தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 16:32

சென்னை,

   தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.