‘ஜன்தன்’ கணக்குகளுக்கு யார் வரி கட்டுவது? – க. சந்தானம்

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2018

பிர­தம மந்­தி­ரி­யின் ஜன்­தன், ஜீரோ பேலன்ஸ் இல­வச வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சேவை­க­ளுக்கு ஜிஎஸ்டி செலுத்­தும்­படி வரு­வாய்­துறை வங்­கி­களை வலி­யு­றுத்­து­கி­றது. ஜன்­தன் கணக்­கு­கள் எல்­லாம் இல­வ­சக்­க­ணக்­கு­கள். கணக்கு வைத்­தி­ருப்­போர் வங்­கிக்கு கட்­ட­ணம் செலுத்­து­வ­தில்லை. நாங்­கள் சேவை வரி வசூ­லிப்­ப­தில்லை. அத­னால் நாங்­கள் சேவை வரி கட்­ட­மு­டி­யாது என்று வங்­கி­கள் ஒரே குர­லில் வரிச் செலுத்த மறுப்­புத் தெரி­வித்து வரு­கின்­றன.

வங்­கி­கள் வரிக்­கட்ட மறுப்­ப­தேன் ? இது என்ன புதுப்­பி­ரச்­சினை?

இது ஒன்­றும் புதுப் பிரச்­சினை அல்ல.

கடந்த 2012ம் ஆண்டு ஏழை­க­ளுக்­கும், நடுத்­தர மக்­க­ளுக்­கும் வங்­கி­க­ளின் பயன் கிடைக்க வேண்­டும். பொது­மக்­க­ளுக்கு வங்­கி­களை பயன்­ப­டுத்­தும் பழக்­கம் வர­வேண்­டும். அதன் மூலம் பணத்தை சிக்­க­னப்­ப­டுத்த முன்­வ­ரு­வார்­கள் என மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் கரு­தின. அத­னால் ‘ஜீரோ பாலன்ஸ் சேமிப்பு கணக்கு’ அல்­லது ‘நோ ஃபிரில் அக்­க­வுண்ட்ஸ்’ என்ற பெய­ரில் புதி­தாக சேமிப்பு கணக்­கு­களை துவக்க வர்த்­தக வங்­கி­கள் எல்­லா­வற்­றிக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இது­தான் இன்­றைய ஜன்­தன் கணக்­கு­க­ளுக்கு கொள்ளு தாத்தா என சொல்­ல­லாம்.

1969ம் ஆண்டு வங்­கி­களை தேசி­ய­ம­ய­மாக்க அன்­றைய பிர­த­மர் இந்­திரா காந்தி உத்­த­ர­விட்­டார். அப்­போது வங்­கி­களை தேசிய மய­மாக்­கு­வ­தற்கு முக்­கி­ய­மாக தெரி­விக்­கப்­பட்ட கார­ணங்­க­ளில் ஒன்று ஏழை­க­ளுக்கு வங்­கி­க­ளின் சேவை கிடைக்க வேண்­டும். இப்­போது எல்லா வங்­கி­க­ளும் லாப நஷ்ட கணக்கு பார்க்­கின்­றன. அத­னால் வங்­கி­கள் பக்­கம் பொது­மக்­கள் வரு­வ­தில்லை. இந்த நிலையை மாற்ற வங்­கி­களை தேசி­ய­ம­ய­மாக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டது.

எனவே 1969ல் இருந்து வங்­கி­களை பொது­மக்­க­ளுக்­காக திறந்­து­விட வேண்­டும் என்ற கருத்து நிலவி வரு­கி­றது.  2005ல் துவக்­கப்­பட்ட இந்த ஜீரோ பாலன்ஸ் அக்­க­வுண்­டு­க­ளின் பெயர் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ‘அடிப்­படை சேமிப்பு வங்கி டெபா­சிட் அக்­க­வுண்ட்’ என்று பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டது.

