ஹாக்கி : சீனாவை வைத்து விளையாடிய ஆஸ்திரேலியா

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2018 23:48


புவ­னேஸ்­வர்:

ஒடி­சா­வின் புவ­னேஸ்­வர் நக­ரில் நடை­பெற்று வரும் உல­கக்­கோப்பை ஹாக்­கித் தொட­ரில், நேற்று மாலை நடை­பெற்ற ஆட்­டம் ஒன்­றில் பி பிரி­வில் உள்ள ஆஸ்­தி­ரே­லியா – சீனா அணி­க­ளும், அயர்­லாந்து – இங்­கி­லாந்து அணி­க­ளும் மோதின. இதில், ஆஸ்­தி­ரே­லியா ஏற்­க­னவே காலி­று­திக்­குள் நுழைந்­து­விட்­டது. எனவே, சீனா காலி­று­திக்­குள் நுழைய போரா­டி­னா­லும், அது மீண்­டும் ஒரு போட்­டி­யில் விளை­யாடி, தன்­னைக் காப்­பாற்­றிக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கும். நடப்பு சாம்­பி­ய­னான ஆஸ்­தி­ரே­லியா, மிகுந்த உற்­சா­கத்­து­டன் தன் 3வது ஆட்­டத்­தைத் தொடங்­கி­யது. தொடக்­கத்­தின் 9ம் நிமி­டத்­தில் கோல் அடித்த ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பிளாக்கி கோவர்ஸ் தன் அணிக்கு 1–0 என்று முன்­னிலை கொடுத்­தார். தொடர்ந்து 15வது நிமி­டத்­தில் ஆரன் சால்வ்ஸ்கி 2வது கோல் அடித்து,  2–0 என்று முன்­னிலை கொடுத்­தார்.

ஆட்­டத்­தின் 2ம் கால்­ப­கு­தி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் டாம் கிரேஜ் 16வது நிமி­டத்­தி­லும், கோவர்ஸ் 19வது நிமி­டத்­தி­லும், ஜெர்மி ஹேவர்ட் 22வது நிமி­டத்­தி­லும், ஜேக் வெட்­டன் 29வது நிமி­டத்­தி­லும் கோல் மழை பொழிந்­த­னர். இத­னால், 2ம் கால் பகு­தி­யில் 6–0 என்று கோல் முன்­னிலை பெற்­றது.

மூன்­றாம் கால் பகு­தி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆதிக்­கம் தொடர்ந்­தது. டிம் பிராண்ட் 33வது நிமி­டத்­தில், கோவர்ஸ் 34வது நிமி­டத்­தில், டைலான் வொர்த்ஸ்­பூன் 38வது நிமி­டத்­தில் கோல் விளா­சி­ய­தால், 3ம் கால்­ப­குதி முடி­வில் ஆஸ்­தி­ரே­லியா 9–0 என்று முன்­னிலை பெற்­றது.

4ம் கால் பகு­தி­யில் 49வது நிமி­டத்­தில் பிளைன் ஓகில்வி 49வது நிமி­டத்­தி­லும், டிம் பிராண்ட் 55வது நிமி­டத்­தி­லும் கோல் அடித்­த­னர். ஒட்டு மொத்­த­மாக ஆட்ட நேர முடி­வில் 11–0 என்ற கோல் கணக்­கில் ஆஸ்­தி­ரே­லியா வெற்­றி­பெற்­றது. சீனா தொட­ரில் இருந்து வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.