அடிலெய்டில் திணறிய ஆஸ்திரேலியா இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தல்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2018 23:45


அடி­லெய்ட்:

இந்­தியா – ஆஸ்­தி­ரே­லிய அணி­கள் மோதும் 4 போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரின் முதல் போட்டி, அடி­லெய்ட் நக­ரில் கடந்த 6ம் தேதி தொடங்­கி­யது. டாஸ் வென்று பேட்­டிங் செய்த இந்­தியா முதல் நாள் ஆட்ட நேர முடி­வில் 87.5 ஓவர்­க­ளில் 9 விக்­கெட் இழப்­புக்கு 250 ரன்­கள் எடுத்­தது. நேற்று காலை ஆட்­டம் தொடங்கி, ஒரே ஒரு பந்து வீசிய நிலை­யில், ஷமி 6 ரன்­க­ளில் ஆட்­டம் இழக்க, இந்­தி­யா­வின் முதல் இன்­னிங்ஸ் 88 ஓவர்­க­ளில் 250க்கு முடி­வுக்கு வந்­தது.

ஆஸ்­தி­ரே­லிய தரப்­பில் ஜோஸ் ஹேஸ்­லி­வுட் 3, மிட்­செல் ஸ்டார்க் 2, கம்­மின்ஸ் 2 மற்­றும் லியோன் 2 விக்­கெட்­கள் வீழ்த்­தி­னர். தொடர்ந்து ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் ஆரோன் பிஞ்ச், மார்­கஸ் ஹாரிஸ் ஆகி­யோர் ஆட்­டத்­தைத் தொடங்­கி­னர். இசாந்த் சர்மா வீசிய முதல் ஓவ­ரின் 3வது பந்­தில், பிஞ்ச் 2 விக்­கெட்­களை தெறிக்­க­விட்­டார். பிஞ்ச் டக் அவுட் ஆனார். 2வது விக்­கெட் ஜோடி­யாக உஸ்­மான் கவாஜா, ஹாரி­சு­டன் இணைந்­தார். இந்த ஜோடி நிதா­ன­மாக ஆடி­யது. எனி­னும், களத்­தின் தன்­மை­யைக் கணித்த கோலி, சுழற்­பந்து வீச்­சா­ளர் அஸ்­வினை களம் இறக்­கி­னார்.தனக்­குக் கொடுக்­கப்­பட்ட பணியை 22வது ஓவ­ரில் அஸ்­வின் முடித்­தார்.

ஹாரிசை 26 ரன்­னில் அஸ்­வின் வெளி­யேற்­றி­னார். தொடர்ந்து 3வது விக்­கெட்­டுக்கு கவாஜா, ஷான் மார்ஸ் இணைந்­த­னர். ஷான் மார்ஸ் 2 ரன்­னில் அஸ்­வின் பந்து வீச்­சில் ஆட்­டம் இழந்­தார். 4வது விக்­கெட்­டுக்கு கவாஜா, பீட்­டர் ஹேண்ட்ஸ்­கோம்ப் இணைந்­த­னர். கவா­ஜா­வின் ஆட்­டத்தை 26 ரன்­னில் முடி­வுக்­குக் கொண்டு வந்­தார் அஸ்­வின். நேற்­றைய போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் முக்­கி­ய­மான 3 வீரர்­களை அஸ்­வின் தொடர்ந்து ஆட்­டம் இழக்­கச் செய்­தது குறிப்­பி­டத்­தக்­கது. இதை­ய­டுத்து, 5வது விக்­கெட் ஜோடிக்கு ஹேண்ட்ஸ் கோம்ப், டிரா­விஸ் ஹெட் இணைந்­த­னர்.

ஹேண்ட்ஸ்­கோம்ப் தடுப்­பாட்­டம் ஆடி­னார். ஆனால், பும்ரா வீசிய பவுன்­சர் பந்தை ஹேண்ட்ஸ்­கோம்ப் தடுக்க முயல, பந்து பேட்­டில் உரசி, கீப்­பர் ரிஷப்­பான்­டி­டம் தஞ்­சம் அடைந்­தது. 34 ரன்­னில் ஹேண்ட்ஸ்­கோம்ப் ஆட்­டம் இழந்­தார். ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் 6வது விக்­கெட்­டுக்கு டிரா­விஸ் ஹெட் மற்­றும் கேப்­டன் டிம்­பெய்னி இணைந்­த­னர். டிம்­பெய்­னியை 5 ரன்­னில் இசாந்த் வெளி­யேற்­றி­னார். இது அவ­ரது 50வது டெஸ்ட் விக்­கெட் ஆகும். ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் 7வது விக்கெட் ஜோடி­யாக டிரா­வின் ஹெட் மற்­றும்  பாட் கம்­மின்ஸ் இணைந்­த­னர். இந்த ஜோடி­யின் நிதான ஆட்­டத்­தால், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ரன் விகி­தம் மெல்ல உயர்ந்­தது. கம்­மின்சை 10 ரன்­னில் பும்ரா ஆட்­டம் இழக்­கச் செய்­தார்.

ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் 8வது விக்­கெட்­டுக்கு ஹெட் மற்­றும் மிட்­செல் ஸ்டார்க் இணைந்­த­னர். ஒரு­மு­னை­யில் விக்­கெட் வீழ்ந்­தா­லும், மறு­மு­னை­யில் டிரா­விஸ்­ஹெட் நிதான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி, தன் அணிக்­காக அரை சதத்­தைக் கடந்து விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தார். நேற்று 2ம் நாள் ஆட்ட நேர முடி­வில் ஆஸ்­தி­ரே­லிய அணி 88 ஓவர்­க­ளில் 7 விக்­கெட் இழப்­புக்கு 191 ரன் எடுத்­தி­ருந்­தது. ஸ்டார்க் 8, டிரா­விஸ் ஹெட் 61 ரன்­னு­டன் களத்­தில் இருந்­த­னர். இந்­திய பந்து வீச்­சா­ளர்­க­ளில் அஸ்­வின் 3, இசாந்த் மற்­றும் பும்ரா தலா 2 விக்­கெட் வீழ்த்­தி­னர்.

இரண்­டாம் நாள் ஆட்ட நேர முடி­வில் இந்­திய அணி­யை­விட 59 ரன்­கள் ஆஸ்­தி­ரே­லிய அணி பின்­தங்­கி­யி­ருந்­தது. இன்று அதி­காலை 3ம் நாள் ஆட்­டம் தொடங்­கு­கி­றது. அடி­லெய்ட் களம் 3ம் நாளில் சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மாக இருக்­கும் என்­கின்­ற­னர் கிரிக்­கெட் வர்­ண­னை­யா­ளர்­கள்.

கொளுத்­திய பான்ட்

ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் விக்­கெட்­கள் வீழ்ந்து கொண்­டி­ருந்த நிலை­யில், உஸ்­மான் கவாஜா தன் அணி­யைக் காப்­பாற்ற போரா­டி­னார். 40 ஓவர்­கள் வரை தாக்­கு­பி­டித்த கவாஜா, 125 பந்­தில் ஒரு பவுண்­டரி உத­வி­யு­டன் 28 ரன் சேர்த்­தார். அவர் அஸ்­வின் வீசிய 40வது ஓவ­ரில் ஆட்­டம் இழந்­தார். அவ­ரது தடுப்­பாட்­டத்தை சுட்­டிக்­காட்­டிய பான்ட் , ‘‘எல்­லோ­ரும் இங்கே புஜா­ரா­வா­கி­விட முடி­யாது’’ என்­றார். இது இந்­த­முறை வார்த்­தைப்­போரை இந்­தி­யர்­கள் தொடங்­கி­விட்­ட­னர் என்று ஆஸி, மீடி­யாக்­கள் புலம்­பத்­தொ­டங்­கி ­யுள்­ளன.

 பாக்ஸ் கிரிக்­கெட் சேன­லுக்கு கோலி கொடுத்த பேட்­டி­யில், ‘‘என் தவ­று­க­ளுக்கு நான்­தான் பொறுப்­பேற்க முடி­யும். யாரை­யும் குற்­றம் சொல்ல முய­ல­வில்லை. நான் செய்த தவ­று­க­ளில் இருந்து பாடங்­கள் கற்று, தவ­று­களை திருத்­திக் கொள்ள முயல்­வேன். இது என் கிரிக்­கெட் வாழ்க்­கை­யில் தொடர்ந்து கொண்டே இருக்­கும். தொடக்­கத்­தில் நான் தவறு செய்­தி­ருந்­தா­லும், கடந்த தொட­ரு­டன் ஒப்­பி­டும்­போது, இப்­போது நான் முற்­றி­லும் மாறு­பட்­ட­வ­னாக உணர்­கி­றேன். பாரம்­ப­ரி­ய­மான கிரிக்­கெட்டை பின்­பற்­றும் ஆள் இல்லை. கிரிக்­கெட்­டில் எனக்­கென ஒரு புதுப்­பா­ணியை பின்­பற்­றிக் கொண்­டி­ருக்­கி­றேன்’’னு சொல்­லி­யி­ருக்­கி­றார்.

பக­லி­ரவு டெஸ்ட்?

‘‘பக­லி­ரவு டெஸ்ட் போட்­டி­யைக் காண்­ப­தற்கு அதி­க­ளவு ரசி­கர்­கள் வரு­வார்­கள். 3 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நடை­பெற்ற அடி­லெய்ட் நக­ரில் நடை­பெற்ற பக­லி­ர­வு­டெஸ்ட் போட்­டி­க­ளைக் காண்­ப­தற்­காக 47 ஆயி­ரம் முதல் அதி­க­பட்­ச­மாக 55 ஆயி­ரம் ரசி­கர்­கள் வரை வருகை தந்­த­னர். இப்­போ­தைய போட்­டி­யில் 24 ஆயி­ரம் ரசி­கர்­களே வந்­துள்­ள­னர். எனவே, இந்­தத் தொட­ரின் ஒரு போட்­டியை பக­லி­ரவு போட்­டி­யாக நடத்­து­வ­தற்கு இந்­தியா நட­வ­டிக்கை எடுத்­தால் சிறப்­பாக இருக்­கும்’’ என்­கி­றார் ஆஸ்­தி­ரேலிய கிரிக்­கெட் போர்டு தலை­வர் கெவின் ராபர்ட்.