ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 19–12–18

18 டிசம்பர் 2018, 03:32 PM

ராஜா­வின் இசை தமி­ழர்­க­ளின் இசை!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

மறைந்த இயக்­கு­னர் – ஒளிப்­ப­தி­வா­ளர் பாலு­ம­கேந்­தி­ரா­வின் நினை­வ­லை­க­ளின் சிறு தொகுப்பு...

‘அன்­னக்­கிளி’ பட­மும், அதற்­கான இளை­ய­ரா­ஜா­வின் இசை­யும் மிகப்­பெ­ரிய வெற்­றி­யீட்­டின.

‘அன்­னக்­கிளி’ படத்­திற்­குப் பின் ராஜா­வுக்கு உட்­கார நேர­மில்­லாது தொடர்ந்து பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்­தார். வெற்றி மேல் வெற்றி. தங்­க­ளு­டைய மண்­ணின் இசையை, தமி­ழர்­கள் இளை­ய­ராஜா என்ற இந்­தக் கிரா­மத்து இளை­ஞன் மூலம் தெரிந்து கொண்­டார்­கள்.

ராஜா­வின் இசை, தமி­ழர்­க­ளின் இசை. தமிழ் மண்­ணின் இசை. தமிழ் கிரா­மங்­க­ளின் மண்­வா­சனை யோடும், அந்த மக்­க­ளின் வியர்வை வாச­னை­யோ­டும் கலந்து வந்த இசை.

பூனே திரைப்­ப­டக் கல்­லுா­ரி­யில் எனது படிப்பை முடித்து தங்­கப் பதக்­கம் வென்று நான் வெளி­வந்த வரு­டம் 1969. ‘செம்­மீன்’ புகழ் ராமு கரி­யாத், ‘செம்­மீ’னை அடுத்து இயக்­கிய ‘நெல்லு’ என்ற மலை­யா­ளப் படத்­தின் ஒளிப்­ப­தி­வா­ள­ராக என்னை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றார். வரு­டம் 1971.

‘நெல்லு’ படத்­தின் இசை­ய­மைப்­பா­ளர் சலீல் சவுத்ரி. ‘செம்­மீன்’ படத்­திற்­கும் அவர்­தான் இசை­ய­மைத்­தி­ருந்­தார். இந்­தி­யத் திரை­யி­சை­யின் மகா மேதை­க­ளில் ஒரு­வர் சலீல் சவுத்ரி. ‘நெல்லு’ படத்­தின் ஒளிப்­ப­தி­வைப் பார்த்து பிர­மித்­துப் போன அவர் என் மீது மிக­வும் பிரி­ய­மாக இருந்­தார். அந்­தப் பிரி­யத்­தின் வெளிப்­பா­டாக அவர் ஒரு நாள் என்­னி­டம் சொன்­னார்.

‘‘பாலு நீ இயக்­கும் முதல் படத்­திற்கு நான் தான் இசை­ய­மைப்­பேன்”. இந்­திய இசை­வா­னில் தன்­னி­க­ரற்ற தனி நட்­சத்­தி­ர­மா­கத் திகழ்ந்த அந்த மகா வித்­வா­னின் அன்­புக் கட்­டளை அது. அவர் விரும்­பி­ய­ப­டியே, எனது முதல் பட­மான ‘கோகி­லா’­வுக்கு அவரே இசை­ய­மைத்து என்னை ஒரு இயக்­கு­ன­ரா­கத் துவக்கி வைத்­தார். அது நடந்த வரு­டம் 1976.

எனது முதல் படத்­தின் இசை­ய­மைப்­பா­ள­ராக எனது நண்­பர் இளை­ய­ரா­ஜா­வைத்­தான் வைத்­துக் கொள்ள வேண்­டும் என்று ஆசைப்­பட்­ட­வன் நான். கன்­னட ‘கோகி­லா’­வைத் தொடர்ந்து நான் இயக்­கிய இரண்­டா­வது படம் ‘அழி­யாத கோலங்­கள்.’ தமிழ் படம்.

இந்த படத்­திற்­கும் சலீல் சவுத்­ரியே இசை­ய­மைத்­தார். அவர் வேண்­டு­கோளை என்­னால் தட்­ட­மு­டி­ய­வில்லை. 78-ல் நான் இயக்­கிய எனது மூன்­றா­வது படம் ‘மூடு­பனி.’ இந்த படத்­திற்­குத்­தான் நான் இளை­ய­ரா­ஜாவை வைத்­துக் கொள்ள முடிந்­தது. ‘மூடு­பனி’ எனக்கு மூன்­றா­வது படம். இளை­ய­ரா­ஜா­வுக்கு அது நுாறா­வது படம். இளை­ய­ராஜா அத்­தனை வேக­மா­கப் போய்க்­கொண்­டி­ருந்­தார்.” -இயக்­கு­நர் – ஒளிப்­ப­தி­வா­ளர் பாலு­ம­கேந்­திரா தனது வலைப்­பூ­வில் எழு­தி­யி­ருந்த கட்­டு­ரை­யின் முதல் பகு­தி­யில் ஒரு பகுதி இது.