நிதா­ன­மா ஓடு­றேன்! – -இயக்­கு­னர் பாலாஜி சக்­தி­வேல்

25 டிசம்பர் 2018, 05:44 PM

‘காதல்’ படத்­தின் மூலம் ஒட்­டு­மொத்த இந்­திய சினி­மா­வையே கவ­னிக்க வைத்­த­வர் இயக்­கு­னர் பாலாஜி சக்­தி­வேல். தற்­போது  புதிய முகங்­களை வைத்து ‘யார் இவர்­கள்?’ என்ற படத்தை எடுத்து முடித்­தி­ருக்­கி­றார். அவ­ரு­டன் பேசி­ய­தி­லி­ருந்து...

* ‘வழக்கு எண் 18/9’ படத்­துக்­குப் பிறகு இவ்­வ­ளவு நீண்ட இடை­வெளி  ஏன்?

ஒவ்­வொரு படத்­தை­யும் ரசி­கர்­கள் கூர்ந்து கவ­னிக்­கி­றாங்க. ‘இந்த பாலாஜி சக்­தி­வேல் அதி­கமா படம் பண்­ற­தில்­லையே?’ன்னு எப்­ப­வுமே மக்­கள் கேள்வி கேட்­கி­ற­தில்லே. ஆனா, ஒரு இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் ஒரு நல்ல படம் கொடுக்­கும்­போது, அவங்­க­ளோடு 10-ம் வகுப்­பில் படித்த பழைய நண்­ப­னைத் திரும்­ப­வும் பார்த்து நினை­வு­க­ளைப் பகிர்ந்து கொள்­வது மாதிரி என்­னோட முந்­தைய படங்­க­ளைப் பற்­றிப் பேசு­றாங்க. என்­னமோ தெரி­யலே, வியா­பார ரீதி­யான படங்­கள் மட்­டுமே செய்ய வேண்­டும் என்­ப­தில் எனக்கு உடன்­பா­டில்லை. அத­னா­ல­தான் நிதா­ன­மா ஓடு­றேன்.

* நிறைய புதி­ய­வர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்து  நடிக்க வைக்­கி­றீர்­களே?

வயது, முக அமைப்பை வைத்து என் கதா­பாத்­தி­ரத்­துக்­கான நபர்­க­ளைத் தேர்வு செய்­கி­றேன். எனக்கு ஒரு ஆள் முழு­வ­து­மாக அப்­ப­டியே நடி­க­ராக மாறி நடிக்க ணும்னு இல்லை. அவர்­க­ளது தோற்­ற­மும் பாதி பொருத்­த­மாக இருக்க வேண்­டும்.   நடிப்­புக்­காக மெனெக்­கெ­டல்­கள் கூடாது. அத­னால்­தான் என் பார்­வை­யில் ஊரில் இருப்­ப­வர்­கள் எல்­லோ­ரை­யுமே நடி­கர்­க­ளா­கப் பார்ப்­பேன்.  புதிய முகங்­களை எனக்கு ஏற்ற மாதிரி வடி­வ­மைப்­பது திருப்­தி­யாக இருக்கு. அதற்­காக நடிப்­புக்­காக பெயர் பெற்ற நடி­கர்­கள் பக்­கம் போக மாட்­டேன் என்­ப­தெல்­லாம் இல்லை.  ‘சாமு­ராய்’, ‘காதல்’ என என்­னோட படங்­க­ளில் அப்­படி பல நடி­கர்­களை நடிக்க வைத்­தி­ருக்­கி­றேன்.

* ‘யார் இவர்­கள்?’ படத்­தில் என்ன கதை?

மருத்­து­வக் கல்­லூரி மாண­வன் ஒரு­வன் தான் செய்­யாத தவ­றுக்­காக எதிர்­கொள்­கிற விஷ­யமே ‘யார் இவர்­கள்?’ திரைப்­ப­டம்.

* ‘ரா...ரா... ராஜ­சே­கர்’ திரைப்­ப­டம் என்ன ஆயிற்று?

எப்­போ­துமே என்­னோட பேப்­பரை நான் திருத்­தி­விட்டு அடுத்த தேட­லுக்­குப் போய்­வி­டு­வேன். தேர்வு முடி­வைத் தயா­ரிப்­பா­ளர்­கள்­தான் வெளி­யிட வேண்­டும்.  ‘ரா...ரா...ராஜ­சே­கர்’, ‘யார் இவர்­கள்?’ ஆகிய படங்­கள் தயா­ரிப்­பா­ளர்­க­ளின் முடி­வுக்­கா­கக் காத்­தி­ருக்­கின்­றன.

‘ரா...ரா... ராஜ­சே­கர்’ இன்­னும் ஒரு வாரம் மட்­டும் படப்­பி­டிப்பு செய்ய வேண்­டும். அந்த நேரத்­தில் தயா­ரிப்­பா­ளர் லிங்­கு­சாமி சில பிரச்­னை­க­ளில் இருந்­தார். இப்­போது அவர் இயக்­கிய ‘சண்­டக்­கோழி 2’ படத்­துக்­குப் பிறகு பிரச்­னை­கள் எல்­லாம் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கச் சரி­யாகி வரு­கின்­றன. எப்­போது வந்­தா­லும் அது நல்ல தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. விரை­வில் அப்­ப­டம் குறித்த மற்ற அறி­விப்­பு­கள் வரும்.