கிறிஸ்துமஸ் நன்னாளில் உலகில் சகோதரத்துவம் மலரட்டும் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துச்செய்தி

பதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2018 19:54

புதுடில்லி,

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை இன்று வெளியிட்டார். கிறிஸ்துமஸ் திருநாளில் உலகமெங்கும் சகோதரத்துவம், மனிதநேயம் மலரட்டும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.

டிசம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைவர்கள் பலர் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

‘‘கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக எனது கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’’

‘‘இயேசு கிறிஸ்து அமைதி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகை மனித நேயத்தையும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை, அன்பு பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை போற்றுகிறது. இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் தேசம் மற்றும் உலகம் முழுவதும் சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் மலரட்டும்’’ என்று ராம் நாத் கோவிந்த் கூறினார்.

தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்தும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வெளியிட்ட வாழ்த்து செய்தியில்

‘‘இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மக்கள் மகிழ்ச்சியோடும் உற்சாகத்துடனும் கொண்டாட வாழ்த்துகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்’’ என்று பன்வாரிலால் புரோஹித் கூறினார்.