காசோ­லை­கள் வழங்­கு­தல் வாங்­கு­தல் ஏடி­எம் கார்­டு­கள் இவை­கள் தான் இந்த கணக்­கு­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டன. ஆனால் ஒரு மாதத்­தில் 4 முறை மட்­டுமே பணம் எடுக்க முடி­யும். இந்த 4 முறையை தாண்­டி­விட்­டால் இது இல­வச சேமிப்பு கணக்­காக இருக்­காது. வழக்­க­மான சேமிப்பு கணக்­காக மாறி­வி­டும். அத்­தோடு அந்த இல­வச கணக்­கின் சேமிப்பு தொகை ரூ.50,000ம் எட்­டி­னா­லும் அந்த கணக்கு இல­வச சேமிப்பு கணக்­கில் இருந்து கட்­ட­ணம் செலுத்­தும் சேமிப்பு கணக்­காக மாற்­ற­ம­டை­யும். இல­வச சேமிப்பு கணக்­கு­களை பரா­ம­ரிக்க முடி­யாத வங்­கி­கள் எல்­லாம் கொக்கு மாதிரி காத்­து­கொண்­டி­ருந்­தன. இந்த இல­வச சேமிப்பு கணக்­கின் நிலை கட்­ட­ணம் செலுத்­தும் சேமிப்பு கணக்­கு­க­ளாக மாற்றி வந்­தன.

இந்த இல­வச சேமிப்பு கணக்­கு­களை துவக்­கு­வ­தற்கு ஒரு கணக்­குக்கு 80 ரூபாய் செலவு ஆகும் என்று அரசு கணக்கு போட்­டது. இல்லை இல்லை ஒரு கணக்கை துவக்க 140 செலவு ஆகி­றது.

இந்த கணக்­கு­களை துவக்­கு­வ­தற்­கும் பரா­ம­ரிப்­ப­தற்­கும் ஆண்­டுக்கு 2000 கோடி ரூபாய் செல­வா­கி­றது என்று இந்­திய வங்­கி­கள் சங்­கத்­தின் தலை­வர் 2015ம் ஆண்­டில் கணக்கு போட்டு கூறி­னார். இந்த நிலை நீடித்­தால் வங்­கி­கள் எல்­லாம் தவிக்­கும் நிலை ஏற்­ப­டும் என்று அவர் எச்­ச­ரித்­தார். 2015ம் ஆண்டு ஜன­வரி மாதம் 30ம் தேதி நில­வ­ரப்­படி 12.4 கோடி இல­வச சேமிப்பு கணக்­கு­கள் வங்­கி­க­ளில் இருந்­தன.

பாஜக அரசு ஆட்சி பொறுப்­பிற்கு வந்த பிறகு ௨௨.௮.௨௦­௧­௪ல் ‘ஜன்­தன்’ அக்­க­வுண்­டு­களை துவக்க முடிவு செய்­த­னர். காங்­கி­ரஸ் ஆட்சி காலத்­தில் இல­வச சேமிப்பு கணக்­கு­க­ளுக்கு வங்­கி­களே பேர் வைக்­கட்­டும் என விட்­டு­விட்­டார்­கள். அத­னால் வாயில் நுழை­யாத நீள­மான பெயர்­கள் அப்­போது வைக்­கப்­பட்­டன.

மோடி எல்­லோ­ருக்­கும் புரி­யட்­டும் என குடி­ய­ரசு தினத்­தன்று ராணு­வம் அணி­வ­குத்து செல்­லும் போது இரட்டை தாளம் லெப்–­ரைட் என்று திரும்ப திரும்ப கேட்­பது போல ஜன்­தன் என்று பாஜக அரசு பெயர் வைத்­தது.

