ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 26–12–18

25 டிசம்பர் 2018, 05:48 PM

நான் மூகாம்­பி­கை­யின் தீவிர பக்­தன் என்­ப­தால்...!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

‘‘எனக்­கொரு கெட்ட குணம். என்­னி­டம் யாரா­வது வந்து, ‘நீங்­கள் இசை­ய­மைக்­க­வில்லை என்­றால், இந்த படத்தை எடுக்­க­மாட்­டேன், இப்­ப­டியே விட்டு விடு­வேன்’’ என்று சொன்­னால், கண்­டிப்­பாக இசை அமைக்க ஒத்­துக்­கொள்ள மாட்­டேன்! கார­ணம், ‘இவர்­கள் எப்­படி படம் எடுக்­கா­மல் இருக்­கி­றார்­கள், பார்ப்­போமே!’ என்ற எண்­ணம்­தான்.

இரண்டு மூன்று மாதங்­க­ளாக காத்­தி­ருப்­பார்­கள். நான் இறங்கி வர­மாட்­டேன். அப்­பு­றம், வேறொ­ரு­வ­ரின் இசை­யில் படம் வெளி­வந்து விடும்! அப்­படி வந்­த­து­தான் கே. பாக்­ய­ரா­ஜின் முதல் படம் ‘ஒரு கை ஓசை’ (இசை: எம்.எஸ். விஸ்­வ­நா­தன்)

இப்­படி, ‘நீங்­கள் இசை­ய­மைக்­க­வில்லை என்­றால் இந்­தப் படத்தை நான் எடுக்­கப்­போ­வ­தில்லை’ என்று சொல்லி, நான் இசை­ய­மைக்­க­மாட்­டேன் என்று மறுத்து, வேறொ­ரு­வர் இசை­ய­மைப்­பில் படத்தை தயா­ரித்து வெளி­யிட்ட இரு­வர் –- நடி­கர் பார்த்­தி­பன் (‘புதிய பாதை’), அனந்து (கே. பால­சந்­த­ரின் உத­வி­யா­ளர்) படம்: ‘சிக­ரம்.’

சாரு­சித்ரா சீனி­வா­சன், ‘தீஸ்ரி மஞ்­சில்’ என்ற இந்தி படத்தை தமி­ழில் எடுக்க முடிவு செய்து, கமல்  –- ஸ்ரீதே­வியை ஒப்­பந்­தம் செய்­து­விட்டு என்­னி­டம் வந்­தார். எனக்கு படத்­தைப் போட்­டுக்­காட்­டி­னார். எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­து­டன் நான் கச்­சேரி நடத்­திய காலத்­தி­லேயே, இந்த படத்­தின் பாடல்­கள் அத்­த­னை­யும் மனப்­பா­டம். ஆர்.டி. பர்­மன் அற்­பு­த­மாக இசை­ய­மைத்­தி­ருந்­தார்.

படம் முடிந்­த­தும், ‘‘இந்த பாடல்­க­ளைப்­போல் என்­னால் கம்­போஸ் செய்ய முடி­யாது. வேறு யாரை­யா­வது ஏற்­பாடு செய்து கொள்­ளுங்­கள்’’ என்று சொல்லி விட்­டேன்.

சில பாடல்­க­ளுக்கு இணை கிடை­யாது. அது­போல் இசை­ய­மைக்க முயற்சி செய்­யக்­கூ­டாது. ஆர்.டி. பர்­மன் இசை­ய­மைத்த அந்த படத்­தின் பாடல்­க­ளும் அந்த வகை­யைச் சேர்ந்­தவை. சினி­மா­வுக்கு கதை சொல்­வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்­லத் தெரி­யா­மல் மூன்று -– நான்கு மணி நேரம் சொல்­வார்­கள். சிலர், கதை­யைப் பிர­மா­த­மா­கச் சொல்­லி­விட்டு, உப்­புச் சப்பு இல்­லா­மல் பட­மாக்­கு­வார்­கள்.

என்­னி­டம், சொல்­லி­யதை சொல்­லி­ய­வாறே படம் எடுத்த டைரக்­டர்­கள் இரண்டு பேர் : பாலு­ம­கேந்­திரா, மணி­ரத்­னம். கதையை மிக­வும் சுருக்­க­மா­கச் சொல்­லும் இயக்­கு­னர்­க­ளில் ஸ்ரீத­ரும், கே.எஸ்.கோபா­ல­கி­ருஷ்­ண­னும் தனி ரகம். இரு­வ­ரும் 15 நிமி­டங்­க­ளுக்­குள் கதை சொல்­லி­வி­டு­வார்­கள்.

பார­தி­ராஜா அவ­ரது ‘காதல் ஓவி­யம்’ படத்­தின் மீது ரொம்ப நம்­பிக்கை வைத்­தி­ருந்­தார். நான் மூகாம்­பி­கை­யின் தீவிர பக்­தன் என்­ப­தால், ‘படத்­தின் நாய­கன் அம்­பா­ளின் பக்­தன் என்று சொன்­னால், இளை­ய­ராஜா நல்ல டியூன்­களை எல்­லாம் போட்­டுத்­த­ரு­வார்’ என்று பார­தி­யி­டம் உத­வி­யா­ளர்­க­ளாக இருந்த மணி­வண்­ண­னும், கலை­ம­ணி­யும் சொல்­லி­யி­ருப்­பார்­கள் போலும்.

நான் அப்­ப­டத்­துக்கு இசை­ய­மைத்­தேன். ஒரு­நாள் மாலை நேரத்­தில் ஆரம்­பித்த பாடல் கம்­போ­சிங் அன்றே முடிந்து விட்­டது. படத்­துக்­கான எட்­டுப்­பா­டல்­க­ளும் தயா­ரா­கி­விட்­டன.

படம், பின்­னணி இசை சேர்ப்­புக்­காக வந்­த­போது, அந்த படத்­தின் மீது எனக்கு நம்­பிக்கை வர­வில்லை. பார­தி­யி­டம், ‘படம் ரிலீஸ் ஆவ­தற்­குள் நாம் இரு­வ­ரும் குரு­வா­யூர் போய் வர­லாம்’ என்­றேன். ‘சரி’ என்­றார். வேலை சரி­யாக இருந்­த­தால், நகர முடி­ய­வில்லை.