ் துறை­யைச் சேர்ந்த உள்­ளூர் ரேடியோ ஆப்­ப­ரேட்­டர் தின்­லெஸ் டோர்ஜி டசாங்டா திட்­டம் பற்றி கூறு­கை­யில், “இந்த திட்­டம் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டு­கி­றது. இது லேக் மாவட்ட மக்­க­ளுக்கு கிடைத்த வெகு­மதி. எங்­கள் உதவி கமி­ஷ­ன­ரின் (அவ்னி லவாசா) திட்­டத்தை எல்­லோ­ரும் இணைந்து செயல்­ப­டுத்­தி­னால், இந்த மாவட்­டம் நாட்­டி­லேயே சுகா­தா­ர­மான மாவட்­ட­மாக மாறும்” என்று கூறி­னார். லேக்­கில் உள்ள கலாச்­சார மையத்­தின் உதவி இயக்­கு­நர் டுசி­வாங் பாலி­ஜோர் கூறு­கை­யில், எனது கிரா­ம­மான நிமோ­வில், இந்த திட்­டம் வெகு சிறப்­பாக செயல்­பட்டு வரு­கி­றது” என்று கூறி­னார்.

இந்த திட்­டத்­தால் பயன் பெறும் கடைக்­கா­ரர் ரின்­சென் வாங்மோ கூறு­கை­யில், “சுற்­றுலா பய­ணி­கள் அதி­க­ரிக்­கும் போது, குப்பை கழி­வு­களை அகற்­று­வது பெரும் பிரச்­னை­யாக உள்­ளது. நிர்­வா­கத்­தின் முன் முயற்­சி­யால் உள்­ளூர் மக்­க­ளின் பங்­க­ளிப்பு மட்­டு­மல்­லாது, வேலை வாய்பு உரு­வா­கி­றது. இதை இன்­னும் செழு­மைப்­ப­டுத்த குறை­களை களைந்து சரி செய்ய வேண்­டும். ஆனால் இந்த முன் முயற்சி வெற்றி பெற்­றுள்­ளது என்று தெரி­வித்­தார்.

இந்த பகுதி பத்­தி­ரி­கை­யா­ள­ரான டிசி­வாங் ரிக்­ஜின் கூறு­கை­யில், ஆம், நிலைமை மாறி­யுள்­ளது என்று நினைக்­கின்­றேன். மக்­கள் குப்பை, கழிவு பொருட்­களை தரம் பிரிக்க வேண்­டும் என்­றும், மறு சுழற்சி செய்­ய­லாம் என்­பதை உணர்ந்­துள்­ள­னர். இவை எல்­லாம் நாங்­கள் கற்­றுக் கொண்ட முக்­கி­ய­மான விஷ­யங்­கள் என்று தெரி­வித்­தார்.

“நாங்­கள் குப்­பை­களை தரம் பிரிக்­கும் மையங்­க­ளின், குப்பை சேக­ரிக்­கும் பரப்பை அதி­க­ரித்து வரு­கி­றோம். உதா­ர­ண­மாக முன்பு நுப்ரா தரம் பிரிக்­கும் மையத்­திற்கு திஷ்­கிட் கிரா­மத்­தில் இருந்து மட்­டுமே குப்பை சேக­ரிக்­கப்­பட்­டது. இப்­போது இதை ஹண்­டர் கிரா­மத்­திற்­கும் விரிவு படுத்­தி­யுள்­ளோம்.

ஹண்­டர் கிரா­மத்­தின் அருகே அமைந்­துள்ள மணல் மேடு­களை பார்க்க சுற்­றுலா பய­ணி­கள் குவி­கின்­ற­னர். இவர்­கள் இரட்டை திமில் ஒட்­டக்­தில் சவாரி செய்து மணல் மேடு­களை பார்க்க வரு­கின்­ற­னர். இங்கு சுற்­றுலா பய­ணி­கள் தங்­கு­வ­தற்­கான குடில்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இரண்­டா­வ­தாக நாங்­கள் குப்பை தொட்­டி­களை வைக்க அதி­கம் செலவு செய்­தோம்.

இப்­போது உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்­கப்­ப­டும் குப்பை வாளி­களை பயன்­ப­டுத்­து­கின்­றோம். மூன்­றா­வ­தாக குப்பை, கழி­வு­களை தரம் பிரிக்க அதிக ஆட்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ளோம். இறு­தி­யாக பிரிக்­கப்­ப­டும் பிளாஸ்­டிக் பொருட்­களை பயன்­ப­டுத்தி எதிர்­கா­லத்­தில் சாலை­களை அமைக்க உள்­ளோம்” என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார்.  

நன்றி: பெட்­டர் இந்­தியா இணைய

தளத்­தில் ரின்­சன் நோர்பு வாங்­சக்.