நட்பும், தோழமையும் கூட்டணி ஆகுமா?

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2018

திமுக பொரு­ளா­ளர் துரை­மு­ரு­கன் மதி­முக, விடு­த­லைச் சிறுத்­தை­கள் குறித்து தெரி­வித்த கருத்­துக்­கள் இப்­போது தமி­ழக அர­சி­யல் களத்­தி­லும், ஊட­கங்­க­ளி­லும் விவா­தப் பொருள் ஆகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

மதி­முக பொதுச் செய­லா­ளர் வைகோ கடந்த 10 மாதங்­க­ளுக்கு முன்­பாக திமுக அணி­யில் தம்மை இணைத்­துக் கொண்டு, ‘திமுக தலை­வர் ஸ்டாலினை முதல்­வர் ஆக்­கு­வதே என் லட்­சி­யம்’ என்று சூளு­ரைத்து செயல்­பட்டு வரு­கி­றார். அப்­போது முதல் திமுக நடத்­தும் போராட்­டங்­கள், ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு மதி­முக ஆத­ர­வ­ளிப்­ப­தும், மதி­மு­க­வின் செயல்­பா­டு­க­ளுக்கு திமுக துணை நிற்­ப­து­மான நிலை தொடர்ந்து வரு­கி­றது அர­சி­யல், பொது வெளி­க­ளில் இரு கட்­சி­யி­ன­ரும் பரஸ்­ப­ரம் இணக்­கத்­தோடு கை கோர்த்து செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

அதே போல, கடந்த 2014 நாடா­ளு­மன்ற பொதுத்­தேர்­த­லில் திமுக அணி­யில் இருந்து தேர்­தல் கூட்­ட­ணி­யி­லும் இடம்­பெற்று இரண்டு இடங்­களை பெற்று போட்­டி­யிட்ட திரு­மா­வ­ள­வ­னின் விடு­தலை சிறுத்­தை­கள் கட்சி, 2016 சட்­ட­மன்ற பொதுத் தேர்­த­லின் போது விலகி நின்­றா­லும், கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக திமுக அணி­யில் இடம் பெற்று செய­லாற்றி வரு­கி­றது.

மத்­தி­யி­லுள்ள பா.ஜ. தலை­மை­யி­லான அர­சை­யும், மாநி­லத்­தி­லுள்ள அதி­முக அர­சை­யும் வீழ்த்­து­வ­தற்கு திமுக தலை­மை­யில் வலு­வான கூட்­ட­ணியை உரு­வாக்க வேண்­டும் என்ற எண்­ணத்­தில்­தான், வைகோ­வும், திரு­மா­வ­ள­வ­னும் செயல்­பட்டு வரு­கின்­ற­னர். எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்ற தேர்­த­லா­னா­லும், சட்­ட­மன்ற பொதுத்­தேர்­தல் ஆனா­லும், உள்­ளாட்­சித் தேர்­தல் ஆனா­லும் சரி, எல்லா தேர்­தல்­க­ளி­லும் திமுக கூட்­ட­ணி­யில் இடம் பெறு­வது என்ற உறு­திப்பாட்­டு­டோ­டு­தான் இந்த இரு கட்­சி­க­ளும் செயல்­பட்டு வரு­கின்­றன. கட்­சி­யின் நிர்­வா­கி­கள் மற்­றும் தொண்­டர்­க­ளும் அந்த மன­நி­லை­யில்­தான் உள்­ள­னர்.

இந்த சூழ்­நி­லை­யில், திமுக பொரு­ளா­ள­ரும், மிக மூத்த அர­சி­யல் வாதி­யு­மான துரை­மு­ரு­கன் வெளி­யிட்ட கருத்து, மதி­முக, விடு­த­லைச் சிறுத்­தை­கள் ஆகிய இரு கட்­சி­க­ளை­யும் தாண்டி, அர­சி­யல் பொது வெளி­யி­லும் ஒரு­வித அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

‘மதி­மு­க­வும், விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யும் இப்­போ­தைக்கு எங்­கள் கூட்­ட­ணி­யில் இல்லை. நட்­பு­ற­வு­டன் கூடிய தோழ­மைக் கட்­சி­க­ளாக இருக்­கி­றார்­கள் கூட்­டணி என்­பது  தேர்­தல் நேரத்­தில்­தான் முடி­வா­கும்’’ என்று துரை­மு­ரு­கன் கூறி­யுள்­ளார். அது­மட்­டு­மல்ல, கூட்­டணி பேச்­சு­வார்த்­தை­கள் தொடங்­கும் போது இது­வரை எங்­க­ளு­டன் இருந்­த­வர்­கள் வெளி­யே­ற­லாம், இப்­போ­து­வரை எங்­களை எதிர்த்து நிற்­ப­வர்­கள் கூட்­ட­ணி­யில் இடம்­பெ­ற­லாம் என்ற கருத்­தை­யும் துரை­மு­ரு­கன் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இது குறித்து பேசிய வைகோ, மிகுந்த மன வேத­னை­யில் இருப்­ப­தாக  கூறி­யுள்­ளார். திமுக தலை­வர் ஸ்டாலின்­தான் இதற்கு விளக்­கம் அளிக்க வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் – கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஸ்டாலினை சந்­தித்த திரு­மா­வ­ள­வன்,  திமு­க­வோடு நட்பு ரீதி­யில் இருந்­தா­லும், நிச்­ச­யம் கூட்­ட­ணி­யில் இடம் பெறு­வோம் என நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார். சென்ற புத­னன்று ஸ்டாலி­னைச் சந்­தித்த வைகோ, டிசம்­பர் ௩ம் தேதி தாங்­கள் நடத்த இருக்­கும் ஆர்ப்­பாட்­டத்­திற்கு திமுக ஆத­ரவு அளித்து இருப்­பதே, சந்­தே­கத்­திற்­கான விளக்­கம் என்று கூறி­யுள்­ளார். ஆனால் திரு­மா­வ­ள­வ­னின் நம்­பிக்­கைக்கு வலு சேர்க்­கும் வகை­யிலோ, வைகோ­வின் சந்­தே­கத்­தைப் போக்­கும் வகை­யிலோ, இது­வரை ஸ்டாலின் எந்த கருத்­தை­யும் தெரி­விக்­க­வில்லை.

