மெஸ்ஸி திறமையானவரா... பீலே புது விளக்கம் சொல்கிறார்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2018 23:47


புது­டில்லி:

 சர்­வ­தேச கால்­பந்து போட்­டி­க­ளி­லும், கிளப் போட்­டி­க­ளி­லும், முதல் தர போட்­டி­க­ளி­லும் இணைந்து ஆயி­ரம் கோல் அடிப்­பது பெரிய சாதனை.

அதி­லும், 3 முறை பிபா கால்­பந்து உல­கக்­கோப்­பையை வெல்­வது என்­பது அதி­லும் பெரிய சாதனை. இத்­தனை சாத­னை­க­ளுக்­கும் முதல் சொந்­தக்­கா­ர­ரான பிரே­சில் நாட்­டின் பீலே கடந்த சில ஆண்­டு­க­ளாக உடல் நலக்­கு­றை­வால் அவ­திப்­ப­டு­கி­றார்.

ஆனா­லும், கால்­பந்­தின் மீதான காதல் போக­வில்லை. சர்­வ­தேச ஆட்­டங்­களை உன்­னிப்­பாக கவ­னித்து வரும் அவர், பிரே­சில் நாட்­டில் வெளி­யா­கும், போல்ஹா டி எஸ் பவுலோ என்ற பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டி­யில் இருந்து... ‘‘கடந்த சில ஆண்­டு­க­ளாக உடல் நலக்­கு­றைவு இருப்­பது உண்மை. வலி­யில்லை. ஆனால், சோர்­வைத் தவிர பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. அத­னால், கொஞ்­சம் உற்­சா­கத்­து­டன் உள்­ளேன்.

சர்­வ­தேச அள­வில் சிறந்த கால்பந்து வீரர் யார் என்று கேட்­கி­றீர்­கள். மெஸ்­ஸி­தான் சிறந்த வீரர் என்று சொல்­ல­லாம். ஆனால், அவ­ரி­டம் பந்­தைக் கடத்­தும் குறிப்­பிட்ட ஒரு­தி­றமை மட்­டுமே உள்­ளது. ஆனால், அதை மட்­டுமே வைத்து அவரை எப்­படி சிறந்த வீரர் என்று சொல்­லிட முடி­யும்.

மெஸ்­ஸி­யு­டன் ஒப்­பி­டும்­போது மார­டோனா மிக­வும் சிறந்த ஒரு வீரர். ஆமாம் மெஸ்­ஸி­யை­விட மார­டோனா சிறந்த வீரர் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை. மெஸ்­ஸி­யு­டன் ஒப்­பி­டும்­போது அவரை விட சிறந்த கால்­பந்­தாட்ட வீரர்­க­ளாக ஜெர்­மன் நாட்­டின் பிரான்ஸ் பெக்­கென்­ப­வுர், டச்சு நாட்­டின் ஜோஹன் குருய்ப் ஆகி­யோர் உள்­ள­னர். அவர்­க­ளின் திற­மைக்கு முன்­னர் மெஸ்ஸி சாதா­ர­ணம்.

இது­வரை மார­டோ­னாவை நான் நேருக்கு நேர் பார்த்­தது இல்லை. ஆனால், அவர் மீது எனக்கு நல்ல அபிப்­ரா­யம் உண்டு‘‘ என்­கி­றார். கால்­பந்­தின் தாதா­வான நீங்க சொன்னா சரி­யா­கத்­தான் இருக்­கு­முங்க.