இது முன்­னாள் மத்­திய நிதி அமைச்­சர் சிதம்­ப­ரம் செய்த நையாண்டி. இந்த கணக்­கு­க­ளின் எண்­ணிக்­கையை பார்த்­தால் ஜன்­தன் ஒரு பெரிய வெற்றி திட்­டம் என்று பார­திய ஜனதா உரிமை கொண்­டா­டு­வது நியா­யம் தானா என்று புரி­யும். 2005ல் இருந்து 2010ம் ஆண்­டுக்­குள் 7.35 கோடி இல­வச சேமிப்பு கணக்­கு­கள் துவக்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் அதா­வது 2014–15ல் இரு­ம­டங்­கா­கி­விட்­டது. அப்­போது 15.1 கோடி இருந்­தன. ஒவ்­வொரு ஆண்­டும் புதி­தாக துவக்­கப்­ப­டும் கணக்­கு­களை சேர்த்து கூட்­டிக்­கொண்டே வந்­தால் 2017–-18ல் 25.13 கோடி கணக்­கு­கள் இருந்­தன. இப்­போது 33 கோடி ஜன்­தன் கணக்­கு­களை ஆரம்­பித்­தி­ருப்­ப­தா­க­வும் அவற்­றில் ரூ. 84 கோடிக்­கும் மேல் பணம் இருப்­ப­தா­க­வும் பார­திய ஜனதா அரசு பெருமை அடித்து கொள்­கி­றது. இது வளர்ச்­சியா அல்­லது வீக்­கமா என்­பது தெரி­ய­வில்லை. 500 ரூபாய் நோட்­டும் 1000 ரூபாய் நோட்­டும் செல்­லாது என்று மோடி அறி­வித்த பிறகு, யூனை­டெட் பாங் ஆப் இந்­தி­யா­வின் ஒரே ஒரு ஜன் தன் அக்­க­வுண்­டில் செலுத்­தப்­பட்ட பணத்­தின் அளவு ரூ. 93.8 கோடி.

மோடி­யும், அருண் ஜெட்­லி­யும் கையை பிடித்து பாங்­கிற்கு இழுத்து கொண்டு வந்து இல­வச கணக்கு ஆரம்­பித்து வைத்த ஆசாமி, 1000 ரூபாய் நோட்டு செல்­லாது என அறி­வித்­த­தும் ரூ. 93 கோடியை வங்கி கணக்­கில் கட்­டு­கி­றார். அந்த ஆசா­மிக்கு இல­வச கணக்கு ஆரம்­பித்து கொடுத்த்து தவறு தானே?

இந்த சம­யத்­தில் ரூபாய் நோட்டு செல்­லாது என அறி­வித்­ததே பல­ரின் கருப்பு பணத்தை வெள்­ளை­யாக வெளியே கொண்டு வரு­வ­தற்­குத் தான் என்று கூறப்­பட்­டது, உங்­க­ளுக்கு நினைப்பு வந்­தால் அதற்கு நான் பொறுப்­பல்ல.

இப்­ப­டிப்­பட்ட இல­வச சேமிப்பு கணக்­கு­க­ளுக்­கும் சேவை வரி கட்ட வேண்­டும் என்று வங்­கி­களை வரு­வாய் துறை கேட்­ப­தில் என்ன தவறு இருக்க முடி­யும்?

இந்­தப் பிரச்­சனை வங்­கி­கள் நிலை­யில் வரு­வாய் துறை, நிதி அமைச்­ச­கத்­தின் நிதி சேவைப் பிரிவு அதி­கா­ரி­கள் அள­வில் பல­முறை விவா­திக்­கப்­பட்­டது. ஆனால் தீர்வை எட்ட முடி­ய­வில்லை. வரு­வாய்­துறை 2012ல் ஜீரோ பேலன்ஸ் வங்­கிக் கணக்­கு­கள் அனு­ம­திக்­கப்­பட்ட நாளில் இருந்து 2017ம் ஆண்டு வரை சேவை வரி, அந்த வரியை உரிய நிதி ஆண்­டு­க­ளில் செலுத்­தா­தற்கு அப­ரா­தம், அப­ரா­தத்தை உரிய காலத்­தில் செலுத்­தாத கார­ணத்­தால் அதற்கு அப­ராத வட்டி என மொத்­தம் ரூ. 40,000 கோடி வங்­கி­கள் செலுத்­தக் கோரு­கி­றார்­கள்.