இந்­திய அள­வில், இப்­போது மாநி­லக்­கட்­சி­க­ளின் ஆதிக்­கம்­தான் மேலோங்கி உள்­ளது. அத­னால்­தான் நாடா­ளு­மன்ற பொதுத்­தேர்­த­லுக்­கான வலு­வான கூட்­ட­ணியை, பா.ஜ.வுக்கு எதி­ராக கட்­ட­மைத்­திட மம்தா பானர்ஜி, சந்­தி­ர­பாபு நாயுடு உள்­ளிட்ட மாநி­லத் தலை­வர்­கள் முன் முயற்சி எடுத்து வரு­கின்­ற­னர்.

தமிழ்­நாட்­டில் அத்­த­கைய கூட்­ட­ணிக்கு திமு­க­தான் தலைமை வகிக்­கும். திமு­க­வின் தலைமை பொறுப்பை ஏற்­ற­ பி­றகு, ஸ்டாலின் சந்­திக்­கும் முதல் பொதுத்­தேர்­தல் என்­பது எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்ற தேர்­தல்­தான். இதில் பெரிய அள­வில் வெற்றி பெற்று, தமி­ழ­கத்­தின் முன்­ன­ணிக் கட்சி திமு­க­தான் என்­பதை நிரூ­பித்­த­தாக வேண்­டும்.

தவி­ர­வும், திமுக அதிக இடங்­க­ளில் போட்­டி­யிட்டு, நிறைய எம்.பி.க்களு­டன் டில்லி சென்­றால், ஒரு வேளை அங்கு ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு கூட்­டணி ஆட்சி ஏற்­ப­டும் போது முக்­கிய இலா­காக்­களை பெற­லாம்.   துணை பிர­த­மர் பொறுப்­புக்கு கூட வலி­யு­றுத்­த­லாம். எனவே, ஓர­ளவு வாக்கு வங்கி உள்ள கட்­சி­க­ளு­டன் தேர்­தல் கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்த திமுக விரும்­பு­கி­றது என்ற தக­வலை திமு­க­வின் முக்­கிய நிர்­வா­கி­களே தெரி­விக்­கின்­ற­னர்.

கடந்த 2014 தேர்­த­லின் போது ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான அதி­முக 39 தொகு­தி­க­ளில் தனித்­துப் போட்­டி­யிட்டு 37 இடங்­க­ளில் வெற்றி பெற்று, நாடா­ளு­ மன்­றத்­தில் 3வது பெரிய கட்­சி­யா­னது.

அதே போல 2016 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் 234 தொகு­தி­க­ளி­லும் ‘இரட்டை இலை’யை களம் இறக்கி 100 தொகு­தி­க­ளில் தோற்­றா­லும் 134 இடங்­க­ளில் வெற்றி பெற்று, திமு­க­வின் ஆட்சி மாற்­றக் கனவை அடித்து நொறுக்கி, ஆட்­சிக் கட்­சியே மீண்­டும் ஆளும் கட்சி என்ற சாத­னையை அதி­முக படைத்­தது. அதே அணு­கு­மு­றையை திமுக கடைப்­பி­டிக்க விரும்­பு­வ­தாக அக்­கட்­சி­யி­னர் கூறு­கின்­ற­னர். அத­னால்­தான், மிக குறைந்த வாக்கு வங்கி உள்ள கட்­சி­களை வெளி­யேற்­றும் எண்­ணத்­து­டன்­தான் திமுக பொரு­ளா­ளர் இந்த கருத்தை வெளி­ப­டுத்­தி­யுள்­ளார். கட்­சி­யின் தலை­வர் ஸ்டாலினை கலந்­தா­லோ­சிக்­கா­மல் இது­போன்ற கருத்தை அவர் தெரி­விக்க மாட்­டார் என்­றும் கூறு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் இது­வ­ரை­யி­லும் நட்­பாக, தோழ­மை­யாக உள்ள மதி­முக – வி.சி.க. போன்ற கட்­சி­கள் திமுக அமைக்­கும் தேர்­தல் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகிக்­குமா? அல்­லது கழட்டி விடப்­ப­டுமா? என்­பது புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.