நாங்­கள் நல்ல நண்­பர்­கள்! – சுரேஷ் மேனன்

18 டிசம்பர் 2018, 03:29 PM

நடி­கர், ஒளிப்­பதி வாளர், இயக்­கு­நர் என்று பன்­மு­கம் கொண்­ட­வர் சுரேஷ் சந்­தி­ர­மே­னன். சமூக சேவை­யில் அதிக நாட்­ட­முள்ள இவர் சமீ­பத்­தில் My Karma App என்ற குவிஸ் அப்­ளி­கே­ஷனை உரு­வாக்­கி­யுள்­ளார். அத­னைப் பற்­றிய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு சென்­னை­யில் நடை­பெற்­றது. அறி­முக விழா முடிந்து வெளியே வந்த சுரேஷ் சந்­திர மேன­னி­டம் பேசி­னோம்.

‘‘என்னை ஒரு ஒளிப்­ப­தி­வா­ள­ராக, இயக்­கு­ன­ராக, நடி­க­ராக பார்த்­தி­ருப்­பீர்­கள். 40 வரு­டங்­க­ளாக இந்த துறை­யி­லி­ருந்து வரு­கி­றேன். ‘16 வயசு’ என்ற தெலுங்­குப் படத்­தில் உதவி ஒளிப்­ப­தி­வா­ள­ராக என் கேரி­யரை ஆரம்­பித்­தேன். ஸ்ரீதேவி நடிaத்த படம் அது. தொடர்ந்து ‘வாழ்வே மாயம்’, ‘தீ’, ‘மரு­ம­கள்’, ‘விடு­தலை’, ‘பிரேம பாசம்’ என்று ஏரா­ள­மான படங்­க­ளில் வேலை பார்த்­துள்­ளேன்.‘புதிய முகம்’ படத்தை இயக்கி நடித்­தேன். ஏ.ஆர். ரஹ்­மா­னின் இரண்­டா­வது படம் அது.

டிவி சீரி­யல்­கள், பல்­வேறு டாகு­மென்­ட­ரி­கள், ரேவதி இயக்­கத்­தில் ‘மித்ரு மை பிரண்ட்’ என்ற ஆங்­கி­லப் படத்­தைத் தயா­ரித்­துள்­ளேன். தயா­ரிப்­பா­ளர் உட்­பட மூன்று தேசிய விரு­து­களை அந்த படம் பெற்­றது. அப்­போ­தைய ஜனா­தி­பதி அப்­துல் கலாம் விருது வழங்­கி­னார். நீண்ட நாட்­க­ளாக நடிப்­புக்கு ஓய்வு கொடுத்­தேன். சமீ­பத்­திய தமிழ் படங்­கள் என் மவு­னத்­தைக் கலைத்­தன. இளை­ஞர்­கள் மிக பிர­மா­த­மாக வரு­கி­றார்­கள்.

மலை­யா­ளத்­தில் துல்­கர் சல்­மான் நடித்த ‘சோலோ’­வில் செகண்ட் இன்­னிங்ஸ் ஆரம்­ப­மா­னது. தமி­ழில் சூர்­யா­வு­டன் ‘தானா சேர்ந்த கூட்­டம்’, விஜய் சேது­ப­தி­யு­டன் ‘ஜுங்கா’ போன்ற படங்­கள் பண்­ணி­னேன். நடிப்­ப­தைத் தாண்டி பல்­வேறு சமூக சேவை­க­ளில் எனக்கு ஆர்­வம் அதி­கம். ஆர்­வத்­து­டன் நிறுத்­திக் கொள்­ளா­மல் ஏரா­ள­மான வளர்ச்­சித் திட்­டங்­க­ளை­யும் செயல்­ப­டுத்­தி­யுள்­ளேன்.

கன்­டெய்­னர் மூலம் கிரா­மப்­பு­றப் பெண்­க­ளுக்கு கழிப்­பி­டம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றேன். சென்னை காவல் துறைக்கு பல டிரா­பிக் கன்ட்­ரோல் ஐடி­யாக்­கள் செய்து கொடுத்­தி­ருக்­கி­றேன்.

ஒரு குடி­ம­க­னாக இதை­யெல்­லாம் செய்து கொண்­டி­ருக்­கி­றேன். இந்த ஆப்பை உரு­வாக்க முக்­கி­யக் கார­ணம் இந்த தலை­மு­றைக்கு பொது அறி­வைப் பற்­றிய புரி­தலோ, ஈடு­பாடோ இல்லை. அவர்­களை ஈர்க்க மொபை­லில் இந்த மாதிரி ஒரு ஆப் உரு­வாக்க நினைத்­தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்­கா­லம். அத­னால்­தான் இதை தேர்ந்­தெ­டுத்­தேன்.

 இதில் எனக்­கும் பய­னா­ளிக்­கும் மட்­டுமே நேரடி தொடர்பு. நடு­வில் எந்த ஏஜன்ட்­டும் கிடை­யாது. மக்­கள் டிஜிட்­டல் மணியை உப­யோ­கிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். மொபைலை மட்­டுமே உல­கம் என நினைத்­தி­ருக்­கி­றார்­கள். கர்மா என்­பது தேசிய அள­வில் தெரிந்த ஒரு வார்த்தை. அத­னால் இந்த அப்­ளி­கே­ஷ­னுக்கு அந்­தப் பெயரை வைத்­தி­ருக்­கி­றோம்.

என்­னைச் சந்­திக்­கும் நண்­பர்­கள் இள­மை­யா­கத்­தானே இருக்­கீங்க... இரண்­டா­வது கல்­யா­ணம் செய்து கொள்­ள­லாமே என்­கி­றார்­கள். ரேவ­தி­யு­டன் சில வரு­டங்­கள்­தான் வாழ்ந்­தேன். அதுவே ஆயு­சுக்­கும் மன­நி­றை­வை­யும் மகிழ்ச்­சி­யை­யும் கொடுத்­துள்­ளது.

இப்­போ­தும் நாங்­கள் நல்ல நண்­பர்­க­ளாக பழ­கு­கி­றோம். ரஜினி, கமல் போன்ற சினிமா ஜாம்­ப­வான்­கள் இப்­போது அர­சி­ய­லில் இறங்­கி­யுள்­ளார்­கள். அவர்­கள் கட்­சி­யில் சேரும் எண்­ணம் இல்லை என்­றா­லும் அவர்­க­ளின் அர­சி­யல் வளர்ச்­சிக்கு உத­வும் வகை­யில் என்­னி­டம் ஏரா­ள­மான முற்­போக்­கான திட்­டங்­கள் இருக்­கின்­றன.

சினி­மா­வைப் பொறுத்­த­வரை செலக்­டி­வான படங்­க­ளில் நடித்து வரு­கி­றேன். தற்­போது மலை­யா­ளத்­தில் பிருத்­வி­ராஜ் இயக்­கத்­தில் மோகன்­லால் நடிக்­கும் ‘லூசி­பர்’, ‘ஜெயம்’ ரவி­யின் ‘அடங்க மறு’, பரத்­து­டன் ‘காளி­தாஸ்’, பிர­பு­தே­வா­வு­டன் ‘பொன் மாணிக்­க­வேல்’, ஜி.வி. பிர­கா­ஷு­டன் ‘4ஜி’ ஆகிய படங்­க­ளில் நடித்­துள்­ளேன். சினி­மா­வில் இருக்­கும் அதே ஆர்­வம் சமூ­கத்­துக்கு நல்­லது பண்ண வேண்­டும் என்­ப­தி­லும் இருக்­கி­றது’’ என்­றார்.