இந்த சேவை வரி, அப­ரா­தம், அப­ராத வட்டி ஆகி­யவை பார­திய ஜனதா கட்சி ஆட்­சிக்கு வந்த பிறகு அறி­விக்­கப்­பட்ட ஜன் தன் அக்­க­வுண்­டு­க­ளுக்­கும் பொருந்­தும் என்று வரு­வாய்­துறை கூறு­கி­றது.

ஜன் தன் கணக்­கு­கள், இல­வ­சக் கணக்­கு­கள் அதற்கு வரி செலுத்த வேண்­டு­மா­னால் ஒன்று நிதித்­துறை செலுத்த வேண்­டும், இல்­லை­யெ­னில் கணக்கு வைத்­தி­ருப்­போர் செலுத்த வேண்­டும். ஜன்­தன் கணக்­கு­க­ளுக்கு வங்கி வழங்­கு­கின்ற பல சேவை­க­ளுக்கு கட்­ட­ணம் வசூ­லிப்­ப­தில்லை. இப்­பொ­ழுது வரி­யை­யும் நீதான் செலுத்த வேண்­டும் என்­றால் வங்­கி­கள் இன்­றுள்ள பொரு­ளா­தர நிலை­யில் சாத்­தி­ய­மில்லை. வரி செலுத்த வேண்­டும் என்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டால் கணக்கு வைத்­தி­ருப்­போ­ரி­டம் வசூ­லிப்­ப­தைத் தவிர வேறு வழி இல்லை என்று வங்­கி­கள் உறு­தி­யா­கக் கூறி­விட்­டன.

இதற்கு தீர்­வு­கான பிரச்­சினை இப்­பொ­ழுது பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இந்­தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்­டும். ஒத்­தி­வைப்­ப­தில் அர்த்­த­மில்லை என்று இரண்டு தரப்­பி­ன­ரும் கோரு­கின்­ற­னர். அத­னால் கூடிய விரை­வில் இந்­தப் பிரச்­சி­னைக்­குள் தீர்­வு­காண வங்­கி­கள், வரு­வாய்­துறை, நிதி சேவைத்­துறை ஆகி­ய­வை­க­ளின் பிர­தி­நி­தி­கள் கூட்­டம் ஒன்றை பிர­த­ம­ரின் அலு­வ­ல­கம் கூட்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மக்­களை வங்கி கணக்­கு­கள் மூல­மாக பணத்­தைக் கையா­ளப் பழக்­கும் நோக்­கத்­து­டன் ஜன் தன் கணக்­கு­கள் துவங்­கப்­பட்­டன. இந்த ஜன் தன் கணக்­கு­க­ளுக்­கான சேவை­களை இல­வ­ச­மாக வங்­கி­கள் வழங்­கு­கின்­றன. இல­வச சேவைக்கு வரி செலுத்­தும்­படி கேட்­டால் பய­னா­ளி­க­ளான பொது­மக்­கள் செலுத்­து­வதே முறை­யாக அமை­யும் என பெயர் கூற விரும்­பாத தணிக்­கை­யா­ளர் ஒரு­வர் கருத்து தெரி­வித்­தார்.

குறுந்­தொ­ழில்­கள், கிராம தொழில்­கள் வளர்ச்சி பெற்ற பிறகு அவற்றை சிறு தொழில்­கள் என்­றும் நடுத்­தர தொழில்­கள் என்­றும் பெயர் மாற்றி அவற்­றிக்கு உரிய சலு­கை­களை குறைக்க வேண்­டும் என்று காங்­கி­ரஸ் அர­சும் வலி­யு­றுத்தி வந்­தது. பாஜக அர­சும் வலி­யு­றுத்தி வரு­கி­றது. ஆனால் இந்த இல­வச சேமிப்பு கணக்­கு­க­ளின் தரம் உய­ரும்­போது கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்­க­ளி­டம் இருந்து வரி வசூ­லிக்க வேண்­டும் என்று நமது நிதி ஆயோக் நிபு­ணர்­க­ளுக்­கும், நிதி அமைச்­சர் அருண் ஜெட்­லிக்­கும் ஏன் தோன்­ற­வில்லை. ஏழை­கள் மீது என்­றும் மாறா பாசம் என்று சொல்­ல­லாமா ?