சென்செக்ஸ் 572 புள்ளி சரிவு; நிப்டி 181 புள்ளி வீழ்ச்சி

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 19:12

மும்பை,

   கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியப் பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்து.

சீனாவின் பிரபலாமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வேன்ஜூ கடந்த டிசம்பர் 1ம் தேதி கனடாவில் கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இவர் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி செயல்பட்டார்  என்று மெங் வேன்ஜூ மீது குற்றம்சாட்டு எழுந்தது.

இதனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரோலியாக உலக வர்த்தகம் தற்பொழுது சரிவை சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் நாணய மாற்று இன்றும் பலவீனமான நிலையில் இருப்பதும் பங்குச்சந்தை சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இதன் எதிரொலியாக இன்றைய இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. வர்த்தக இறுதியிலும் சென்செக்ஸ் சரிவடைந்தது. இந்நிலையில் சென்செக்ஸ் இன்று 572.28 புள்ளிகளை இழந்தது. 35,312.13. புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி181.75 புள்ளிகள் சரிந்து 10,601.15. புள்ளிகளில் உள்ளது.

மாருதி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயின்ட்ஸ், ஓஎன்ஜிசி, எச்.யூ.எல், கோடக் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4.63 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

சன் பார்மா நிறுவனம் இன்று 1.57  சதவீத பங்குகள் அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (06-12-2018) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 54 காசுகள் சரிந்து ரூ.71 ரூபாயாக இருந்தது.

இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.90 காசுகளாக நிலைபெற்றது.

நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.46 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.